இந்தியாவில் அமோக வரவேற்பு: 45 நாட்களில் 63 லட்ச ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை!

|

ரியல்மி நிறுவனம் இந்தியாவின் பண்டிகை தின விற்பனையில் மட்டும் 6.3 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி பிற ரியல்மி சாதனங்களின் விற்பனையும் பட்டையை கிளப்பியுள்ளது.

முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்று

முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்று

இந்தியாவில் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக திகழ்வது ரியல்மி நிறுவனம். ரியல்மி ரக ஸ்மார்ட்போன்களுக்கு என தனி வாடிக்கையாளர்கள் பட்டாளமே உள்ளது. அதேசமயத்தில் தற்போதைய காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் தேவையும் அதிகரித்துள்ளது.

ஸ்மார்ட்போன்கள் தேவை அதிகரிப்பு

ஸ்மார்ட்போன்கள் தேவை அதிகரிப்பு

தற்போதைய காலக்கட்டமானது வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் வகுப்பு என ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தாத பலருக்கும் ஸ்மார்ட்போன்கள் தேவையை உருவாக்கியுள்ளது. அதேசமயத்தில் இந்தியாவில் ஆன்லைன் நிறுவனங்களும் சலுகையோடு கூடிய பண்டிகை கால விற்பனையை தொடங்கியது.

ரியல்மி சாதனங்களுக்கு தள்ளுபடி

ரியல்மி சாதனங்களுக்கு தள்ளுபடி

பிரபல ஆன்லைன் விற்பனை தளங்களான அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போட்டிப்போட்டுக்கொண்டு சலுகைகளை அறிவித்து பண்டிகை கால விற்பனையை நடத்தியது. இதில் லட்சக்கணக்கான சாதனங்கள் தள்ளுபடி விலையில் கிடைத்தது. இந்த காலக்கட்டத்தில் விற்பனையான ரியல்மி சாதனங்கள் குறித்து தகவல்களை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உஷார் மக்களே: பேராசை பெரு நஷ்டம்., தொடரும் மோசடி சம்பவம் உங்களுக்கு இந்த அழைப்பு வந்துள்ளதா?

63 லட்ச ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை

63 லட்ச ரியல்மி ஸ்மார்ட்போன்கள் விற்பனை

சீன நிறுவனமான ரியல்மி இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்டிவிகள், ஆடியோ சாதனங்கள் உள்ளிட்ட பலவற்றை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் பண்டிகை தின விற்பனையில் மட்டும் சுமார் 6.3 மில்லியன் அதாவது 63 லட்ச ரியல்மி ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் டுவிட்டர் பதிவு

இதுகுறித்த நிறுவனத்தின் டுவிட்டர் பதிவில், உலகில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவின் நம்பர் 1 தரமான பிராண்ட் தளமாக ரியல்மி உள்ளது. #realmeFestiveDays விற்பனையில் 6.3 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டைவிட 20% அதிகமாகும். வாடிக்கையாளர்களின் அன்பிற்கும் ஆதரவுக்கும் நன்றி, சிறந்த தொழில்நுட்ப தயாரிப்புகளை தொடர்ந்து வழங்குவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற ரியல்மி சாதனங்களும் அமோக விற்பனை

பிற ரியல்மி சாதனங்களும் அமோக விற்பனை

6.3 மில்லியனுக்கு அதிகமான ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி பிற ரியல்மி சாதனங்களின் விற்பனையும் பட்டையை கிளப்பியுள்ளது. அதன்படி 1 லட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரியல்மி ஸ்மார்ட் டிவிகள், 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமான அணியக்கூடிய ஸ்மார்ட் சாதனங்கள், 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமான ஆடியோ சாதனங்கள் இந்த பண்டிகை தின விற்பனையில் மட்டும் விற்கப்பட்டுள்ளது.

நான்காவது பெரிய பிராண்டாக ரியல்மி

ரியல்மி இந்தியாவில் நான்காவது பெரிய பிராண்டாக உருவெடுத்துள்ளது. இதுகுறித்து கவுண்டர் பாயிண்ட் ரிசர்ச் தகவலின்படி மூன்றாம் காலாண்டில் சாம்சங் முதலிடத்திலும். சியோமி இரண்டாவது இடத்திலும், விவோ மூன்றாவது இடத்திலும், ரியல்மி நான்காவது இடத்திலும் உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Sold More than 6.3 Million Smartphone During FestiveDays in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X