இந்த எல்லா ரியல்மி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் குட் நியூஸ்: அப்டேட் மூலம் கிடைக்கும் மெய்நிகர் ரேம் அம்சம்!
விவோ, ஒப்போ உள்ளிட்ட பிற பிராண்ட் ஸ்மார்ட்போன்கள் மெய்நிகர் ரேம் கொண்ட சாதனங்களை வழங்குகின்றன. அதீத மல்டி டாஸ்க் அனுபவத்திற்கு உள்சேமிப்பின் ஒரு பகுதியாக பயன்படுத்தும் அம்சம் இதுவாகும். தற்போது அப்டேட்டின் ஒருபகுதியாகவும் இந்த அம்சம் வழங்கப்பட்டு வருகிறது.

ஓடிஏ அப்டேட்
இந்த அம்சம் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில் ஓடிஏ அப்டேட் மூலமாகவும் இந்த பயன்பாட்டை பெறலாம். ரியல்மி நிறுவனம் மெய்நிகர் ரேம் பயன்பாட்டை இதே முறையில் வழங்கி வருகிறது. புதுப்பிப்பு மூலம் இந்த அம்சம் வெளிப்படையாக செயல்படுத்தலாம். ரியல்மி நிறுவனம் முன்னதாகவே ரியல்மி 8 சாதனத்துக்கு இதுபோன்ற மேம்படுத்தலை வெளியிட்டது. இதை ரியல்மி நிறுவனம் டைனமிக் ரேம் எனவும் குறிப்பிடுகிறது. வரும் நாட்களில் மென்பொருள் புதுப்பிப்பு மூலம் டைனமிக் ரேம் அம்சம் பெறும் ரியல்மி போன்களின் பட்டியலை ஆர்எம் அப்டேட் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த தொலைபேசிகள் எப்போது புதுப்பிப்பை பெறும் என நிறுவனம் குறிப்பிடவில்லை. மெய்நிகர் ரேம் அம்சம் பெறும் ரியல்மி சாதனங்களின் பட்டியலை பார்க்கலாம்.

ரியல்மி பட்டியல்
- Realme X7
- Realme X7 Pro
- Realme X7 Max
- Realme X50
- Realme X50 Pro
- Realme-X50m
- Realme X2 Pro
- Realme X2
- Realme XT
- Realme X3
- Realme X3 SuperZoom
- Realme 8 pro
- Realme 8 4G/5G
- Realme 7
- Realme 7i
- Realme 7 Pro
- Realme 6i
- Realme 6
- Realme 6 pro
- Realme 30
- Realme narzo 20
- Realme narzo 30 Pro
- Realme narzo 30
- Realme Q3
- Realme Q3 Pro
- Realme Q2
- Realme Q2 Pro
- Realme narzo V3
- Realme V5
- Realme V 15
- Realme GT
- Realme GT Neo
- Realme GT Flash version

பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை சென்சார்
அதேபோல் 91 மொபைல்ஸ் தளம் ரியல்மி நார்சோ 50ஏ சமீபத்தில் பிஐஎஸ் சான்றிதள் இணையதளத்தில் காணப்பட்டது. மேலும் சீனாவில் 4 என்பது துரதிர்ஷ்ட நம்பர் என கருதுவதால் ரியல்மி நார்சோ 40 தொடரை தவிர்ப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நார்சோ 50ஏ ரெண்டர்களை 91 மொபைல்ஸ் பிரத்யேகமாக வெளிப்படுத்தியது. இது நார்சோ 30ஏ இரட்டை தொனி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பெரிய கேமரா தொகுதி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மூன்று கேமராக்கள் இதில் இருக்கும் என கூறப்படுகிறது. பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை சென்சார் வசதியோடு இது வருகிறது.

விரிவாக்கம் டைனமிக் ரேம் அம்சம்
ரியல்மி எக்ஸ்7 மேக் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு வந்தது. தற்போது ரியல்மி விரிவாக்கம் டைனமிக் ரேம் அம்சத்தை ரியல்மி 8 சாதனத்துக்கான மேம்படுத்தலை வெளியிட்டுள்ளது. இந்த புதுப்பிப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக இது நிலையான வெளியீட்டைக் கொண்டிருக்கும் என ரியல்மி குறிப்பிட்டுள்ளது. புதுப்பிப்பு இன்று குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பயனர்களுக்கு தோராயமாக கிடைக்கும். முக்கியமான பிழைகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட உடன் அனைவருக்கும் இது கிடைக்கும் என கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பு
புதுப்பிப்பு பதிப்பு எண் RMX3085_11.A.19 உடன் வருகிறது. இது கணினி செயல்திறன் மேம்பாடு, கணினி நிலைத்தன்மையை மேம்படுத்துக்கிறது. புதுப்பிப்பு ஜூலை 2021 ஆண்ட்ராய்டு பாதுகாப்பு இணைப்பையும் ஒருங்கிணைக்கிறது. திரை பூட்டப்பட்ட நிலையில் இருக்கும் போதும் நீங்கள் திரையை சுழற்றினால் திரையில் ஒளிரும் என கூறப்படுகிறது.

அமைப்பு
ரேம் விரிவாக்க அம்சத்தை இணைக்கிறது
கணினி செயல்திறன் உகந்ததாக, கணினி நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.
திரை பூட்டப்பட்ட நிலையில் இருக்கும் போதும் நீங்கள் திரையை சுழற்றினால் திரையில் ஒளிரும் சிக்கல் சரி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications