உடனே முந்துங்கள்., இதுதான் சரியான நேரம்: ரியல்மி ஸ்மார்ட் டிவி., பக்கா பட்ஜெட் விலை!

|

ரியல்மி எக்ஸ் 3, ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்களோடு ரியல்மி ஸ்மார்ட் டிவி பக்கா பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவிகளானது இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ரியல்மி எக்ஸ் 3, ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம்

ரியல்மி எக்ஸ் 3, ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம்

ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி எக்ஸ் 3, ரியல்மி எக்ஸ் 3 சூப்பர்ஜூம் ஸ்மார்ட்போன்கள் விற்பனையோடு ரியல்மி தனது ஸ்மார்ட் டிவி மாடலான ரியல்மி டிவியை அறிமுகம் செய்தது. இந்த விற்பனையானது ரியல்மி இந்தியா தளம் மற்றும் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு வந்திருக்கிறது.

ரியல்மி இந்தியா தளம்

ரியல்மி இந்தியா தளம்

ரியல்மி இந்தியா தளம் இந்த விற்பனையை எக்ஸ்சேன்ஜ் சலுகையோடு அறிவித்துள்ளது. இந்த சலுகையை விரும்பும் வாடிக்கையாளர்கள் எக்ஸ்சேன்ஜ் ஆஃபர்களை பயன்படுத்தலாம்.

32 இன்ச் ஸ்மார்ட் டிவி

32 இன்ச் ஸ்மார்ட் டிவி

ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 32 இன்ச் ஸ்மார்ட் டிவியானது ரூ.12,999-க்கு கிடைக்கிறது. அதுமட்டுமின்றி இந்த ஸ்மார்ட்டிவி 43 இன்ச் வேரியண்டிலும் அறிமுகம் செய்கிறது, இது ரூ.21,999-க்கு விற்பனைக்கு கிடைக்கிறது.

இது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள்.! உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.!இது புதிய லிஸ்ட்: மீண்டும் 25ஆப்களை தடை செய்தது கூகுள்.! உடனே டெலிட் செய்யுங்கள்.,இதோ முழுவிவரம்.!

கூடுதலாக ஒரு வருட உத்தரவாதம்

கூடுதலாக ஒரு வருட உத்தரவாதம்

புதிய ரியல்மி ஸ்மார்ட் டிவி ஒரு வருட காலம் உத்தரவாதமும், இந்த ஸ்மார்ட் டிவி பேனலுக்கு கூடுதலாக ஒரு வருட உத்தரவாதமும் இருக்கிறது. ரியல்மியின் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனையானது 32 இன்ச் 1366x768 பிக்சல்கள் எச்டி ரெடி ரெசல்யூஷன், 1920x1080 பிக்சல்கள் முழு எச்டி ரெசல்யூஷன் உடன் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு டிவி 9 பை ஆதரவு

ஆண்ட்ராய்டு டிவி 9 பை ஆதரவு

இந்த இரண்டு ஸ்மார்ட் டிவிகளும் ஒரே சிறப்பம்சங்களை கொண்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு டிவி 9 பை ஆதரவோடு கூகுள் ப்ளே ஸ்டோர் அணுகலையும் ஆதரிக்கிறது. ஹெச்டிஆர் 10 அணுகல், 1 ஜிபி ரேம் பவர் அம்சத்தோடு 8 ஜிபி இன்டர்னெல் ஸ்டோரேஜ் வசதியும் கிடைக்கிறது.

24 வாட்ஸ்  ஸ்பீக்கர்

24 வாட்ஸ் ஸ்பீக்கர்

24 வாட்ஸ் ஸ்பீக்கர் ஆதரவு, டால்பை ஆடியோ ஆதரவு, ப்ளூடூத் 5.0 அணுகலையும் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவிகளுக்கு வாடிக்கையாளர்களிம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme smart tv sale start in india via flipkart and realme.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X