Home
News

பட்ஜெட் விலையில் இவ்வளவு ஸ்லிம் டிசைன் சாத்தியமா? வேற லெவலில் வரும் Narzo N-Series

இந்திய மார்க்கெட்டில் இதுவரை வெளியான ரியல்மீ (Realme) ஸ்மார்ட்போன்களிலேயே மிகவும் மெல்லிய டிசைனில் உருவாக்கப்பட்டுள்ள ரியல்மீ நார்சோ என் சீரிஸ் (Narzo N-Series) போன் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இதுதொடர்பான டீசர் வெளியாகி ரியல்மீ பிரியர்களை ஆர்வத்தின் உட்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

ஸ்மார்ட்போன் பிரியர்களில் பெரும்பாலானோருக்கு மிகவும் ஸ்லிம்மாக இருக்கும் போன்கள் மீதே அதிக ஆர்வம் இருக்கும். இப்போது உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களாக இருக்கக்கூடிய ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung) இரண்டும் ஆரம்பத்தில் வெளியிட்ட போன்களின் டிசைன் பெரும்பாலும் ஸ்லிம்மாகவே இருக்கும்.

 இவ்வளவு ஸ்லிம் டிசைன் சாத்தியமா? வேற லெவலில் வரும் Narzo N-Series

இதனாலேயே அதிகப்படியான மக்களை அந்த நிறுவனங்களால் கவர முடிந்தது. அந்த வகையில், ஒரு ஸ்மார்ட்போனுக்கு அதன் அம்சங்கள் எந்த அளவிற்கு முக்கியமோ அதேபோல டிசைனும் அவ்வளவு முக்கியமாகும். அதுவும் ஸ்லிம்மாக இருப்பது பெரும்பாலானோருக்கு முதல் சாய்ஸாக இருக்கிறது என்றே சொல்லாம்.

இதனால் அனைத்து ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் ஸ்லிம் டிசைனில் தங்களது போன்களை களமிறக்கி வருகின்றன. இதில் ரியல்மீ நிறுவனம் மட்டும் விதிவிலக்கல்ல. இந்த நிறுவனத்தின் நார்சோ என் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், அந்த நிறுவன தயாரிப்பிலேயே மிகவும் ஸ்லிம் டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ரியல்மீ நார்சோ என்53 ( Realme Narzo N53) ஸ்மார்ட்போன் விரைவில் வெளியாக இருப்பதாகவும், இந்த ஸ்மார்ட்போனின் ஸ்லிம் டிசைன் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும் என்றும் ரியல்மீ நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் அட்டகாசமாக இருப்பதால், எப்போது வெளியாகும் என்று ஸ்லிம் போன் பிரியர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் காத்திருப்பை மேலும் சூடாக்கும்படி ரியல்மீ நிறுவனம், தங்களது நிறுவனத்தின் மிகவும் ஸ்லிம் போனாக ரியல்மீ நார்சோ என் சீரிஸ் இருக்கும் என்பதை குறிப்பிட்டு டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சீரிஸின் முதல் போனாக ரியல்மீ நார்சோ என்53 களமிறக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. ஆகவே, ரியல்மீ நார்சோ என்53 போனில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்ளுங்கள்.

ரியல்மீ நார்சோ என்53 அம்சங்கள்: இந்த போன் 6.72 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. அதில், 90Hz ரிப்ஃரெஷ் ரேட் கொண்டுள்ளது. ஆண்டிராய்டு 13 உடன் மீடியாடெக் ஹீலியோ ஜி88 (MediaTek Helio G88) சிப்செட் வருகிறது. 64 எம்பி மெயின் கேமரா - 2 எம்பி பிளாக் அண்ட் வைட் லென்ஸ் உடன் வருகிறது. செல்பீ கேமிராவை பொறுத்தவரையில் 8 எம்பியாக இருக்கிறது.

33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் 5000 எம்ஏஹெச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் என 2 வேரியண்டுகளில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஃபெதர் பிளாக் (Feather Black ) மற்றும் ஃபெதர் கோல்டு (Feather Gold ) ஆகிய 2 கலர்களில் வெளியாக இருக்கிறது. விலையை பொறுத்தவரையில் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Slimmest Smartphone Ever Narzo N-Series Smartphone Teased Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X