Realme CEO ஓபன்: இந்த தீபாவளி ரியல்மிக்கு சொந்தம், இப்பவே ரெடியா இருங்க!

|

Realme இந்த ஆண்டு இறுதியில் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த இருக்கிறது. ரியல்மி 10 சீரிஸ்களுடன் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. அதுதான் சந்தையில் ஏணைய 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்கிறதே ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போனில் மட்டும் என்ன ஸ்பெஷல் என்று பார்க்கலாம் வாங்க.

ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் 5ஜி ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன் சந்தையில் தற்போதே ஏணைய 5ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனைக்கு கிடைக்கிறது.

இந்த நிலையில் ரியல்மி நிறுவனம் தரப்பில் இந்தாண்டு இறுதியில் வெளியாகும் ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் 5ஜி ஸ்மார்ட்போனும் வெளியாக இருக்கிறது.

முன்னதாகவே சந்தையில் பல 5ஜி ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதால் இதன் சிறப்பம்சங்களை ஆராய்ந்து ரியல்மி நிறுவனம் மேம்பட்ட அம்சங்களோடு அதன் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகையையொட்டி அறிமுகம்

தீபாவளி பண்டிகையையொட்டி அறிமுகம்

Realme நிறுவனம் 2022 இன் இரண்டாம் பாதியில் புதிய 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

அதாவது ரியல்மி 10 சீரிஸ் உடன் 5ஜி ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

அக்டோபர் 2022 அதாவது தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்த ஸ்மார்ட்போன்கள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிதாக அறிமுகமாகும் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போனில் மேலும் கவனிக்கத்தக்க தன்மை ஒன்று இருக்கிறது.

ரியல்மி நிறுவனத்துக்கு என ஒரு தனித்துவ தன்மை

ரியல்மி நிறுவனத்துக்கு என ஒரு தனித்துவ தன்மை

ரியல்மி நிறுவனத்துக்கு என ஒரு தனித்துவ தன்மை இருக்கிறது. ரியல்மி ஸ்மார்ட்போன்கள் பொதுவாக கேமிங் பிரியர்களை மையமாக வைத்து இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

அதேபோல் பெரும்பாலான ரியல்மி ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் மேம்பட்ட அம்சங்களோடு தனித்துவ வடிவமைப்பில் வெளியாகும். அதன்படிதான் வரவிருக்கும் ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போனும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியான தகவலின்படி, புதிய ரியல்மி 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.10,000 முதல் ரூ.15,000 விலைப் பிரிவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

Realme India CEO மாதவ் ஷெத் பகிர்ந்த தகவல்

Realme India CEO மாதவ் ஷெத் பகிர்ந்த தகவல்

ரியல்மி இந்த ஆண்டு இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது.

இதில் ரியல்மி 10 சீரிஸ் மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் அடங்கும் என கூறப்படுகிறது. இந்த தகவலை Realme India CEO மாதவ் ஷெத் உறுதிப்படுத்தினார்.

GSM Arena தளத்துக்கு மாதவ் ஷெத் அளித்த பேட்டியல் இந்த தகவலை அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார். இதில் பல கூடுதல் தகவலை அவர் பகிர்ந்துக் கொண்டார்.

பக்கா பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்

பக்கா பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம் குறைந்தது நான்கு புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் என சிஇஓ மாதவ் ஷெத் கூறினார்.இதில் 5ஜி ஸ்மார்ட்போனும் அடங்கும்.

நிறுவனம் இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ரூ.10,000 - ரூ.15,000 விலைப் பிரிவில் புதிய 5ஜி போனை அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

"குறிப்பாக இந்தியாவில் 5ஜி அறிமுகத்திற்கு முன்னதாக 2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கூடுதல் அம்சங்களோடு இது அறிமுகமாகும்" என ரியல்மி சிஇஓ கூறினார்.

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில்

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில்

ரியல்மி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் 2-3 புதிய வேரியண்ட்களில் அறிமுகமாகும் என்பதை மாதவ் ஷெத் வெளிப்படுத்தினார்.

வரவிருக்கும் ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் பகிரப்படும் என குறிப்பிட்டார்.

ஒட்டு மொத்தமாக ரியல்மி நிறுவனம் தரப்பில் இந்த ஆண்டு இரண்டாம் பாதியில் ஒரு விருந்தே இருக்கிறது என உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

வரவேற்பு நிச்சயம்

வரவேற்பு நிச்சயம்

இதில் இரண்டு கவனிக்கத்தக்க விஷயம் இருக்கிறது. 5ஜி அறிமுகமாக இருக்கும் நேரத்தில் அதாவது 5ஜி பேச்சு தொடர்ச்சியாக அடிப்பட்டு கொண்டிருக்கும் போது இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது.

மற்றொன்று பண்டிகை தினமான தீபாவளியை முன்னிட்டு இந்த ஸ்மார்ட்போன் வெளியாக இருக்கிறது. எனவே இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு தானாக கிடைக்கும் என கணிக்கப்படுகிறது.

ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் என பல கேட்ஜெட்கள்

ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் என பல கேட்ஜெட்கள்

ரியல்மி நிறுவனம் சமீபத்தில் புதிய பிரிவு ஒன்றில் களமிங்கியது. அதாவது ஸ்மார்ட்போன், இயர்பட்ஸ் என பல கேட்ஜெட்களை அறிமுகம் செய்த ரியல்மி நிறுவனம் தற்போது மானிட்டர் பிரிவில் களமிறங்கி இருக்கிறது.

Realme நிறுவனம் இந்திய சந்தையில் முதல் மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் ரியல்மி ஃப்ளாட் மானிட்டர் ஆகும்.

இந்த மானிட்டரின் பெயர் குறிப்பிடுவது போன்று பிளாட் ஸ்க்ரீன் மானிட்டர் அம்சத்தைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இது முழு எச்டி தெளிவுத்திறன் மற்றும் உயர் புதுப்பிப்பு வீத ஆதரவைக் கொண்டுள்ளது.

மேம்பட்ட அம்சங்களோடு ஃப்ளாட் மானிட்டர்

மேம்பட்ட அம்சங்களோடு ஃப்ளாட் மானிட்டர்

Realme Flat Monitor இந்திய விலை குறித்து பார்க்கையில், இதன் விலை ரூ.18,999 ஆக இருக்கிறது.

இந்த மானிட்டர் ஆனது ஒற்றை பிளாக் வண்ண விருப்பத்தில் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே 23.8 இன்ச் LED அளவுடன் இருக்கிறது.

இதன் மேற்புற மூன்று பக்கங்களிலும் மெல்லிய பெசல்கள் இருக்கிறது. மேம்பட்ட அம்சங்களை ஃப்ளாட் மானிட்டர் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

இந்த மானிட்டர் முழு எச்டி (1920 x 1080 பிக்சல்கள்) தீர்மானத்துடன், 75 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷிங் ரேட் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.

ரியல்மி பேட் எக்ஸ் அறிமுகம்

ரியல்மி பேட் எக்ஸ் அறிமுகம்

அதேபோல் ரியல்மி சமீபத்தில் பேட் எக்ஸ் என்ற புதிய சாதனத்தை அறிமுகம் செய்தது. ரியல்மி நிறுவனத்தின் லேட்டஸ்ட் மற்றும் மூன்றாவது டேப்லெட் ஆன ரியல்மி பேட் எக்ஸ், ஸ்னாப்டிராகன் 695 SoC மூலம் இயக்கப்படுகிறது மற்றும் (முன்னரே குறிப்பிட்டபடி) இது 5G கனெக்ஷனை வழங்கும் Realme நிறுவனத்தின் முதல் டேப்லெட் ஆகும்.

புதிய பேட் எக்ஸ் விலை என்ன?

புதிய பேட் எக்ஸ் விலை என்ன?

இதில் 11-இன்ச் WUXGA+ ரெசல்யூஷன் டிஸ்ப்ளே, குவாட் ஸ்பீக்கர் சிஸ்டம், 13 மெகாபிக்சல் ரியர் கேமரா, 105 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ உடனான 8 மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் செல்பி கேமரா, 8340mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. விலை குறித்து பார்க்கையில், இதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.25,999 எனவும் அதேபோல் 5ஜி வேரியண்ட்டின் 6 ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.27,999 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

File Images

Best Mobiles in India

English summary
Realme Ready to Launch its 5G Smartphone in India: Diwali Special

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X