ரியல்மி அறிமுகம் செய்த அட்டகாச பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்: ஓஹோ இதில் இவ்வளவு இருக்கா?
ரியல்மி Q5x ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி, இரட்டை பின்புற கேமராக்கள் உடன் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது சாதனங்கள்
சமீப காலமாக ரியல்மி நிறுவன ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ரியல்மி நிறுவனம் பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது சாதனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி தற்போது நிறுவனம் ரியல்மி Q5x சாதனத்தை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த சாதனம் குறித்த விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

ரியல்மி க்யூ தொடரில் புது சாதனம்
ரியல்மி க்யூ தொடரின் கீழ் தற்போது புதிய சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முன்னதா ரியல்மி க்யூ 5i, ரியல்கி க்யூ5 மற்றும் ரியல் க்யூ5 ப்ரோ ஆகிய சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது ரியல்மி Q5x சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி Q5x ஸ்மார்ட்போனானது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த சாதனம் ஜூன் 23 முதல் சீனாவில் விற்பனைக்கு கிடைக்கும்.

ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி
ரியல்மி Q5x ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் இரட்டை பின்புற கேமராக்கள் மற்றும் வாட்டர் டிராப் ஸ்டைல் நாட்ச் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இதற்கு முந்தைய மாறுபாடான ரியல்மி Q5i ஸ்மார்ட்போனும் இதே மீடியாடெக் டைமன்சிட்டி 810 சிப்செட்டைக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி Q5x விலை விவரங்கள்
ரியல்மி Q5x விலை விவரங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனத்தின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை CNY 999 ஆக இருக்கிறது. இதன் இந்திய மதிப்பு ரூ.11,700 ஆகும். இந்த சாதனம் க்ளவுட் பிளாக் மற்றும் ஸ்டார் ப்ளூ வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த சாதனத்தின் விற்பனை ஜூன் 23 முதல் தொடங்குகிறது. அதேபோல் இந்த முந்தைய மாடலான Realme Q5i ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.14,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.15,200 ஆக இருக்கிறது. இந்த மாடல்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி Q5x சிறப்பம்சங்கள்
ரியல்மி Q5x சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ரியல்மி யூஐ 3.0 உடன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 400 நிட்ஸ் உச்ச பிரகாச டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. ஹூட்டின் கீழ் இந்த சாதனம் ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.

13 எம்பி முதன்மை சென்சார்
ரியல்மி Q5x கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 13 எம்பி முதன்மை சென்சார் உள்ளிட்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த சாதனத்தின் கேமரா அமைப்புடன் எல்இடி ஃப்ளாஷ் வசதியும் இருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிக்கு என ரியல்மி Q5x ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 5 எம்பி செல்பி கேமரா சென்சார் வசதி இருக்கிறது.

பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்
ரியல்மி Q5x ஸ்மார்ட்போனில் பிரத்யேக மெமரி விரிவாக்க வசதிக்கு என மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது. ரியல்மி Q5x ஸ்மார்ட்போனின் இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட வசதிகளை கொண்டிருக்கிறது. அதோடு இந்த சாதனத்தில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் ஆதரவு இருக்கிறது. ரியல்மி Q5x ஸ்மார்ட்போனில் 10 வாட்ஸ் நிலையான சார்ஜிங் வசதி இருக்கிறது. இந்த சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் எடை 184 கிராம் ஆகும்.


Click it and Unblock the Notifications