Home
News

வாங்கலாமே- 8ஜிபி ரேம், 48 எம்பி கேமரா, 5000 எம்ஏஎச் உடன் ரியல்மி க்யூ3எஸ் அறிமுகம்: விலை தெரியுமா?

ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி நியோ 2டி, ரியல்மி க்யூ 3 எஸ் மற்றும் ரியல்மி வாட்ச் டி1 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது. ரியல்மி க்யூ 3 எஸ் ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778ஜி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் ரியல்மி வாட்ச் டி1 என்எஃப்சி, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களுடன் வருகிறது.

நியோ 2டி, ரியல்மி க்யூ3 எஸ் மற்றும் ரியல்மி வாட்ச் டி1

நியோ 2டி, ரியல்மி க்யூ3 எஸ் மற்றும் ரியல்மி வாட்ச் டி1

ரியல்மி நிறுவனம் ரியல்மி ஜிடி நியோ 2டி, ரியல்மி க்யூ3 எஸ் மற்றும் ரியல்மி வாட்ச் டி1 உட்பட மூன்று புதிய சாதனங்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி ஜிடி நியோ 2டி மீடியாடெக் டைமன்சிட்டி 1200 ஏஐ எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. அதேபோல் ரியல்மி க்யூ3 எஸ் ஸ்னாப்டிராகன் 778 ஜி மூலம் இயக்கப்படுகிறது.

மூன்று வேரியண்ட்களில் அறிமுகம்

மூன்று வேரியண்ட்களில் அறிமுகம்

ரியல்மி க்யூ3 எஸ் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது, இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.17,500 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் இந்திய மதிப்பு ரூ.18,700 ஆக இருக்கிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.23,400 ஆக இருக்கிறது. க்யூ3 எஸ் ஸ்மார்ட்போனானது ப்ளூ மற்றும் வைட் வண்ண விருப்பத்தில் வருகிறது. ரியல்மி வாட்ச் டி1 விலை ஆனது இந்திய மதிப்புப்படி ரூ.8199 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரியல்மி க்யூ 3 எஸ் விவரக்குறிப்புகள்

ரியல்மி க்யூ 3 எஸ் விவரக்குறிப்புகள்

ரியல்மி க்யூ 3 எஸ் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனானது 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே 1,080 × 2,412 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. 90.8 சதவிகிதம் ஸ்கிரீன்-டூ-பாடி விகிதத்தை கொண்டுள்ளது. 96 சதவிகிதம் என்டிஎஸ்சி, 144 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. எச்டிஆர் 10 ஆதரவை இந்த சாதனம் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ் ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வரை இயக்கப்படுகிறது.

மூன்று பின்புற கேமரா அமைப்பு

மூன்று பின்புற கேமரா அமைப்பு

ரியல்மி க்யூ3 எஸ் ஸ்மார்ட்போனானது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் போர்ட்ரெய்ட் லென்ஸ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் செல்பி வசதிக்கென 16 மெகாபிக்சல் ஸ்னாப்பரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5ஜி இணைப்பை கொண்டிருக்கிறது.

ரியல்மி வாட்ச் டி1 விவரக்குறிப்புகள்

ரியல்மி வாட்ச் டி1 விவரக்குறிப்புகள்

ரியல்மி வாட்ச் டி1 விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில் இது 11.3 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 416 x 416 பிக்சல்கள் தீர்மானத்துடன் வருகிறது. வாட்ச் வயர்லெஸ் இணைப்பிற்காக ப்ளூடூத் 5.0 ஆதரவை கொண்டுள்ளது. ரியல்மி லிங்க் ஆப் மூலம் ஸ்மார்ட்போனில் இணையலாம். ஸ்மார்ட்வாட்ச் 5 ஏடிஎம் மதிப்பிடப்பட்டுள்ளது. இது வாட்டர் ரெசிஸ்டென்ட் அம்சத்தை கொண்டிருக்கிறது.

228 எம்ஏஎச் பேட்டரி

228 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி வாட்ச் டி1 228 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது ஏழு நாட்கள் வரை இயக்க நேரத்தை அனுமதிக்கிறது. வேகமான சார்ஜிங் வசதியையும் இந்த வாட்ச் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 110 விளையாட்டு முறைகள் மற்றும் தேர்வு விருப்பத்திற்கு 50 வாட்ச் முகங்களை கொண்டுள்ளது. ஸ்மார்ட் வாட்ச் வாங்க விரும்புபவர்களுக்கு இது சாதனம் சிறந்த தேர்வாக இருக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme Q3s Smartphone Launched with Snapdragon 778G, 8GB RAM and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X