ரியல்மி க்யூ 3 சீரிஸ் வெளியீடு உறுதி: அம்சங்கள் மற்றும் விலை இதோ!
ரியல்மி க்யூ 3 தொடர் ஸ்மார்ட்போன்கள் வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ரியல்மி க்யூ 3 தொடர் ஸ்மார்ட்போன்கள் வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ரியல்மி க்யூ 3 விலை குறித்து பார்க்கையில் இதன் இந்திய மதிப்பு ரூ.23,000-த்துக்கு கீழ் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி க்யூ 3 தொடர் ஸ்மார்ட்போன்
ரியல்மி க்யூ 3 தொடர் ஸ்மார்ட்போன்கள் வெளியீடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. ரியல்மி க்யூ 3 விலை குறித்து பார்க்கையில் இதன் இந்திய மதிப்பு ரூ.23,000-த்துக்கு கீழ் நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்புது அம்சங்களோடு அறிமுகம்
ரியல்மி நிறுவனம் பல்வேறு ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து புதுப்புது அம்சங்களோடு அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி ரியல்மி க்யூ 3 ஸ்மார்ட்போன் தொடர் விரைவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கடந்தாண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி க்யூ 2 சீரிஸ் சாதனங்கள் 1 மில்லியன் விற்பனையை எட்டியது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. மேலும் ரியல்மி நிறுவனம் க்யூ தொடர் ஸ்மார்ட்போன் குறித்து அதிக தகவலை வெளியிடவில்லை.

ரியல்மி க்யூ3 தொடர் ஸ்மார்ட்போன்கள்
இருப்பினும் ரியல்மி க்யூ3 தொடரில் கூறப்பட்ட சில விவரக்குறிப்புகள் குறித்து அறிக்கைகள் வெளியாகியுள்ளது. அதில் ஒரு அறிக்கையில் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 எஸ்ஓசி பொருத்தப்படலாம் எனவும் இது இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.23,000 என இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

வெய்போவில் வெளியான பதிவு
ரியல்மி குறித்து வெய்போவில் வெளியான பதிவு குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் விரைவில் வரும் எனவும் தெரிவித்து குறிப்பிட்ட தேதி எதுவும் வெளிப்படுத்தவில்லை. இந்த ஸ்மார்ட்போனானது 5ஜி ஆதரவுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ரியல்மி க்யூ தொடரில் இடம்பெறும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கையில், இதில் வெண்ணிலா ரியல்மி க்யூ2, ரியல்மி க்யூ 2 ப்ரோ மற்றும் ரியல்மி க்யூ 2ஐ ஆகியவை உள்ளது. இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களும் கடந்தாண்டு 5ஜி ஆதரவோடு சீனாவில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி க்யூ 2 தொடர் விற்பனை
இதே ரியல்மி க்யூ 2 ஸ்மார்ட்போனானது இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி என இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதேபோல் ரியல்மி க்யூ 2 தொடர் விற்பனை 1 மில்லியனை தாண்டிவிட்டது என வெய்போ பதிவு தெரிவிக்கிறது. நிறுவனம் தரப்பில் மாறுபாடு வேரியண்டின் மொத்த விற்பனை தகவல் வெளியிடவில்லை.

இணைப்பு ஆதரவுகள்
ரியல்மி க்யூ 3 குறித்து வெளியான தகவலில், வெண்ணிலா ரியல்மி க்யூ 3 ஸ்மார்ட்போன் குறித்த விவரக்குறிப்புகள் மைட்ரைவர்ஸ் அறிக்கையில் வெளிவந்துள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 1100 எஸ்ஓசி, யுஎஃப்எஸ் 3.1 சேமிப்பு மற்றும் எல்பிடிடிஆர் 4 எக்ஸ்-2133 ரேம் பொருத்தப்பட்டிருக்கும் என அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே ஸ்க்ரீன், 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 50 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு இது வரலாம் என கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்போடு வரும் எனவும் இதில் ப்ளூடூத் 5.2 மற்றும் வைஃபை 6 ஆகியவை இணைப்பு ஆதரவுகளாக உள்ளது.


Click it and Unblock the Notifications