இந்தியாவில் அறிமுகமாகும் ப்ராஜெக்ட் N.! இது என்ன ஸ்பெஷல் Mobile போன்-ஆ? சொல்லுங்க Realme?
என்னது! ப்ராஜெக்ட்-N ரெடியா? ப்ராஜெக்ட்-N இந்தியாவுக்கு வருகிறதா? ஐயையோ ப்ராஜெக்ட் N ரிலீஸ் ஆக இன்னும் சில தினம் தான் உள்ளதா? அட, ப்ராஜெக்ட் N-னா என்னப்பா? ஏன் இவ்வளவு ஹைப்ப ஏத்துறீங்க? என்று பல கேள்விகள் குவிந்து கொண்டிருக்கிறது.
ஒரே ஒரு போஸ்டரால் இந்தியா முழுக்க இந்த ப்ராஜெக்ட் N பற்றி தான் இப்போது பேச்சு. ப்ராஜெக்ட் N என்பது ரியல்மி அறிமுகம் செய்யவிருக்கும் புதிய நர்ஸோ N சீரிஸ் ஸ்மார்ட்போனின் அடையாளப் பெயராகும். ரியல்மி (Realme) நிறுவனம் அதன் போர்ட்போலியோவில், புதிதாகச் சேர்க்கவிருக்கும் சாதனம் தான் ரியல்மி நர்ஸோ N55 (Realme Narzo N55) ஆகும். இந்த ஸ்மார்ட்போனிற்கு ஏன் இவ்வளவு ஹைப்? வாருங்கள் பார்க்கலாம்.

Realme Narzo N55 என்ற பெயருடன் இந்தியாவில் ரியல்மி நிறுவனம் வரும் ஏப்ரல் 12 ஆம் தேதி 12:30 மணி அளவில் ஒரு புதிய சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகமாகவிருப்பதாக டெக் வட்டாரம் தெரிவிக்கிறது. இந்த சாதனத்தின் இந்திய வருகை குறித்த தகவலை நிறுவனம் இப்போது டீஸ் செய்து உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த போனில் என்ன எதிர்பார்க்கலாம் என்ற விபரங்கள் இங்கே.. Realme Narzo N55 என்ற ஸ்மார்ட்போனை வைத்து நிறுவனம் அதன் N சீரிஸ் வரிசையை முதல் முறையாக அறிமுகம் செய்கிறது. அதாவது N சீரிஸ் வரிசையில் அறிமுகமாகும் முதல் சாதனம் Realme Narzo N55 தான். இதனால், தான் ப்ராஜெக்ட் N என்ற பெயரில் நிறுவனம் நீண்ட காலமாக ரசிகர்களை டீஸ் செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய பிரத்தியேக அறிக்கையின் படி, புதிய Realme Narzo N55 சாதனம் பிரைம் பிளாக் மற்றும் பிரைம் ப்ளூ வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என்று பரிந்துரைக்கிறது. இந்த சாதனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாறுபாட்டுடன் கிடைக்கும். இது தவிர, இந்த டிவைஸ் 4ஜிபி + 128ஜிபி, 6ஜிபி + 64ஜிபி மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி வேரியண்ட் மாடலில் வரும்.

ஹை-வேரியண்ட் மாடலாக Realme Narzo N55 சாதனம் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் உடனும் வெளிவரும். இந்த போனின் மற்ற அம்சங்கள் பற்றிய விபரங்கள் எதுவும் நிறுவனத்தால் வெளியிடப்படவில்லை. இருப்பினும், லீக் தகவலின் படி, இந்த சாதனத்தில் என்ன எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி நம்மிடம் ஒரு யுகம் உள்ளது. Realme Narzo N55 பட்ஜெட் விலையில் கிடைக்கும் கேமிங் சாதனமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது தான் இந்த போனின் முதல் ஸ்பெஷாலிட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது Realme வழங்கும் Narzo தொடரின் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த போனின் விலை பற்றி பேசுகையில், இது ரூ.15,999 விலை வரம்பிற்குள் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. இது Amazon மற்றும் Realme வலைத்தளங்கள் வழியாக விற்பனைக்கு வரும். பட்ஜெட் விலையில் மிரட்டலான கேமிங் போன் வாங்க ஆசையா கொஞ்சம் காத்திருங்கள்.


Click it and Unblock the Notifications








