Home
News

இப்போ இது சரியில்ல., விரைவில் திரும்புவோம்: இந்தியாவில் இந்த நிகழ்வை ஒத்தி வைத்த ரியல்மி!

ரியல்மி நிறுவனம் மே 6 ஆம் தேதி புதிய ரியல்மி டிவியான ரியல்மி ஜிடி நியோவின் மறுபெயரிடப்பட்ட மாடலான ரியல்மி எக்ஸ் 7 மேக்ஸ் வெளியீட்டு நிகழ்வை நடத்த இருந்தது. அதேபோல் ரியல்மி நிறுவனம் பிராண்டின் 3-வது ஆண்டு நிறைவை கொண்டாட இருக்கிறது.

ரியல்மி அறிமுக நிகழ்வு

ரியல்மி அறிமுக நிகழ்வு

மே 6 ஆம் தேதி இந்தியாவில் நடக்க இருந்த வெளியீட்டு நிகழ்வு தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில் இந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புதிய ரியல்மி டிவி உள்ளிட்ட சாதனங்கள் அறிமுகம் செய்ய இருக்கிறது. அதேபோல் நிறுவனம் தனது பிராண்டின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாட இருந்தது.

ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி

ரியல்மி இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத், டுவிட்டரில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். கவனமாக பரிசீலித்த பிறகே ரியல்மி ஆண்டு விழா கொண்டாட்டங்கள் நடக்கும் எனவும் முடிந்தவரை பங்களிப்பதில் கவனம் செலுத்துவோம் வீட்டிலேயே இருங்கள் என அறிவுறுத்தியுள்ளார். வலுவாக இருங்கள்! விரைவில் திரும்புவோம் என பதிவிட்டுள்ளார்.

விரைவில் இந்த வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படும்

விரைவில் இந்த வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படும்

அதேபோல் அவரது அறிவிப்பில் அடுத்த வெளியீட்டு தேதியை குறிப்பிடவில்லை. மேலும் நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு விரைவில் இந்த வெளியீட்டு தேதி உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி நிறுவனம் இந்தியாவில் பல்வேறு புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. ரியல்மி ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் ரியல்மி சூழ்நிலையை கருத்தில் கொண்டு வெளியீட்டு நிகழ்வை ஒத்திவைத்தது பலரின் வரவேற்பை பெற்றிருக்கிறது.

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த நிவாரணத் தொகையை பலரும் அறிவித்து வருகின்றனர். மேலும் ஆக்ஸிஜன் மற்றும் பிற அவசரகால பொருட்களுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டு வருகிறது.

சியோமி, ஒன்பிளஸ்

சியோமி, ஒன்பிளஸ்

கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. நாட்டின் மருத்துவ கட்டமைப்பு சரிந்து வருகிறது. மருத்துவ பற்றாக்குறைகள் ஏற்பட்டு வருகிறது. சியோமி, ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்கள் சுமைகளை குறைக்கும் வகையில் உதவ முன்வந்திருக்கிறது.

ரூ.3 கோடி நிதியுதவி

கோவிட்-19 அவசரநிலைகளை எதிர்கொண்டு டுவிட்டரில் உதவி கோரும் பட்சத்தில் அந்த முறையீடுகளை நிவர்த்தி செய்ய ஒன்பிளஸ் ஒரு சமூக ஊடக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. அதேபோல் சியோமி நிறுவனம் ரூ.3 கோடி நிவாரண தொகை அறிவித்திருக்கிறது.

மருத்துவமனைகளில் கோவிட்-19 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தொடர்ந்து 1000-த்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் வாங்குவதற்கு ரூ.3 கோடி நிதியுதவி வழங்குவதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது. தேவைப்படும் இடங்களில் சிலிண்டர்களை மருத்துவமனைகளுக்கு அல்லது மாநில அரசுகளுக்கு நன்கொடையாக வழங்குவதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூ. 50 லட்சம் நன்கொடை

இந்தியச் சந்தையில் ஆடியோ சாதனங்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் மிக முக்கியமான நிறுவனமான boAt நிறுவனம், மருத்துவமனைகளுக்கு உயர்தர ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வாங்குவதற்காக ரூ. 50 லட்சம் நன்கொடை அளித்துள்ளது. இது கோவிட்-19 மூலம் பாதிக்கப்பட்டவர்களின் உயிர் காக்கும் திறனை அதிகரிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Realme Postponed its Launch Event in India Due to Covid-19 Second Wave
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X