2021-க்குள் இந்தியாவில் 300-500 ஸ்மார்ட் ஸ்டோர்ஸ் இருக்கும்- ரியல்மி சிஇஓ பிரத்யேக போட்டி!

|

கொரோனா பரவல் இரண்டாவது அலை ஸ்மார்ட்போன்களின் விற்பனை வெகுவாக பாதித்துள்ளது. இருப்பினும் புதிய அறிமுகத்தின் மூலம் அடுத்த காலாண்டில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரிக்கும் என நிறுவனங்கள் நம்புகின்றன. அதுமட்டுமின்றி புதிய சாதனங்களை வாங்க வாடிக்கையாளர்கள் ஆஃப்லைன் கடைகளுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். இதனால் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் ஸ்பெக்ட்ரம் ஏலம் அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டிருக்கும் நிலையில் 5ஜி ஸ்மார்ட்போனின் தேவையும் அதிகரித்து வருகிறது.

2021-க்குள் 300-500 ஸ்மார்ட் ஸ்டோர்ஸ் இருக்கும்- ரியல்மி சிஇஓ


ரியல்மி துணைத் தலைவரும் ரியல்மி இந்தியா மற்றும் ஐரோப்பாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான மாதவ் ஷெத், நமது கிஸ்பாட் தளத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியளித்தார். அதில் அடுத்து வரவிருக்கும் தயாரிப்புகளில் பாதியை 5ஜி பிரிவின் கீழ் கொண்டு வர விரும்புவதாக குறிப்பிட்டார். மேலும் அவர் அளித்த பேட்டி குறித்த விவரங்களை பார்க்கலாம்.

கேள்வி 1: கோவிட்-19 பரவல் இந்தியாவில் ரியல்மியின் உத்திகளை மாற்றியுள்ளதா?., ஆம் என்றால் எப்படி?

இடைப்பட்ட மற்றும் நுழைவு நிலை விலை பிரிவில் கூடுதல் சாதனங்கள் கொண்டுவர எங்கள் போர்ட்ஃபோலியோவை சரி செய்தோம். நுகர்வோர் தேவை அதிக பயனுள்ள கொள்முதல் நோக்கி நகர்கிறது. எனவே புதுப்பிக்கப்பட்ட சி தொடர் தயாரிப்பு வரிசையில் சாதனங்களை அறிமுகம் செய்கிறோம். மலிவு விலையில் கூடுதல் செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களுக்கு இளைஞர்களிடம் இருந்து வரும் கோரிக்கையை கவனித்தோம். இதன்காரணமாகவே இந்தியாவில் ரியல்மி நார்சோ தொடரை அறிமுகப்படுத்தியுள்ளோம்,

கடந்தாண்டு தாங்கள் 50 கடைகளை திறக்க இலக்கு வைத்தோம். இருப்பினும் இந்த இலக்கு மெதுவாகவே முன்னெடுக்க முடிந்தது. தற்போதுவரை கிட்டத்தட்ட 40 கடைகளை திறக்க முடிந்தது. ஆஃப்லைன் விரிவாக்கம் என்பது எப்போதும் ரியல்மிக்கு அவசியம். இந்த மூலோபாயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக, நாடு முழுவதும் 300-500 ஸ்மார்ட் கடைகளையும் ஒருசில முதன்மை கடைகளை தொடங்குவோம்.

கேள்வி 2: கோவிட்-19 இரண்டாவது அலை மற்றும் லாக்டவுன் உங்கள் வணிகத்தை எந்த அளவிற்கு பாதித்தது?

ரியல்மிக்கான விற்பனை சீராக உள்ளது. ஆன்லைன் கோரிக்கையை 10-20 சதவீதம் அதிகரித்துள்ளோம். ஒருசில மாநிலங்களில் நிலையான ஆஃப்லைன் விற்பனையை பதிவு செய்துள்ளோம். 5ஜி தொழில்நுட்பத்தை ஜனநாயகமாக்கும் திட்டத்தில் பணியாற்றி வருகிறோம்.மேலும் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், ஆடியோ மற்றும் அக்ஸசரிஸ் கொண்ட டெக்லைஃப் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம்.

கேள்வி 3: கோவிட்-19 ஸ்மார்ட்போன் துறையை எவ்வாறு பாதித்தது?

மற்ற தொழில்துறை வீரர்கள் குறித்து கருத்து தெரிவிக்க நாங்கள் விரும்பவில்லை. எங்கள் தயாரிப்பு இந்திய சந்தைக்கான அனைத்து முன்னுரிமைகளிலும் வரையறுத்து செயல்படுத்தப்படுகின்றன.

கேள்வி 4: சமீபத்தில் டிஸோ என்ற புதிய துணை பிராண்ட் அறிமுகம் செய்தீர்கள். எனவே அந்த பிராண்டின் கீழ் நீங்கள் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள சாதனங்கள் என்ன?

டிஸோ என்பது தனிப்பட்ட பிராண்ட். இது மேலாண்மை சந்தைப்படுத்தல் மற்றும் செயல்பாட்டுக் குழுவை கொண்டுள்ளது. இது ரியல்மி உடன் இணைக்கப்படவில்லை. இந்த பிராண்ட் அதன் அறிக்கையையும் சொந்த சந்தை மூலோபாயத்தையும் கொண்டுள்ளது.

கேள்வி 5: துணை பிராண்ட் டிஸோ கீழ் செல்போன் அறிமுகம் திட்டமிட்டுள்ளீர்களா?

டிஸோ சில அற்புதமான தயாரிப்புகளை வரிசையாகக் கொண்டுள்ளது. தயாரிப்புகளின் அறிமுகத்தை எப்போது, எப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது என்பதை தீர்மானிக்க டிஸோவை அனுமதிப்பேன்.

கேள்வி 6: இந்த ஆண்டு இறுதிக்குள் நீங்கள் எந்த வகையான சந்தையை எதிர்பார்க்கிறீர்கள், குறிப்பாக 5ஜி ஸ்மார்ட்போன் சந்தையில்?

2021 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களில் 25-30 மில்லியன் விற்பனையை ஈட்டுவதன் மூலம் முதல் மூன்று ஸ்மார்ட்போன் பிராண்டிலும், நம்பர் ஒன் ஆன்லைன் ஸ்மார்ட்போன் பிராண்டாக ரியல்மி உள்ளது. 2021 ஆம் ஆண்டில் 5ஜி சந்தையை வழிநடத்த ரியல்மி விரும்புகிறது.

கேள்வி 7: இந்த ஆண்டு ரியல்மி எத்தனை ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும்?

டேப் திட்டத்தில் பல அறிபுத துவக்கங்கள் இருக்கின்றந. 5ஜி தலைவராக, 5ஜி இயக்கப்பட்ட ஸ்மார்ட்போன்களை வெவ்வேறு விலை பிரிவுகளில் கொண்டு வருவோம். முன்பு குறிப்பிட்டது போல், இந்த காலண்டர் ஆண்டில் 25-30 மில்லியன் விற்பனையை அடைய விரும்புகிறோம்.

கேள்வி 8: இந்தாண்டு ரியல்மியில் இருந்து வேறு என்ன எதிர்பார்க்கலாம்?

இரண்டு புதிய AIoT தயாரிப்புகள், ரியல்மி வாட்ச் 2 ப்ரோ, டெக்லைஃப் ரோபோ மற்றும் மடிக்கணினிகள் அறிமுகப்படுத்தும் திட்டங்களை சமீபத்தில் அறிவித்தோம். 5 ஜி தலைவராக, நாங்கள் 5ஜி சிப்செட்களை விலைப் பிரிவுகளில் வெளிக்கொண்டு வருவோம். வளர்ந்து வரும் இந்திய நுகர்வோர்கள் தேவையை பூர்த்தி செய்வோம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Plans to Open 300-500 Smart Stores Include Few Flagship Stores: CEO Madhav Sheth Interview With Gizbot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X