Home
News

திடீர் திருப்பம்.. User Data சேகரிப்பு விவகாரம்.. Realme போன்களை போலவே மேலும் 5 நிறுவனங்கள் இதை செய்கின்றன!

ரியல்மி (Realme) நிறுவனமானது ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது. ரியல்மி போன்களில் உள்ள மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு சேவைகள் (Enhanced Intelligent Services) என்கிற அம்சத்தின் வழியாக வழியாக பயனர்களின் தரவுகள் (User Data) மிகவும் ரகசியமான முறையில் சேகரிக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ட்விட்டர் (Twitter) பயனர் ஒருவரின் கூற்றுப்படி, ரியல்மி ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்களின் அழைப்பு பதிவுகள் (Call logs), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் இருப்பிடத் தகவல் (Location information) போன்ற முக்கியமான தகவல்கள் 'என்ஹான்ஸ்டு இன்டெலிஜென்ட் சர்வீசஸ்' என்கிற அம்சத்தின் வழியாக சேகரிக்கப்படுகின்றன.

User Data சேகரிப்பு: Realme போன்களை போலவே மேலும் 5 நிறுவனங்கள்!

இன்னொரு மோசமான விஷயம் என்னவென்றால், குறிப்பிட்ட அம்சமானது போன் செட்டிங்ஸில் டீபால்ட் ஆக, அதாவது தானாகவே இயக்கப்பட்டு இருக்குமாம். இதுபற்றி அறிந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சரான ராஜீவ் சந்திரசேகர், அரசு இது குறித்து மேலும் விசாரிக்கும்; இது சோதனை செய்யப்பட்டு சரிபார்க்கப்படும் என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில், மேம்படுத்தப்பட்ட நுண்ணறிவு சேவைகள் என்கிற அம்சம், ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, இது மற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களிலும் உள்ளது என்கிற தகவல் கிடைத்துள்ளது. ஒன்பிளஸ் (OnePlus), ஒப்போ (Oppo), விவோ (Vivo) மற்றும் ஐக்யூ (iQoo) போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களிலும் இந்த அம்சம் உள்ளதாம்.

சாம்சங் (Samsung) ஸ்மார்ட்போன்களிலும் இதேபோன்ற அம்சம் இருப்பதாகவும், அது சென்ட் டயக்னசிஸ் டேட்டா (Send Diagnostics Data) என்கிற பெயரின் கீழ் டீபால்ட் ஆக இயக்கப்பட்டு இருக்கும் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரியல்மி நிறுவனத்தை போலவே மேற்கண்ட நிறுவனங்களும் யூஸர் ப்ரைவஸி குற்றச்சாட்டில் சிக்குமா என்கிற கேள்வி மேலோங்கியுள்ளது.

இருப்பினும், என்ஹான்ஸ்டு இன்டெலிஜென்ட் சர்வீசஸ் என்கிற அம்சம் பற்றி ரியல்மி நிறுவனம் அளித்துள்ள விளக்கமானது, இது பயனர்களின் பயன்பாட்டு முறைகளுக்கு ஏற்ப டிவைஸ் செயல்பாடுகளை மேம்படுத்தும் (Optimising device functions), இதன் மூலம் அவர்களின் டிவைஸ் அனுபவத்தை (Device experience) மேம்படுத்தப்படும்.

இதற்காக, ரியல்மி நிறுவனம் சில பயனர்களின் டிவைஸ் தொடர்பான தகவல் (Device information), ஆப் பயன்பாட்டு (App usage) புள்ளிவிவரங்கள், இருப்பிடத் தகவல், காலண்டர் நிகழ்வுகள், படிக்கப்படாத எஸ்எம்எஸ்களின் புள்ளிவிவரங்கள் மற்றும் தவறிய அழைப்புகளின் (Missed Calls) புள்ளிவிவரங்கள் போன்றவைகளை சேகரிக்கிறது. இருப்பினும், இந்த அம்சத்தை பயணங்களால் முடக்க முடியும் என்றும் ரியல்மி கூறுகிறது.

செட்டிங்ஸ் (Settings) சென்று அடிஷனல் செட்டிங்ஸ் (Additional Settings) என்பதை கிளிக் செய்யவும். பின்னர் சிஸ்டம் சர்வீசஸ் (System Services) சென்று, அதனுள் இருக்கும் என்ஹான்ஸ்டு சிஸ்டம் சர்வீசஸ் (Enhanced System Services) என்கிற விருப்பத்தை டிஸேபிள் செய்யவும். கடைசியாக உங்கள் போனை ரீஸ்டார்ட் (Restart) செய்யவும். ஒப்போ, ஒன்பிளஸ் பயனர்களும் கூட இதையே பின்பற்றலாம்.

Best Mobiles in India

English summary
Realme Phones Collecting User Data Under Enhanced Intelligent Services Feature What about Others
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X