பட்ஜெட் விலையில் Tablet! போட்டி போட்டு சம்பவம் செய்த Realme, Oppo!

|

"இப்போ வருது.. அப்போ வருது" என்று படுபயங்கரமாக பில்ட்-அப் கொடுக்கப்பட்ட ஒப்போ நிறுவனத்தின் முதல் மற்றும் பட்ஜெட் விலை டேப்லெட் ஆன ஒப்போ பேட் ஏர் (Oppo Pad Air) ஆனது வருகிற ஜூலை 18 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.

அதை தொடர்ந்து ரியல்மி நிறுவனம் அதன் மூன்றாவது மற்றும் பட்ஜெட் விலையிலான Realme Pad X டேப்லெட்டின் இந்திய அறிமுக தேதியை உறுதி செய்துள்ளது.

Oppo-விற்கு ஆரம்பத்திலேயே ஆப்பு வைக்க பார்க்கும் Realme!

Oppo-விற்கு ஆரம்பத்திலேயே ஆப்பு வைக்க பார்க்கும் Realme!

ஒப்போவின் டேப் ஏர் டேப்லெட்டும், ரியல்மியின் பேட் எக்ஸ் 5ஜி டேப்லெட்டும் ஏற்கனவே சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டாலும் கூட, ரியல்மி தான் அதன் மூன்றாவது டேப்லெட்டின் இந்திய அறிமுகத்தை முதலில் 'டீஸ்' செய்தது, இருந்தாலும் அறிமுக தேதியை பற்றி வாயே திறக்கவில்லை.

நேற்று ஒப்போ அதன் முதல் டேப்லெட்டின் இந்திய அறிமுக தேதியை (ஜூலை 18) அறிவித்த வேகத்தில், தற்போது ரியல்மி நிறுவனம், வருகிற ஜூலை 26 ஆம் தேதி அன்று அதன் அடுத்த லான்ச் ஈவென்ட்-ஐ நடத்தும் என்று அறிவித்துள்ளது.

ஒப்போ தன் முதல் டேப்லெட்-ஐ என்ன விலைக்கு அறிமுகம் செய்கிறது என்று பார்த்துவிட்டு அதன் பின்னர் ரியல்மி "சில தந்திரங்களை" செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஜூலை 18 வரை புது போன், இயர்பட்ஸ், டேப்லெட்-னு எதுவுமே வாங்காதீங்க! ஏனெனில்?ஜூலை 18 வரை புது போன், இயர்பட்ஸ், டேப்லெட்-னு எதுவுமே வாங்காதீங்க! ஏனெனில்?

ஆனால் ஜூலை 26-இல் Realme Pad X 5G மட்டுமே அறிமுகம் ஆகாது!

ஆனால் ஜூலை 26-இல் Realme Pad X 5G மட்டுமே அறிமுகம் ஆகாது!

இந்தியாவில் வருகிற ஜூலை 26 ஆம் தேதி ஒரு அறிமுக நிகழ்வை நடத்துவதாக Realme நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கம் வழியாக அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட நாளில், ரியல்மி பேட் எக்ஸ் 5ஜி டேப்லெட் மட்டுமின்றி ரியல்மி நிறுவனத்தின் ஒரு புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ், ஒரு ரியல்மி ஸ்மார்ட்வாட்ச் மற்றும் ரியல்மியின் முதல் மானிட்டர் போன்ற தயாரிப்புகளும் அறிமுகம் செய்யப்படும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்னொரு முக்கியமான மேட்ட - Realme இந்த அறிமுக நிகழ்வை, நிறுவனத்தின் முதல் "5G-led AIoT launch" என்று அழைக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் ஏதேனும் அறிமுகம் ஆகுமா?

புதிய ஸ்மார்ட்போன் ஏதேனும் அறிமுகம் ஆகுமா?

ஒருவேளை நீங்கள் ஒரு புதிய ரியல்மி ஸ்மார்ட்போனின் அறிமுகத்தை எதிர்பார்க்கிறீர்கள் என்றால், ஏமாற்றம் தான் மிஞ்சும். ஏனெனில் இந்நிகழ்வில் எந்த போனும் அறிமுகம் ஆகாது.

அதை உறுதிப்படுத்தும் வண்ணம், Realme India இணையதளமானது வெளியாகவுள்ள 4 தயாரிப்புகளில் வெறும் இரண்டு தயாரிப்புகளை மட்டுமே - தற்போது வரை - பட்டியலிட்டுள்ளது. அது Realme Pad X மற்றும் Realme Watch 3 ஆகும்.

வரவிருக்கும் புதிய ரியல்மி இயர்பட்ஸ் ஆனது எப்படி அழைக்கப்படும்? அது என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. மறுகையில் உள்ள ரியல்மி மானிட்டர் பற்றிய தகவல்கள் இன்னும் குறைவாகவே உள்ளன.

Samsung, OnePlus, Xiaomi உட்பட 12 போன்கள் மீது தாறுமாறான விலைக்குறைப்பு; இதோ லிஸ்ட்!Samsung, OnePlus, Xiaomi உட்பட 12 போன்கள் மீது தாறுமாறான விலைக்குறைப்பு; இதோ லிஸ்ட்!

இந்தியாவில் Realme Pad X என்ன விலைக்கு வரும்?

இந்தியாவில் Realme Pad X என்ன விலைக்கு வரும்?

ரியல்மி பேட் எக்ஸ் 5ஜி டேப்லெட்டின் இந்திய விலை விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

சீனாவில் இதன் 4ஜிபி ரேம் ஆப்ஷன் ஆனது சுமார் ரூ.15,000 க்கும், 6ஜிபி ரேம் வேரியண்ட் ஆனது தோராயமாக ரூ.19,000 க்கும் அறிமுகமானது. இதே போன்ற விலைகளை இந்தியாவிலும் எதிர்பார்க்கலாம்.

Realme Pad X என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

Realme Pad X என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

இது 2000×1200 பிக்சல்ஸ் ரெசல்யூஷனை கொண்ட 11-இன்ச் FullHD LCD டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 5:3 என்கிற ஆஸ்பெக்ட் ரேஷியோ, 450 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸையும் வழங்கும்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 கொண்டு இயக்கப்படும் இந்த டேப்லெட் 5ஜி ஆதரவுடன் வரும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட பேட்-டிற்கான Realme UI 3.0 மூலம் இயக்கப்படும் இந்த டேப்லெட்டில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கும்.

இதுவரை வந்த எந்த OnePlus போனிலும் இதுவரை வந்த எந்த OnePlus போனிலும் "இது" இல்லை; இன்னும் 2 வாரம் தான்!

கேமராக்கள், பேட்டரி எல்லாம் எப்படி இருக்கும்?

கேமராக்கள், பேட்டரி எல்லாம் எப்படி இருக்கும்?

Realme Pad X 5ஜி-யின் பின்புறத்தில், ஒரு 13 மெகாபிக்சல் ரியர் கேமரா இடம்பெறும். வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பீகளுக்கான பொறுப்பை முன்பக்கத்தில் உள்ள 8 மெகாபிக்சல் கேமரா பார்த்துக்கொள்ளும்.

டால்பி அட்மோஸால் ட்யூன் செய்யப்பட்ட நான்கு ஸ்பீக்கர்களை பேக் செய்யும் இந்த ரியல்மி டேப்லெட் ஆனது ஹை-ரெஸ் ஆடியோவிற்கான ஆதரவையும் வழங்கும். கடைசியாக இது 33W சார்ஜிங் ஸ்பீட் ஆதரவுடனான 8340mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும்.

Realme Watch 3 என்ன விலைக்கு வரும்?

Realme Watch 3 என்ன விலைக்கு வரும்?

இந்தியாவில் ரியல்மி வாட்ச் 3 ஆனது சுமார் ரூ.4,000 என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம். நினைவூட்டும் வண்ணம் ரியல்மி வாட்ச் 2 மற்றும் வாட்ச் 2 ப்ரோ மாடல்கள் ஆனது முறையே ரூ.3,199 மற்றும் ரூ.4,699 க்கு வாங்க கிடைக்கிறது.

வெடித்து சிதறிய SpaceX ராக்கெட்; சுக்குநூறான எலான் மஸ்க்கின் கனவு திட்டம்!வெடித்து சிதறிய SpaceX ராக்கெட்; சுக்குநூறான எலான் மஸ்க்கின் கனவு திட்டம்!

ரியல்மி வாட்ச் 3 என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

ரியல்மி வாட்ச் 3 என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?

வரவிருக்கும் புதிய ரியல்மி ஸ்மார்ட்வாட்ச் பற்றி பெரிய அளவிலான தகவல்கள் எதுவும் இல்லை.

இருப்பினும், ஆன்லைன் வழியாக நமக்கு கிடைத்த சில லீக்ஸ்களை வைத்து பார்க்கும் பொது, வரவிருக்கும் Realme Watch 3 ஆனது 2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளேவுடன் வரலாம் என்பதை அறிய முடிகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் ப்ளூடூத் காலிங் அம்சம் இடம்பெறும் என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விரிவான மற்றும் துல்லியமான தகவல்களுக்கு நாம் ஜூலை 26 வரை காத்திருக்க வேண்டியது அவசியம்!

Photo Courtesy: Realme, Oppo

Best Mobiles in India

English summary
Realme Pad X to launch in India along with New Smartwatch Earbuds Monitor on July 26

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X