விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட்.! முழு விவரம்.!
ரியல்மி நிறுவனம் ரியல்மி பேட் எக்ஸ் எனும் டேப்லெட் மாடலை சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் ரியல்மி பேட் எக்ஸ் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த டேப்லெட் மாடலின் சரியான வெளியீட்டு தேதி இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று Realme துணைத் தலைவர் மாதவ் ஷெத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ரியல்மி பேட் எக்ஸ் சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரியல்மி பேட் எக்ஸ் சாதனம் ஆனது 11-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 2கே ரெசல்யூஷன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த அசத்தலான சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ரியல்மி பேட் எக்ஸ் சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

ரியல்மி பேட் எக்ஸ் சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி பிராசஸர் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு Realme UI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது.

இந்த புதிய சாதனத்தில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. பின்பு மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவு மற்றும் டால்பி அட்மோஸ் மற்றும் ஹை-ரெஸ் ஆடியோவுடன் கூடிய நான்கு ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல்.

ரியல்மி பேட் எக்ஸ் சாதனத்தின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த புதிய டேப்லெட் மாடல். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

ரியல்மி பேட் எக்ஸ் சாதனத்தில் 8340 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். அதேபோல் ஃப்ளோரசன்ட் கிரீன், சீ ப்ளூ மற்றும் ஸ்டார் கிரே நிறங்களில் இந்த டேப்லெட் வெளிவந்துள்ளது.

ரியல்மி பேட் எக்ஸ் சாதனத்தின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.14,950-ஆக உள்ளது. மேலும் டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும்யூஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த புதிய டேப்லெட் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனம் விரைவில் இந்தியாவில்அறிமுகம் செய்யப்படும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications