இப்படி ஒரு டேப்லெட் டிவைஸா? Realme Pad X அறிமுகத்திற்கு ரேடி! உடனே வாங்கலாம் போலேயே!

|

புதிதாக டேப்லெட் சாதனம் வாங்கும் எண்ணம் இருக்கிறதா? இல்லையென்றாலும் பரவாயில்லை, இந்த டேப்லெட் டிவைஸை பற்றித் தெரிந்தால், நிச்சயமாக உங்கள் மனம் மாறும். புதிய டேப்லெட் டிவைஸை வாங்க வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாகத் தோன்றும். காரணம், ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கும் புதிய Realme Pad X டேப்லெட் டிவைஸ் அப்படி ஸ்பெஷலான அம்சங்கள் உடன் இந்தியாவில் இப்போது அறிமுகமாக ரெடியாகிவிட்டது.

Realme Pad X இந்தியாவில் அறிமுகம்

Realme Pad X இந்தியாவில் அறிமுகம்

ரியல்மி நிறுவனத்திற்குச் சொந்தமான அடுத்த புதிய வரவாக Realme Pad X அறிமுகமாகவிருக்கிறது. இந்த புதிய Realme Pad X டேப்லெட் சாதனத்தின் அறிமுகம் வரும் ஜூலை 26 ஆம் தேதி அன்று மதியம் 12:30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய டேப்லெட் 10.95' இன்ச் கொண்ட WUXGA+ புள் வியூ டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய டேப்லெட் சாதனம் Qualcomm Snapdragon 6nm 5G சிப்செட் மூலம் இயக்கப்படும்.

குவாட் ஸ்பீக்கர்களுடன் வெளிவருகிறது புது டேப்லெட்

குவாட் ஸ்பீக்கர்களுடன் வெளிவருகிறது புது டேப்லெட்

ரியல்மி பேட் எக்ஸ் சாதனம் 8,340mah கொண்ட பேட்டரியையும் பேக் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. Realme Pad X இன் இந்திய வெளியீடு கடந்த வாரம் சீன நிறுவனத்தால் ஹே கிரியேட்டிவ்ஸ் நிகழ்வின் ஒரு பகுதியாக இருக்கும் என்று டீஸ் செய்யப்பட்டது. Realme இன் பேட் எக்ஸ் டிவைஸ் கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த டேப்லெட்டில் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பத்தால் மேம்படுத்தப்பட்ட குவாட் ஸ்பீக்கர்களுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!1 இல்ல 2 இல்ல மொத்தம் 12 OTT சேனல்! விலை வெறும் ரூ.149 மட்டுமே! Airtel-லின் இந்த திட்டம் தான் பெஸ்ட்!

Realme Pad X எப்போது அறிமுகம்?

Realme Pad X எப்போது அறிமுகம்?

Realme Techlife இந்தியாவில் Realme Pad X சாதனத்தை வரும் ஜூலை 26 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு ட்விட்டர் மூலம் அறிமுகப்படுத்துவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டேப்லெட்டின் இந்திய வெளியீடு கடந்த வாரம் சீன நிறுவனத்தால் ஹே கிரியேட்டிவ்ஸ் நிகழ்வின் ஒரு பகுதியாக டீஸ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிகழ்வு இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட் பாஸ்ட் சார்ஜிங்

ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட் பாஸ்ட் சார்ஜிங்

ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, ரியல்மி பேட் எக்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 6என்எம் 5ஜி சிப்செட் மூலம் இயக்கப்படும். முன்பே சொன்னது போல், இந்த டேப்லெட் சாதனம் சக்தி வாய்ந்த 8,340mAh பேட்டரி உடன் வருகிறது. இந்த டிவைஸ் 33W டார்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும். Realme Pad X ஆனது 84.6 சதவிகித டிஸ்பிளே டு பாடி ரேட்ஸியோ உடன் வருகிறது. இது 450nits பிரைட்னஸ் உடன் 10.95' இன்ச் கொண்ட WUXGA+ புள் வியூ டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.

Android பயனர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா? Autolycos மால்வேர் தாக்குதல்! உங்க போனில் இருந்தால் உஷார்.!Android பயனர்களுக்கு இப்படி ஒரு ஆபத்தா? Autolycos மால்வேர் தாக்குதல்! உங்க போனில் இருந்தால் உஷார்.!

Realme Pad X விவரக்குறிப்புகள்

Realme Pad X விவரக்குறிப்புகள்

இந்த டேப்லெட்டை கீபோர்டு மற்றும் Realme Magnetic Stylus உடன் இணைக்க முடியும். நினைவுகூர, Realme இலிருந்து வெளிவரும் Realme Pad X இந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. உறுதிப்படுத்தப்பட்ட விவரக்குறிப்புகளைத் தவிர, Realme Pad X இன் இந்தியப் பதிப்பு சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மாடலுக்கு ஒத்த ஸ்பெக்ஸ் உடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Realme டேப்லெட் ஸ்டோரேஜ் மற்றும் கேமரா

Realme டேப்லெட் ஸ்டோரேஜ் மற்றும் கேமரா

Realme டேப்லெட் 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரை கொண்ட ஸ்டோரேஜ் அம்சத்துடன் வரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் SD கார்டு வழியாக 512ஜிபி வரை எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் என்றும் கூறப்பட்டுள்ளது. Realme வழங்கும் Pad X ஆனது பின்புறத்தில் 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 105 டிகிரி பீல்ட் ஆப் வியூ கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Realme Pad X விலை என்ன?

Realme Pad X விலை என்ன?

Realme Pad X டிவைஸின் 4GB/64GB மாடலின் விலை CNY 1,299 ஆக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது சுமார் ரூ. 15,000 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இந்த டிவைஸின் 6GB/128GB வேரியண்ட்டின் விலை CNY 1,599 விலையில் சீனாவில் அறிமுகமாகியுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது சுமார் ரூ. 18,400 விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் இதே போன்ற விலை வரம்பு மற்றும் விவரக்குறிப்புகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme Pad X Launched To Be Teased in India on July 26

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X