7,100 mah சக்தியுடன் புதிய ரியல்மி டேப்லெட்.. ஸ்மார்ட்போன் விலையில் அறிமுகமாகிறதா இந்த சாதனம்?

|

சீன தொலைபேசி தயாரிப்பாளரின் முதல் டேப்லெட் மாடலான ரியல்மி பேட் செப்டம்பர் 9 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. டேப்லெட்டின் சில முக்கிய விவரக்குறிப்புகள் நிறுவனத்தால் தற்பொழுது டீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய டேப்லெட்டின் பிராசஸர், பேட்டரி மற்றும் வேகமாக சார்ஜ் செய்யும் திறன்களை நிறுவனம் வழங்குகிறது. இந்நிறுவனத்தின் இந்தியா மற்றும் ஐரோப்பா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷேத் டிவிட்டரில் ரியல்மி பேட்டின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார் மற்றும் ரியல்மி பேட் பற்றிய புதிய விவரங்களை வெளியிட்டுள்ளார். இது பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

ரியல்மி பேட் இந்தியாவில் நாளை அறிமுகமா?

ரியல்மி பேட் இந்தியாவில் நாளை அறிமுகமா?

ரியல்மி பேட் இந்தியாவில் நாளை அறிமுகம் செய்யப்படுகிறது. ரியல்மி நிறுவனத்திடம் இருந்து வெளிவரும் முதல் டேப்லெட் நாளை (செப்டம்பர் 9 ஆம் தேதி) மதியம் 12:30 மணிக்கு ஒரு மெய்நிகர் நிகழ்வு மூலம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ படங்களிலிருந்து, இது ஐபாட் ப்ரோவைப் போன்ற வடிவத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ரியல்மி பேட்டிற்கான இரண்டு குறிப்புகளை ரியல்மி இணையத்தில் பகிர்ந்துள்ளது.

இந்த சாதனம் என்ன சக்தி கொண்ட பேட்டரியை ஆதரிக்கும்?

இந்த சாதனம் என்ன சக்தி கொண்ட பேட்டரியை ஆதரிக்கும்?

ரியல்மி, அதன் தொடக்கத்திலிருந்து, ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள், ஆடியோ கேட்ஜெட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில் புதிதாக இந்த ரியல்மி டேப்லெட்டை அறிமுகம் செய்து, அதன் தொழினுட்ப சாதனங்களின் பட்டியலை நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. இப்போது இந்த சாதனம் என்ன சக்தி கொண்ட பேட்டரியை ஆதரிக்கும் என்பது நிறுவனத்திடம் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

மொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்திய நாசாவின் செவ்வாய் கிரக புகைப்படம்.. இது என்ன தெரியுமா?மொத்த உலகையும் வியப்பில் ஆழ்த்திய நாசாவின் செவ்வாய் கிரக புகைப்படம்.. இது என்ன தெரியுமா?

ரியல்மி மெய்நிகர் நிகழ்வை எங்கு பார்க்கலாம்?

ரியல்மி மெய்நிகர் நிகழ்வை எங்கு பார்க்கலாம்?

ரியல்மி நிறுவனம் அதன் மெய்நிகர் நிகழ்வை அதன் யூடியூப் சேனல் மற்றும் பேஸ்புக் பக்கம் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யும் என்று அறிவித்துள்ளது. Realme TechLife (@realmeTechLife) கைப்பிடியால் பதிவிடப்பட்ட இரண்டு ட்வீட்களின் படி, Realme Pad மீடியாடெக் ஹீலியோ ஜி 80 சிப்செட் உடன் வரும். கேமர்களை இலக்காகக் கொண்டு, சிப்செட் நிலையான பிரேம் விகிதங்களையும் மிரட்டலான படத் தரத்தையும் கொண்டுவருவதாக உறுதியளிக்கிறது. இது ஸ்மார்ட்போன் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

ரியல்மி டேப்லெட் என்ன நிறத்தில் அறிமுகமாகும்

இது கோல்டு மற்றும் க்ரெய் வண்ண விருப்பங்களில் வரலாம் என்று கடந்த கசிவுகள் தெரிவிக்கின்றது. இது 10.4 இன்ச் கொண்ட டிஸ்பிளேவை ஆதரிக்கலாம், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஸ்டைலஸிற்கான ஹவுசிங் ஆகியவற்றைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்று முந்தைய கசிவுகள் தெரிவிக்கிறது. இது ஒற்றை முன் மற்றும் பின் கேமராவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.

ரியல்மி டேப்லெட் சாதனத்தின் சிறப்பம்சம்

ரியல்மி டேப்லெட் சாதனத்தின் சிறப்பம்சம்

ரியல்மி பேட் முன்பக்கத்திலும் பின்புறத்திலும் 8 மெகாபிக்சல் சென்சார் கொண்டிருக்கும் என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இவை இரண்டும் 1.36' இன்ச் சென்சார் f/2.8 துளை உடன் 2.8 மிமீ போக்கால் லெந் கொண்ட, இமேஜ் ஸ்டெபிலைசேஷன் பயன்முறை மற்றும் 65.3 டிகிரி வைட் ஆங்கிள் கொண்ட அம்சத்தை இந்த சென்சார்கள் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு கேமராக்களும் 3,264 x 2,448 பிக்சல்கள் தீர்மானத்தில் படங்களை எடுக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

ஆப்பிள் ஐபோன் 12 வாங்க இதான் சரியான நேரம்.. இதைவிட கம்மி விலையில் கிடைக்க வாய்ப்பில்லை..ஆப்பிள் ஐபோன் 12 வாங்க இதான் சரியான நேரம்.. இதைவிட கம்மி விலையில் கிடைக்க வாய்ப்பில்லை..

7,100 எம்ஏஎச் பேட்டரி

7,100 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி பேட் ஒரு பெரிய 7,100 எம்ஏஎச் பேட்டரியையும் பேக் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இந்த பாட்டரி 65 நாட்கள் நீடித்து நிலைக்கு ஸ்டான்பை நேரத்தை வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. டேப்லெட் 18W பாஷாட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று ட்வீட் கூறுகிறது. 7,100 எம்ஏஎச் பேட்டரி என்பது டேப்லெட் மாடலுக்கு அதிக சக்தியை வழங்கக்கூடியதாக கருதப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Realme Pad Specifications Teased Will Come With 7100 mAh Battery : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X