6400 எம்ஏஎச் பேட்டரி, 4ஜிபி ரேம், வைஃபை+ ஆதரவு- அறிமுகமானது ரியல்மி பேட் மினி: விலை குறைவுதான்!
ரியல்மி பேட் மினி சாதனமானது யூனிசோக் டி616 எஸ்ஓசி, 6400 எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரியல்மி பேட் மினி சாதனம்
ரியல்மி பேட் மினி சாதனமானது யூனிசோக் டி616 எஸ்ஓசி, 6400 எம்ஏஎச் பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி பேட் மினி சாதனத்தின் அடிப்படை மாறுபாடானது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.14,700 என இருக்கிறது. ரியல்மி பேட் மினி ஆனது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்குகிறது.

மெலிதான வடிவமைப்பு
சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ரியல்மி சமீபத்தில் ஆகச்சிறந்த டேப்லெட் ஆக ரியல்மி பேட் மினி சாதனத்தை பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்தது. புதிய ரியல்மி பேட் மினி ஆனது மெலிதான வடிவமைப்புடன் வருகிறது. இந்த ரியல்மி பேட் மினி ஆனது ஆக்டோ கோர் யூனிசோக் டி616 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. ரியல்மி பேட் மினி சாதனமானது டூயல் ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது.

18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இந்த டேப்லெட் ஆனது 8.7 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த சாதனமானது 6400 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. ரியல்மி பேட் மினி சாதனமானது 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா ஆதரவோடு வருகிறது. இந்த சாதனமானது வைஃபை+, எல்டிஇ ஆதரவோடு வருகிறது. ரியல்மி பேட் மினி 8 ஆனது இரண்டு வேரியண்ட் விருப்பங்களில் கிடைக்கிறது.
ரியல்மி பேட் மினி விலை மற்றும் கிடைக்கும் தன்மை
ரியல்மி பேட் மினி விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், ரியல்மி பேட் மினி விலை இந்திய மதிப்புப்படி ரூ.14,700 ஆக இருக்கிறது. அதேபோல் ரியல்மி பேட் மினி சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் இந்திய மதிப்புப்படி ரூ.17,700 ஆக இருக்கிறது. புதிய ரியல்மி பேட் மினி சாதனமானது ப்ளூ மற்றும் க்ரே வண்ண விருப்பங்களில் வருகிறது. தற்போது டேப்லெட் ஆனது பிலிப்பைன்ஸ் லசாடா மூலமாக முன்பதிவு செய்ய கிடைக்கும். இந்தியா உட்பட பிற சந்தைகளில் இது கிடைக்கும் தன்மை மற்றும் விலை குறித்த விவரங்கள் தெரிவிக்கவில்லை.

வைஃபை ப்ளஸ், 4ஜி இணைப்பு ஆதரவு
முன்னதாக ரியல்மி பேட் இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வைஃபை ப்ளஸ், 4ஜி இணைப்புடன் கூடிய டாப் ஆஃப் லைன் வேரியண்ட் ஆக இருக்கிறது. இதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு மாடல் ரூ.17,999 ஆக இருக்கிறது. அதேபோல் வைஃபை அணுகல் கொண்ட 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.13,999 என கிடைக்கிறது. அதேபோல் வைஃபை ப்ளஸ் அணுகல் கொண்ட 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு மாடல் விலை ரூ.15,999 என கிடைக்கிறது.

8.7 இன்ச் எல்சிடி ப்ளஸ் டிஸ்ப்ளே
ரியல்மி பேட் மினி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், புதிய ரியல்மி பேட் மினி சாதனமானது ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு இயங்குகிறது. ரியல்மி பேட் மினி சாதனமானது 8.7 இன்ச் எல்சிடி ப்ளஸ் டிஸ்ப்ளே (1,340x800 பிக்சல்கள்) தீர்மானத்தோடு கிடைக்கிறது. இந்த சாதனமானது 84.59 டிஸ்ப்ளே டூ உடல் விகிதத்தைக் கொண்டிருக்கிறது. அதேபோல் டிஸ்ப்ளே சூரிய ஒளி பயன்முறையைக் கொண்டுள்ளது. இதன்மூலம் சாதனத்தை வெளிப்புறத்தில் பயன்படுத்தினால் இது அதிகபட்ச பிரகாசத்தை வழங்குகிறது. ஹூட்டின் கீழ் ரியல்மி பேட் மினி சாதனமானது ஆக்டோ கோர் யூனிசோக் டி616 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. அதேபோல் ரியல்மி பேட் மினி ஆனது அதிகபட்சமாக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

கேமரா அம்சங்கள் குறித்த விவரங்கள்
கேமரா அம்சங்களை பொறுத்தவரையில் புதிய ரியல்மி பேட் மினி சாதனமானது பின்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என ரியல்மி பேட் மினி ஸ்மார்ட்போனில் 5 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் இந்த சாதனத்தில் மெமரி விரிவாக்க வசதிக்கு என மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் 1 டிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம்.

18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
புதிய ரியல்மி பேட் மினி சாதனமானது இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த சாதனம் ஆன்லைன் வகுப்பு மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என ஒற்றை மைக்ரோ போன் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில் இது ஜிஎஸ்எம், ப்ளூடூத் வி5 உள்ளிட்ட இணைப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் ரியல்மி பேட் மினி சாதனமானது 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 6400 எம்ஏஎச் பேட்டரி அணுகலோடு வருகிறது. அதேபோல் இந்த ரியல்மி பேட் மினி சாதனமானது 372 கிராம் எடை ஆதரவோடு வருகிறது.


Click it and Unblock the Notifications