ஸ்மார்ட்போன் விலையில் Realme Pad வாங்க ரெடியா? அறிமுக தேதி இது தானா?

|

ரியல்மி பேட் இந்தியா வெளியீட்டுத் தேதி மற்றும் நேரம் நிறுவனத்தால் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. ரியல்மி நிறுவனத்திடம் இருந்து வெளிவரும் முதல் டேப்லெட் வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு ஒரு மெய்நிகர் நிகழ்வு மூலம் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ படங்களிலிருந்து, இது ஐபாட் ப்ரோவைப் போன்ற வடிவத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ரியல்மி பேட்டிற்கான இரண்டு குறிப்புகளை ரியல்மி இணையத்தில் பகிர்ந்துள்ளது.

ரியல்மி பேட் ஸ்மார்ட்போன் விலையில் அறிமுகமா?

ரியல்மி பேட் ஸ்மார்ட்போன் விலையில் அறிமுகமா?

மேலும் கடந்த காலங்களில் சில விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களைக் குறிப்பிடும் சில கசிவுகளை நாம் பார்த்திருந்தோம். ரியல்மி, அதன் தொடக்கத்திலிருந்து, ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள், ஆடியோ கேட்ஜெட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பரந்த அளவிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்து. அதன் தொழினுட்ப சாதனங்களின் பட்டியலை விரிவுபடுத்தியுள்ளது.

ரியல்மி பேட் அறிமுகம் எப்போது?

ரியல்மி பேட் அறிமுகம் எப்போது?

ரியல்மி பேட் செப்டம்பர் 9 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு வெளியிடப்படும் என்று ரியல்மி அதன் செய்திக்குறிப்பு மற்றும் அதன் அதிகாரப்பூர்வ இந்தியா வலைத்தளம் மூலம் பகிர்ந்துள்ளது. ரியல்மி நிறுவனம் அதன் மெய்நிகர் நிகழ்வை அதன் யூடியூப் சேனல் மற்றும் பேஸ்புக் பக்கம் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யும் என்று அறிவித்துள்ளது. இது செப்டம்பர் 5 ஆம் தேதி மேலும் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி குளிப்பார்கள் தெரியுமா? முழு வீடியோவை வெளியிட்ட பெண் விண்வெளி வீரர்..விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எப்படி குளிப்பார்கள் தெரியுமா? முழு வீடியோவை வெளியிட்ட பெண் விண்வெளி வீரர்..

ரியல்மி நிறுவனத்தின் முதல் டேப்லெட் இது தானா?

ரியல்மி நிறுவனத்தின் முதல் டேப்லெட் இது தானா?

ரியல்மி பேட் 2018 ஆம் ஆண்டு முதல் வணிகத்தில் ஒரு பேச்சு பொருளாக இருக்கும் முதல் டேப்லெட் ஆகும். கடந்த மூன்று ஆண்டுகளில், நிறுவனம் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள், ஆடியோ சாதனங்கள், பவர் பேங்க்கள் மற்றும் கேமராக்கள், ஸ்மார்ட் பல்புகள், வெயிட் மெஷின் போன்ற ஸ்மார்ட் சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி பேட் சாதனம் 6.9 மிமீ தடிமன் கொண்டதாக டீஸ் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி பேட் ஒரு அலுமினிய யூனிபாடி கட்டுமானத்தைக் கொண்டிருக்கலாம்.

10.4 இன்ச் கொண்ட டிஸ்பிளே

10.4 இன்ச் கொண்ட டிஸ்பிளே

இது கோல்டு மற்றும் க்ரெய் வண்ண விருப்பங்களில் வரலாம் என்று கடந்த கசிவுகள் தெரிவிக்கின்றது. இது 10.4 இன்ச் கொண்ட டிஸ்பிளேவை ஆதரிக்கலாம், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஸ்டைலஸிற்கான ஹவுசிங் ஆகியவற்றைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்று முந்தைய கசிவுகள் தெரிவிக்கிறது. இது ஒற்றை முன் மற்றும் பின் கேமராவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.

ரொம்ப கம்மி சார்., உண்மையாவா., இவ்வளவுதான் விலையா?- 4ஜி ஜியோபோன் நெக்ஸ்ட் விலை, அம்சம் லீக்!ரொம்ப கம்மி சார்., உண்மையாவா., இவ்வளவுதான் விலையா?- 4ஜி ஜியோபோன் நெக்ஸ்ட் விலை, அம்சம் லீக்!

கேமரா அம்சம் எப்படி இருக்கும்?

கேமரா அம்சம் எப்படி இருக்கும்?

ரியல்மி பேட் முன்பக்கத்திலும் பின்புறத்திலும் 8 மெகாபிக்சல் சென்சார் கொண்டிருக்கும் என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. இவை இரண்டும் 1.36' இன்ச் சென்சார் f/2.8 துளை உடன் 2.8 மிமீ போக்கால் லெந் கொண்ட, இமேஜ் ஸ்டெபிலைசேஷன் பயன்முறை மற்றும் 65.3 டிகிரி வைட் ஆங்கிள் கொண்ட அம்சத்தை இந்த சென்சார்கள் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு கேமராக்களும் 3,264 x 2,448 பிக்சல்கள் தீர்மானத்தில் படங்களை எடுக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.

Best Mobiles in India

English summary
Realme Pad India Launch Set for September 9 Through A Press Release : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X