Home
News

புதுசா Tablet வாங்காதீங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மக்களே.. பட்ஜெட்ல சூப்பரா ஒரு டேப்லெட் வருது.. என்ன மாடல்?

ரியல்மி (Realme) நிறுவனம் புதிதாக பட்ஜெட் செக்மென்ட்டில் புதிய டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. இது இந்திய சந்தையில் விரைவில் ரியல்மி பேட் 3 (Realme Pad 3) என்ற பெயரில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய ரியல்மி பேட் 3 சாதனம் கடந்த வருடம் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி பேட் 2 (Realme Pad 2) டேப்லெட் சாதனத்தின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷன் மாடலாக வெளிவருகிறது. நீங்கள் பட்ஜெட் விலையில் ஒரு தரமான டேப்லெட் சாதனத்தை இந்தியாவில் வாங்க திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்த ரியல்மி பேட் 3 அறிமுகத்திற்காக காத்திருக்கலாமே பிரெண்ட்ஸ்.

ரியல்மி பேட் 3 (Realme Pad 3) டேப்லெட்டின் அறிமுகத்திற்காக நீங்கள் காத்திருக்கும் இந்த வேளையில், இந்த புதிய பட்ஜெட் விலை டேப்லெட் சாதனம் குறித்த சிறப்பம்ச விபரங்களை தெரிந்துகொள்ளலாம் வாங்க. ரியல்மி பேட் 3 (Realme Pad 3) சாதனம் இந்தியாவின் தரசான்றுதல் தளமான BIS தளத்தில் சமீபத்தில் காணப்பட்டுள்ளது. ரியல்மி பேட் 3 (Realme Pad 3) பற்றிய விபரங்கள் இதோ.

புதுசா Tablet வாங்காதீங்க.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க மக்களே..

ரியல்மி பேட் 3 பட்ஜெட் செக்மென்ட் டேப்லெட் (Realme Pad 3 Budget Segment Tablet):

இந்தியாவின் தரசான்றுதல் தளமான BIS தளத்தில் RMP2402 என்ற மாடல் எண் உடன் ரியல்மி பேட் 3 (Realme Pad 3) சாதனம் காணப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இதே மாடல் எண்ணுடன் கடந்த ஜூலை மாதத்தில் ஒரு பட்ஜெட் டேப்லெட் சாதனம் குறித்த தகவல்கள் இணையத்தில் லீக் ஆனது. அது இப்போது ரியல்மி பேட் 3 (Realme Pad 3) டேப்லெட் சாதனம் தான் என்பதை சமீபத்திய லீக் தகவல் உறுதி செய்துள்ளது.

என்ன தான் இந்திய தரசான்றுதல் தளத்தில் இந்த புதிய ரியல்மி பேட் 3 (Realme Pad 3) பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், இதன் முழு சிறப்பம்சம் குறித்த எந்த தகவலையும் வலைப்பக்கம் காண்பிக்கவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது. ஆனாலும், மற்றொரு லீக் தகவலில் வெளிவரவிருக்கும் புதிய ரியல்மி பேட் 3 (Realme Pad 3) குறித்த சிறப்பம்ச தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆகையால், அதை வைத்து இந்த டேப்லெட்டில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்பதை இப்போது தெரிந்துகொள்ளலாம். ரியல்மி பேட் 3 (Realme Pad 3) சாதனம் 12" இன்ச் கொண்ட 2K டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 3264×2448 பிக்சல் கொண்ட டிஸ்பிளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 8 மெகா பிக்சல் கொண்ட ரியர் கேமரா உடன் வருகிறது. இது முன்பக்கத்தில் 5 மெகா பிக்சல் கொண்ட OIS ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது.

ரியல்மி பேட் 3 விலை என்ன? (Realme Pad 3 Price):

முன்பக்க செல்பி கேமராவில் EIS ஆதரவு இடம்பெறவும் வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. இது வைஃபை மற்றும் 4ஜி எல்டிஇ வெர்ஷன் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரியல்மி பேட் 3 (Realme Pad 3) சாதனம் 8000mAh பேட்டரி உடன் 33W வயர்டு சார்ஜிங் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் ரூ. 20,000 விலைக்குள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Pad 3 Budget-Friendly Tablet arriving in India Don't Buy Any Other Tablet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X