Home
News

ஆர்டருக்கு மேல் ஆர்டர்.. ரூ.17,999க்கு ரியல்மி டேப்லெட்.. 8360mAh பேட்டரி.. 16GB ரேம் வேற.. யாரு விடுவா?

இந்தியாவில் முதல்முறையாக 16 ஜிபி ரேம் , 8360mAh பேட்டரி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே என்று பட்டாசான அம்சங்களுங்களுடன் மலிவான விலைக்கு ரியல்மி பேட் 2 (Realme Pad 2) விற்பனைக்கு வந்துள்ளது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

ரியல்மி பேட் 2 அம்சங்கள் (Realme Pad 2 Specifications): இந்த டேப்லெட் 11.5 இன்ச் (2000 x 1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 120Hz, 60Hz மற்றும் 40Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் வருகிறது. அதோடு 450 பீக் பிரைட்னஸ் மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) கொடுக்கப்பட்டுள்ளது.

ரூ.17,999க்கு ரியல்மி டேப்லெட்.. 8360mAh பேட்டரி வேற.. யாரு விடுவா?

ஆண்ட்ராய்டு ஓஎஸ் 13 (Android 13 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் கொடுக்கப்பட்டுள்ளது. அதனுடன் மற்றும் ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) ஓஸ் மற்றும் ஆர்ம் மாலி - ஜி57 எம்சி2 (Arm Mali-G57 MC2) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த ரியல்மி டேப்லெட் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொண்டிருக்கிறது. அதோடு 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என்று 2 மாடல்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், மைக்ரோஎஸ்டி (microSD) கார்டு சப்போர்ட் வருகிறது. இந்த ரியல்மி டேப் 2 டேப்லெட்டில் எல்இடி பிளாஷ் லைட்டுடன் 12 எம்பி மெயின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த கேமரா எச்டி (HD) வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. அதோடு 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. இந்த ரியல்மி டேப்லெட்டில் முக்கிய அம்சமாக 33W சூப்பர்வூக் (SuperVOOC ) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8360mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய பேட்டரியை ஒருமுறை ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 4 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும்.

மேலும், இந்த டேப்லெட்டில் டைப்-சி (Type-C) ஆடியோ போர்ட், சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் சென்சார் (Side-Mounted Fingerprint Sensor), குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos) சவுண்டிங் சப்போர்ட், ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வைபை 802.11 (Wifi 802.11) போன்ற அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த ரியல்மி டேப்லெட்டின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ. 19,999ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.22,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி (Realme) தளங்களில் ப்ரீ-புக்கிங் தொடங்கி ஆர்டர்களில் பட்டையை கிளப்பியது.

இப்போது, விற்பனைக்கே வந்துவிட்டது. இந்த டேப்லெட்டுக்கு அதிரடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுவதால் ஆர்டருக்கு மேல் ஆர்டர் குவிந்து வருகிறது. அதாவது, பிளிப்கார்ட்டில் ஐசிஐசிஐ கார்டுகளுக்கு ரூ.1500 உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதோடு எஸ்பிஐ மற்றும் எச்டிஎஃப்சி வங்கி கார்டுகளுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை உடனடி டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதோடு மாணவர்களுக்கும் பிரத்யேகமாக ரூ.500 டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.

இப்படி ரூ.2000 டிஸ்கவுண்ட் பெற்றுக்கொள்ள முடியும். அந்த வகையில் ரூ.17,999க்கு இந்த டேப்லெட்டை வாங்கிக்கொள்ளலாம். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Pad 2 With 8360mAh Battery Goes Sale On Flipkart in India Price, Specifications, Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X