Home
News

ஆர்டர் மேல் ஆர்டர்.. 11.5 இன்ச் டிஸ்பிளே.. 16GB ரேம்.. 8360mAh பேட்டரி.. Realme Pad 2 சலுகை விலை என்ன?

ரியல்மி (Realme) நிறுவனத்தின் புதிய டேப்லெட் சாதனமான ரியல்மி பேட் 2 டேப்லெட் (Realme Pad 2 Tablet) இப்போது மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் (Budget smartphone) வாங்கும் விலையில் நிறுவனம் உங்களுக்கு டேப்லெட் சாதனத்தை வழங்குகிறது.

6.6" இன்ச் கொண்ட ஒரு பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்கும் விலையில், ரியல்மி நிறுவனம் இப்போது 11.5" இன்ச் டிஸ்பிளே (11.5" inch display) கொண்ட டேப்லெட் சாதனத்தை வாங்க வாய்பளித்துள்ளது. சிறிய டிஸ்பிளேவில் திரைப்படம், கேம் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளை பயன்படுத்தி போர் அடித்து விட்டதா? அப்படியானால், நீங்கள் வாங்க வேண்டிய சாதனம் இந்த ரியல்மி பேட் 2 (Realme Pad 2) சாதனம் தான்.

ஆர்டர் மேல் ஆர்டர்.. 11.5 இன்ச் டிஸ்பிளே.. 16GB ரேம்.. 8360mAh பேட்டரி

சீன நிறுவனமான ரியல்மி, இந்த ஆண்டின் ஜூலை மாதம் அதன் லேட்டஸ்ட் ரியல்மி பேட் 2 டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்தது. இந்த புதிய ரியல்மி பேட் 2 (Realme Pad 2) சாதனம் ஆகஸ்ட் 1ம் தேதி 2023 இல் விற்பனைக்கு வந்தது. விற்பனைக்கு வந்த சில மணி நேரங்களிலேயே ரியல்மி பேட் 2 டேப்லெட்டின் (Realme Pad 2 sale) அணைத்து யூனிட்களும் விற்பனையானது.

மீண்டும் விற்பனைக்கு வந்த ரியல்மி பேட் 2 (Realme Pad 2 is back on sale):

அனைத்து ஸ்டாக்களையும் விற்பனை செய்ய ரியல்மி இப்போது மீண்டும் விற்பனையை துவங்கியுள்ளது. மீண்டும் இந்திய சந்தைக்குள் ரியல்மி பேட் 2 சாதனம் விற்பனைக்கு வந்துள்ளது. இப்போது ரியல்மி நிறுவனம் சில சலுகையுடன் ரியல்மி பேட் 2 (Realme Pad 2 offers) சாதனத்தை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இந்த விற்பனை டிசம்பர் 5ம் (December 5, 2023) தேதி முதல் துவங்கியுள்ளது.

இந்த முறை ரியல்மி பேட் 2 சாதனம் ரூ.18,499 என்ற விலையுடன் கூடுதல் சலுகையையும் பெறுகிறது. இந்த விலை அமேசான் (Amazon) தளத்தில் கிடைக்கும் சலுகையுடன் கிடைக்கும் விலையாகும். இந்த டேப்லெட் சாதனம் இப்போது பிளிப்கார்ட் (Flipkart) தளம் மற்றும் ரியல்மி இந்தியா (Realme India) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கம் வழியாகவும் வாங்க கிடைக்கிறது.

ரியல்மி தளத்தில் இந்த டேப்லெட் சாதனம் மீது மொபிவிக் (MobiKwik) சலுகையாக ரூ.1000 கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. HDFC மற்றும் Canara Bank வாடிக்கையாளர்களுக்கும் சலுகைகள் கிடைக்கிறது. EMI விருப்பும் மற்றும் நோ-காஸ்ட் EMI விருப்பமும் கிடைக்கிறது. ரியல்மி பேட் 2 (Realme Pad 2) சாதனம் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் உடன் ரூ.19,999 வருகிறது.

ஆர்டர் மேல் ஆர்டர்.. 11.5 இன்ச் டிஸ்பிளே.. 16GB ரேம்.. 8360mAh பேட்டரி

அதேபோல், இதன் ஹை-எண்டு மாடலான 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி கொண்ட மாடல் ரூ.22,999 என்ற விலையில் வருகிறது. இந்த சாதனம் 16ஜிபி டைனமிக் ரேம் அம்சத்தையும் ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது இப்போது இன்ஸ்பிரேஷன் க்ரீன் (Inspiration Green) மற்றும் இமேஜினேஷன் கிரெய் (Imagination Grey) நிறங்களில் வாங்க கிடைக்கிறது.

ரியல்மி பேட் 2 சிறப்பம்சம் (Realme Pad 2 specifications):
- 11.5" இன்ச் IPS LCD உடன் 1 பில்லியன் கலர் டிஸ்பிளே (11.5" inch display)
- 120Hz ரெஃப்ரஷ் ரேட் (120Hz Refresh rate)
- மீடியாடெக் ஹீலியோ ஜி99 சிப்செட் (Mediatek Helio G99)
- 6ஜிபி ரேம் / 128ஜிபி ஸ்டோரேஜ், 8ஜிபி ரேம் / 256ஜிபி ஸ்டோரேஜ் (6GB RAM/128GB, 8GB RAM/256GB)
- microSDXC கார்டு ஸ்லாட்
- ஆண்ட்ராய்டு 13 உடன் ரியல்மி UI 4 (Android 13, Realme UI 4)
- 8 MP செல்பி கேமரா மற்றும் 8 MP மெயின் கேமரா (Camera)
- 33W வயர்டு பாஸ்ட் சார்ஜிங் (33W wired fast charging)
- 8360mAh பேட்டரி (Battery)

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Pad 2 Goes On Sale Again At Rs 18499 With Offer Via Amazon Flipkart and Realme India Online Site
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X