Home
News

விட்டா கிடைக்காது.. ரூ.17,999 பட்ஜெட்டில் 8360mAh பேட்டரி டேப்லெட்.. ப்ரீ-புக்கிங் பிச்சிக்கிட்டு போகுது!

இந்திய மார்கெட்டில் முதல் முறையாக ரியல்மி நிறுவனத்தின் ரியல்மி பேட் 2 (Realme Pad 2) டேப்லெட் 8360mAh பேட்டரி, 120Hz டிஸ்பிளே, 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என்று பிரம்மாண்ட அம்சங்களுடன் வெறும் ரூ.17,999க்கு விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த ரியல்மி பேட் 2 டேப்லெட்டின் ப்ரீ-புக்கிங் பிளிப்கார்ட்டில் தொடங்கியிருக்கிறது. வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் புக்கிங் செய்பவர்களுக்கு எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ, எஸ்பி வங்கி கார்டுகள் மூலம் நம்ம முடியாத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ரியல்மி பேட் 2 டேப்லெட்டின் மற்ற அம்சங்கள் என்ன? எவ்வளவு தள்ளுபடி கிடைக்கிறது? உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு.

ரூ.17,999 பட்ஜெட்டில் 8360mAh பேட்டரி டேப்லெட்.. எந்த மாடல்?

ரியல்மி பேட் 2 அம்சங்கள் (Realme Pad 2 Specifications): இந்த டேப்லெட் 120Hz, 60Hz மற்றும் 40Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 11.5 இன்ச் (2000x1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 450 பீக் பிரைட்னஸ் மற்றும் டிசி டிம்மிங் (DC Dimming) வருகிறது.

ஆண்ட்ராய்டு ஓஎஸ் 13 (Android 13 OS) மற்றும் ரியல்மி யுஐ 4.0 (Realme UI 4.0) ஓஸ் கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி99 6என்எம் (Octa Core MediaTek Helio G99 6nm) சிப்செட் வருகிறது. அதனுடன் ஆர்ம் மாலி - ஜி57 எம்சி2 (Arm Mali-G57 MC2) கிராபிக்ஸ் கார்டு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ரியல்மி பேட் 2 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி என்று 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த ரேம் உடன் 8 ஜிபி விர்ச்சுவல் ரேம் கொடுக்கப்படும். அதோடு மைக்ரோஎஸ்டி கார்டு சப்போர்ட் இருக்கிறது. இந்த டேப்லெட்டில் எல்இடி பிளாஷ் லைட்டுடன் 12 எம்பி மெயின் கேமரா வருகிறது.

இந்த கேமரா மூலம் எச்டி (HD) தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்துகொள்ள முடியும். 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 33W சூப்பர்வூக் (SuperVOOC ) ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 8360mAh பேட்டரி வருகிறது. இவ்வளவு பெரிய பேட்டரி என்பதால், ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 4 நாட்களுக்கும் மேல் பேக்கப் கிடைக்கும்.

மேலும், மிட்-ரேன்ஞ் டேப்லெட்களில் கொடுக்கப்படும் சைடு மவுண்டென்ட் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Side-Mounted Fingerprint Scanner), டைப்-சி (Type-C) ஆடியோ போர்ட், குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers), டால்பி அட்மாஸ் (Dolby Atmos), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), வைபை 802.11 உள்ளிட்ட அம்சங்கள் வருகின்றன. இதுவொரு 4ஜி சப்போர்ட் மாடல் டேப்லெட்டாகும்.

இந்த ரியல்மி பேட் 2 டேப்லெட்டின் விலையை பொறுத்தவரையில், 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ. 19,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.22,999ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி (Realme) தளங்களில் ப்ரீ-புக்கிங் தொடங்கியிருக்கிறது. வரும் ஜூலை 31ஆம் தேதி வரை ப்ரீ-ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த ப்ரீ-ஆர்டருக்கு அதிரடி சலுகைகள் வழங்கப்படுகிறது. அதாவது, பிளிப்கார்ட்டில் ஆர்டர் செய்தால், ஐசிஐசிஐ கார்டுகளுக்கு (ICICI Cards) ரூ.1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. மேலும், எஸ்பிஐ (SBI) மற்றும் எச்டிஎஃப்சி (HDFC) வங்கி கார்டுகளுக்கும் ரூ.500 முதல் ரூ.1000 வரை தள்ளுபடி வழங்கப்படும். அதோடு மாணவர்கள் ப்ரீ-ஆர்டர் செய்தால் ரூ.500 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்கும். அதுவரையில் மட்டுமே வங்கி ஆஃபர்களை பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்து கொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Pad 2 Available For Pre-bookings on Flipkart in India Check Price Specifications Sales Offers
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X