ஆர்டர் தெறிக்குது.. புதுசா வந்த பட்ஜெட் விலை Realme 5ஜி போன் மீது திடீரென ரூ.2300 டிஸ்கவுண்ட்.. என்ன மாடல்?
கடந்த 2025 பிப்ரவரி மாதம் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் பிரிவின் கீழ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு ரியல்மி ஸ்மார்ட்போன் மீது தற்போது ரூ.2300 டிஸ்கவுண்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. என்ன மாடல்? அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? நாம் இங்கே பேசுவது ரியல்மி பி3எக்ஸ் 5ஜி (Realme P3x 5G) ஸ்மார்ட்போனை பற்றித்தான். முன்னரே குறிப்பிட்டபடி இது கடந்த பிப்ரவரி 2025 இல் ரியல்மி பி3 ப்ரோ 5ஜி (Realme P3 Pro 5G) ஸ்மார்ட்போனுடன் சேர்த்து இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுகத்தின் போது ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 6GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB ரேம் + 128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் முறையே ரூ.13,999 மற்றும் ரூ.14,999 க்கு வாங்க கிடைத்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் மீது "வரையறுக்கப்பட்ட கால தள்ளுபடி" அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை மிகவும் மலிவான விலைக்கு வாங்க முடியும்.
அசல் விலை VS ஆபர் விலை: ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலையில் ரூ.1,000 தள்ளுபடி மற்றும் ரூ.1,300 தள்ளுபடி கூப்பன் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது மொத்தம் ரூ.2300 டிஸ்கவுண்ட். இவ்விரு தள்ளுபடியும் ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் 6GB ரேம் மற்றும் 8GB ரேம் மாடல்களின் விலைகளை முறையே ரூ.11,699 மற்றும் ரூ.12,699 ஆக குறைக்கின்றன.

மேலும் இந்த சலுகை இன்று, அதாவது ஜூன் 26 வரை மட்டுமே செல்லுபடியாகும் என்றும் ரியல்மி நிறுவனம் அறிவித்துள்ளது. ரியல்மி பி3எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ரியல்மி இந்தியா இ-ஸ்டோர் (Realme India e-store) வழியாக வாங்க கிடைக்கிறது. மேலும் இது Lunar Silver, Midnight Blue மற்றும் Stellar Pink ஆகிய 3 கலர்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ரியல்மி பி3எக்ஸ் 5ஜி முக்கிய அம்சங்கள்:
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 6.7-இன்ச் FHD+ (1080 x 2400 பிக்சல்ஸ்) LCD டிஸ்பிளே
- 8GB வரை RAM மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ்
- மீடியாடெக் டைமன்சிட்டி 6400 சிப்செட் (MediaTek Dimensity 6400 SoC)
- Android 15 அடிப்படையிலான Realme UI 6 ஓஎஸ்
- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 2 மெகாபிக்சல் சென்சார்
- முன்பக்கத்தில் 8-மெகாபிக்சல் செல்பீ சென்சார்
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- 6,000mAh பேட்டரி
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68 மற்றும் IP69 ரேட்டிங்
கடந்த ஜூன் 20 முதல் விற்பனைக்கு வந்த ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது மீடியாடெக் டைமன்சிட்டி 6300 (MediaTek Dimensity 6300) சிப்செட் உடன் வருகிறது. இது 6ஜிபி வரை ரேம் மற்றும் 128ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
32 மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமராவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் MIL-STD-810H இராணுவ-தர நீடித்துழைப்பு சான்றிதழையும் (Military-grade durability certification) கொண்டுள்ளது. சுவாரசியமாக இது பட்ஜெட் விலை மாடல் ஆக இருந்தாலும் கூட 6,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ரியல்மி நார்சோ 80 லைட் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: இது 4ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவைகளின் அசல் விலை முறையே ரூ.10,499 மற்றும் ரூ.11,499 ஆகும்.


Click it and Unblock the Notifications