டபுள் விருந்துக்கு ரெடியா.. வரிசை கட்டி வரும் Realme P3 சீரிஸ் போன்கள்.. பட்ஜெட்ல ஒன்னு.. பிரீமியம்ல ஒன்னு..
ரியல்மி (Realme) நிறுவனம் அதன் P சீரிஸ் வரிசையில் ரியல்மி P1, P1 ஸ்பீட், P1 ப்ரோ மற்றும் P2 ப்ரோ போன்ற மாடல்களை வைத்துள்ளது. கடந்த மாதம் இந்த வரிசையில் புதிய சேர்ப்பாக இணையும் மாடலாக ரியல்மி P3 அல்ட்ரா (Realme P3 Ultra) பார்க்கப்பட்டது. இதற்கிடையே சமீபத்திய லீக் தகவல் ரியல்மி P3 ப்ரோ (Realme P3 Pro) என்ற புதிய மாடலையும் ரியல்மி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது என்பதை காண்பிக்கிறது. இந்த புதிய Realme P3 Pro மாடலின் விபரங்களை இப்போது அறிந்துகொள்ளலாம்.
ரியல்மி நிறுவனம் இந்த மாதமும், அடுத்த மாதமும் தொடர்ச்சியாக 3 ஸ்மார்ட்போன்களை (smartphone) அறிமுகம் செய்து இந்தியவர்களுக்கு விருந்து வைக்க திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது. ரியல்மி நிறுவனம் வரும் ஜனவரி 16, 2025 ஆம் தேதி அதன் புதிய Realme 14 Pro சீரிஸ் வரிசையை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. இதனை தொடர்ந்து ஜனவரி (January)மாத இறுதியில் மற்றொரு போனை நிறுவனம் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

டபுள் விருந்துக்கு ரெடியா.. வரிசை கட்டி வரும் Realme P3 சீரிஸ் போன்கள்:
ஜனவரி மாத இறுதியில் எதிர்பார்க்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் சாதனமாக ரியல்மி P3 அல்ட்ரா (Realme P3 Ultra) மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும். இதனை தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதத்தில் நடுவே ரியல்மி நிறுவனம் அதன் அடுத்த பட்ஜெட் ஸ்மார்ட்போன் சாதனமான ரியல்மி P3 ப்ரோ (Realme P3 Pro) மாடலை அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்திய தகவல் படி, ரியல்மி P3 ப்ரோ (Realme P3 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் இந்தியாவின் BIS தளத்தில் காணப்பட்டுள்ளது. இந்த தளத்தில் ரியல்மியின் புதிய ஸ்மார்ட்போன் மாடலாக RMX5032 என்ற மாடல் எண்ணுடன் (model number) இந்த சாதனம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக லீக் தகவல்கள் குறிப்பிடுகின்றன. BIS தளத்தில் காணப்பட்ட சாதனம் நிச்சயம் ரியல்மி P3 ப்ரோ (Realme P3 Pro) தான் கூறப்படுகிறது.
ரியல்மி P3 ப்ரோ (Realme P3 Pro):
இந்த புதிய ரியல்மி P3 ப்ரோ (Realme P3 Pro) ஸ்மார்ட்போன் சாதனத்தை ரியல்மி நிறுவனம் பிப்ரவரி (February) மாதம் மூன்றாம் வாரத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த போனின் அறிமுகத்திற்கு முன்பாக ரியல்மி நிறுவனம் இதே சீரிஸ் வரிசையில் உள்ள பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலான Realme P3 Ultra மாடலை ஜனவரி இறுதியில் அறிமுகம் செய்யுமென்று கூறப்படுகிறது.
இந்த புதிய ரியல்மி P3 ப்ரோ (Realme P3 Pro) ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடலுடன் அறிமுகம் செய்யலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனத்தை இந்திய மக்கள் பட்ஜெட் விலை (budget price) பிரிவில் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. காரணம், ரியல்மி P3 அல்ட்ரா (Realme P3 Ultra) ஸ்மார்ட்போன் பிரீமியம் விலையில் (premium costlier price) இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி P3 அல்ட்ரா (Realme P3 Ultra):
ரியல்மி P3 அல்ட்ரா (Realme P3 Ultra) கிலோசி பேக் பேனல் உடன் க்ரேய் நிறத்துடன், 12HB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் வேரியண்ட் (storage variants) கொண்ட மாடலில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இத்துடன் கூடுதல் நிறம் மற்றும் கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பங்களை இந்திய மக்கள் எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் ப்ரோ மாடல் வாங்க ஆசைப்படும் வாடிக்கையாளர்களுக்கு ரியல்மி P3 ப்ரோ (Realme P3 Pro) நல்ல தேர்வாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








