லைட்ஸ் OFF.. சூப்பர் Glow.. இருளில் ஜொலிக்கும் முதல் பட்ஜெட் Mobile.. எந்த மாடல்? என்ன விலை? விற்பனை எப்போ?
ரியல்மி (Realme) நிறுவனம் இந்தியாவில் வரும் பிப்ரவரி 18, 2025 ஆம் தேதி அதன் புதிய ஸ்மார்ட்போன் மாடலான ரியல்மி P3 ப்ரோ (Realme P3 Pro) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ரியல்மி நிறுவனம் இதை பட்ஜெட் விருப்பமாக அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இதுவரை எந்தவொரு மொபைல் நிறுவனமும் பட்ஜெட் செக்மென்ட்டில் வழங்காத இருளில் ஜொலிக்கும் முதல் ஸ்மார்ட்போன் (Glow in the dark mobile) சாதனமாக இந்த Realme P3 Pro போனை நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்களை பார்க்கலாம்.
Realme P3 Pro ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் வரும் பிப்ரவரி 18ம் தேதி அறிமுகம் செய்வது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போனை நிறுவனம் நெபுலா க்ளோவ் (Nebula Glow), சாட்டர்ன் பிரவுன் (Saturn Brown) மற்றும் கேலக்ஸி பரப்பில் (Galaxy Purple) ஆகிய மூன்று நிறங்களில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் நெபுலா க்ளோவ் மிகவும் வித்யாசமான மாடலாக வெளிவருகிறது.

ஆம், இதன் பெயர் அடையாளம் குறிப்பிடுவது போல, இந்த புதிய Realme P3 Pro ஸ்மார்ட்போனின் Nebula Glow நிற மாடல் தான் இருளில் ஒளிரும் படியான ஒரு வித்தியாசமான வடிவமைப்பை பெற்றுள்ளது. பட்ஜெட் செக்மெயில் க்ளோக் இன் தி டார்க் போனாக (budget segments first glow in the dark mobile) வெளிவரும் முதல் ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது.
Nebula Glow மாடல் சாதனம் ஒளியை உறிஞ்சு, பின்னர் அந்த ஒளியை இருட்டில் ஒளிரும் தன்மையை கொண்ட பிரத்தியேகமான ஃபைபர் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இருளில் இது ஜொலிக்கும் விதம் நம் கண்களுக்கு விருந்தாக அமைகிறது. இந்த ஒரு காரணத்திற்காகவே இந்த Realme P3 Pro ஸ்மார்ட்போனின் Nebula Glow நிற மாடலுக்கு விற்பனையின் போது அதிக டிமாண்ட் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி P3 ப்ரோ சிறப்பம்சம் (Realme P3 Pro specifications):
- 1.5K ஆதரவுடன் குவாட் கர்வுடு எட்ஜ்ப்ளோ டிஸ்பிளே (display)
- குவால்காம் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 3 சிப்செட் (Qualcomm Snapdragon 7s Gen 3 chipset)
- 8GB ரேம் + 128GB, 8GB ரேம் + 256GB and 12GB ரேம் (RAM) + 256GB ஸ்டோரேஜ் (storage)
- ஏரோஸ்பேஸ் வீசி கூலிங் சிஸ்டம் (Aerospace VC Cooling System)
- பல AI அம்சங்கள்
- 50MP உடன் OIS கேமரா
- 80W பாஸ்ட் சார்ஜிங்
- 6000mAh பேட்டரி
இந்த புதிய ரியல்மி P3 ப்ரோ (Realme P3 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் செக்மென்ட்டில் இதுவரை கிடைக்காத பல அம்சங்களை வழங்கும் ஒரு சூப்பர் ஸ்மார்ட்போனாக வெளிவர தயார்நிலையில் இருக்கிறது. இன்னும் 5 நாட்களில் இந்த சாதனம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் விலை தோராயமாக ரூ. 15,000 முதல் ரூ. 20,000 விலைக்குள் இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இது Realme வலைத்தளம் மற்றும் பிளிப்கார்ட் (Flipkart) வழியாக வாங்க கிடைக்கும்.


Click it and Unblock the Notifications








