மிரளுது மார்க்கெட்.. ரூ.5400 விலையில் 2TB ஸ்டோரேஜ் உடன் இப்படியொரு ஸ்மார்ட்போனா? எந்த மாடல்?
ரியல்மி (realme) நிறுவனம், அதன் முதல் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலான ரியல்மி நோட் 50 (Realme Note 50) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இது நிறுவனத்தின் அடுத்த பட்ஜெட் (Budget) விலை ஸ்மார்ட்போனாக வெளிவருகிறது.
இந்த புதிய ரியல்மி நோட் 50 (Realme Note 50) ஸ்மார்ட்போன் டிவைஸ் வடிவமைப்பு, இந்தியாவில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மிகவும் பிரபலமான ரியல்மி C53 ஸ்மார்ட்போன் டிஸைனுடன் ஒத்துப்போகிறது. ரியல்மி C53 (realme C53) போனில் பார்க்கப்பட அதே டிஸ்பிளே, சிப்செட் மற்றும் பேட்டரி ரியல்மி நோட் 50 (Realme Note 50) போனிலும் காணப்பட்டுள்ளது.

ஆனால், இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் இடையில் இருக்கும் ஒரே வேறுபாடாக கேமரா அம்சம் மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ரியல்மி நோட் 50 (Realme Note 50) ஸ்மார்ட்போன் சாதனத்தில் டவுன்கிரேட் செய்யப்பட்ட கேமரா அம்சங்களை ரியல்மி வழங்கியுள்ளது. ரியல்மி C53 (realme C53) போனுடன் ஒப்பிடுகையில், ரியல்மி நோட் 50 போனின் கேமரா அம்சம் சுமாராக இருக்கிறது.
ரியல்மி நோட் 50 (Realme Note 50):
இந்த போனை மிகவும் குறைந்த விலையில் வழங்க ரியல்மி முடிவு செய்ததினால், இந்த மாற்றத்தை கொண்டுவந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த புதிய ரியல்மி நோட் 50 (realme note 50) ஸ்மார்ட்போன் வரும் ஜனவரி 23ல் அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம். இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது 6.74" இன்ச் 1600 x 720 பிக்சல் கொண்ட HD+ IPS LCD டிஸ்பிளேவை வழங்குகிறது.
இதன் ரெஃப்ரஷ் ரேட் 90Hz வரை செயல்படுகிறது. இது 180Hz டச் சாம்பிளிங் ரேட் உடன் 560 நீட்ஸ் பீக் பிரைட்னஸ் உடன் வருகிறது. இது யூனிஸாக் T612 (UNISOC T612) ஆக்டா கோர் 12nm பிராசஸர் உடன் வருகிறது. இது மாலி G57 ஜிபியு (Mali-G57 GPU) உடன் வருகிறது. இது 4GB LPDDR4X ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ்ஜை (storage) ஆதரிக்கிறது.

இந்த புதிய ரியல்மி நோட் 50 (Realme Note 50) ஸ்மார்ட்போன் சாதனம் 2TB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் (externel storage) ஆதரவை மைக்ரோSD (microSD) வழியாக வழங்குகிறது. இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான ரியல்மி UI T எடிஷன் உடன் இயங்குகிறது. இது டூயல் நானோ சிம் கார்டுகளை ஆதரிக்கிறது.
இந்த பட்ஜெட் ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்களை பற்றி பேசுகையில், இது 13MP ரியர் கேமரா உடன் B&W டெப்த் சென்சார் மற்றும் LED பிளாஷ் உடன் வருகிறது. முன்பக்கத்தில், இந்த சாதனம் 5MP செல்பி கேமராவை கொண்டுள்ளது. இதில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.இதில் 3.5 ஆடியோ ஜாக் வழங்கப்பட்டுள்ளது.
ரியல்மி நோட் 50 விலை (Realme Note 50 Price):
இந்த போன் 5000mAh பேட்டரி உடன் 10W சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த புதிய ரியல்மி நோட் 50 (Realme Note 50) ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் பிலிப்பைன்ஸ் நாட்டில் இப்போது அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சந்தையில், இந்த புதிய ரியல்மி நோட் 50 இந்திய மதிப்பின் படி, ரூ.5,400 என்ற விலையை பெரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை தொடர்ந்து மற்ற நாடுகளிலும் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








