பக்கா பட்ஜெட் விலை: ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன் அறிமுக தேதி!

|

ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன் அறிமுக தேதி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் மற்றும் விலை குறித்த பார்க்கலாம்.

புதிய மாடல் ரியல்மி சி11 ஸ்மார்ட்போன்

புதிய மாடல் ரியல்மி சி11 ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனத்தின் புதிய மாடல் ரியல்மி சி11 ஸ்மார்ட்போன் வருகிற ஜூன் 30 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதுகுறித்து நிறுவனம் கடந்த செவ்வாய் கிழமை அறிவித்தது. இதுதொடர்பான பேஸ்புக் பதிவில் வரவிருக்கும் ரியல்மி சி 11 ஸ்மார்ட்போனானது புதிய ஆக்டோ கோர் மீடியா டெக் ஹீலியோ ஜி 35 எஸ்ஓசி கொண்டு இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

ரியல்மி ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்

ரியல்மி ஸ்மார்ட்போன் விவரக்குறிப்புகள்

சீன தொழில்நுட்ப நிறுவனமான ரியல்மி இந்த ஸ்மார்ட்போன் குறித்த பிற விவரக்குறிப்புகள் எதுவும் தெரிவிக்கவில்லை. இருப்பினும் டிப்ஸ்டர் வெளியிட்டுள்ள சில அம்சங்களின்படி ரியல்மி சி 11 ஸ்மார்ட்போன் 13 எம்பி மெகாபிக்சல் முதன்மை சென்சார் கேமராவோடு இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டுள்ளது.

5000 எம்ஏஹெச் பேட்டரி

5000 எம்ஏஹெச் பேட்டரி

அதேபோல் ரியல்மி சி11 ஸ்மார்ட்போன்கள் 5000 எம்ஏஹெச் பேட்டரி இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ரியல்மி சி 11 வெளியீட்டு நிகழ்வு மலேசியாவில் ஜூன் 30 ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு எம்வொய்டி ( காலை 8:30 மணிக்கு) நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.5 அங்குல மினி டிராப் டிஸ்ப்ளே

6.5 அங்குல மினி டிராப் டிஸ்ப்ளே

ரியல்ம் சி 11 ஸ்மார்ட்போனானது மீடியா டெக் ஹீலியோ ஜி 35 SoC மூலம் இயக்கப்படுகிறது. அதோடு ஆக்டா-கோர் செயலி 2.nGHz, கோர்டெக்ஸ் A53 CPU உடன் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரியல்மி சி11 எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், ரியல்மி சி11 6.5 அங்குல மினி டிராப் டிஸ்ப்ளே, இரட்டை சிம் கார்ட் வசதிகளோடு இருக்கலாம்.

32 ஜிபி உள்ளடக்கப்பட்ட சேமிப்பு வசதி

32 ஜிபி உள்ளடக்கப்பட்ட சேமிப்பு வசதி

மெமரி விரிவாக்கக் கூடிய வகையில் மைக்ரோ எஸ்டி கார்ட் பொருத்தும் வசதி, 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கப்பட்ட சேமிப்பு வசதி உள்ளிட்டவைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படலாம்.

ஜூன் 25 மதியம் 12:30 மணிக்கு

ஜூன் 25 மதியம் 12:30 மணிக்கு

அதேபோல் ரியல்மி புதிய மாடல் ஸ்மார்ட்போனானது ரியல்மி எக்ஸ் 3 மற்றும் எக்ஸ் 3 சூப்பர் ஜூம் ஆகிய ஸ்மார்ட்போன்களானது வருகிற ஜூன் 25 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. வெளியீட்டு நிகழ்வானது ஜூன் 25 மதியம் 12:30-க்கு நடக்கிகறது. அதோடு ரியல்மி சி11 அறிமுகமாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது.

ரூ.10,000-த்துக்கு கீழ் விற்கப்படலாம்

ரூ.10,000-த்துக்கு கீழ் விற்கப்படலாம்

இந்த ஸ்மாரட்போன் பட்ஜெட் விலையில் தான் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போனானது ரூ.10,000-த்துக்கு கீழ் விற்கப்படலாம் அதாவது இந்தியாவில் ரூ.9999-க்கு விற்கபடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

image: Socialmedia

Best Mobiles in India

English summary
Realme new model Realme C11 launch with MediaTek Helio G35 SoC Expected price and specification

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X