என்னது? ரூ.12,000 வரை விலை குறைப்பு-ஆ! 1 இல்ல 2 இல்ல.. 9 Realme போன்கள் மீது போட்டு தாக்கும் தள்ளுபடி!
ரியல்மி நிறுவனம் நார்சோ வீக் (Narzo Week) என்கிற சிறப்பு விற்பனையொன்றை அறிவித்துள்ளது. இதன்கீழ் 4 நார்சோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மற்றும் 5 ரியல்மி ஸ்மார்ட்போன்கள் என மொத்தம் 9 மாடல்கள் மீது ரூ.1000 முதல் ரூ.12,000 வரையிலான நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தொடங்கிவிட்ட (நவம்பர் 22 முதல்) நார்சோ வீக் விற்பனையானது ரியல்மி ஃபெஸ்டிவ் டே என்கோர் விற்பனையின் (Realme Festive Day Encore Sale) ஒரு பகுதியாக இருக்கும். இது எப்போது முடியும்? என்னென்ன ரியல்மி மற்றும் நார்சோ சீரீஸ் போன்கள் மீது எவ்வளவு தள்ளுபடி கிடைக்கும்? இதோ விவரங்கள்:

எந்தெந்த நார்சோ சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கிறது? ரியல்மி நார்சோ 60 ப்ரோ 5ஜி (Realme narzo 60 Pro 5G), ரியல்மி நார்சோ என்55 (Realme narzo N55), ரியல்மி நார்சோ என்53 (Realme narzo N53) மற்றும் ரியல்மி நார்சோ 60 5ஜி (Realme narzo 60 5G).
ரியல்மி நார்சோ என்55 ஆனது ரூ.2000 நேரடி தள்ளுபடி, ரூ.1000 கூப்பன் தள்ளுபடியை பெற்று ரூ.12,999 க்கு பதிலாக ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது. இதேபோல ரியல்மி நார்சோ என்53 ஆனது ரூ.1000 நேரடி தள்ளுபடி, ரூ.2000 கூப்பன் தள்ளுபடியை பெற்று ரூ.11,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கிறது.

அடுத்ததாக உள்ள ரியல்மி நார்சோ 60 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் வேரியண்ட் ஆனது ரூ.2000 கூப்பன் தள்ளுபடியை பெற்று ரூ.17,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக ரியல்மி நார்சோ 60 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.4000 கூப்பன் தள்ளுபடியை பெற்று ரூ. 23,999 க்கு பதிலாக ரூ.19,999 க்கு வாங்க கிடைக்கிறது.
எந்தெந்த ரியல்மி ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கிறது? ரியல்மி 11 5ஜி (Realme 11 5G), ரியல்மி சி 53 (Realme C53), ரியல்மி ஜிடி நியோ 3 (Realme GT Neo 3), ரியல்மி 10 (Realme 10) மற்றும் ரியல்மி சி55 (Realme C55).

ரியல்மி 11 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1500 கூப்பன் தள்ளுபடி மற்றும் நோ-காஸ்ட் இஎம்ஐ (No-cost EMI) விருப்பத்தின்கீழ் ரூ.17,499 க்கு வாங்க கிடைக்கிறது.. இதேபோல் ரியல்மி சி53 ஸ்மார்போன் ஆனது ரூ.1000 வங்கி தள்ளுபடியை (Bank Offer) பெற்று ரூ.9,999 க்கு வாங்க கிடைக்கிறது.
அடுத்ததாக உள்ள ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் தான் இந்த சிறப்பு விற்பனையின் மிகப்பெரிய தள்ளுபடியை பெற்றுள்ளது. இது ரூ.12,000 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.30,999 க்கு வாங்க கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 42,999 ஆகும்.
இதே போல ரியல்மி 10 ஸ்மார்ட்போன் மீது ரூ.500 கூப்பன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ரியல்மி 10 மாடலனது ரூ. 13,999 க்கு பதிலகா ரூ.13,499 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக உள்ள ரியல்மி சி55 ஆனது ரூ.1000 வங்கி தள்ளுபடியை பெற்று ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கிறது.
ரியல்மி தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள ரியல்மி ஜிடி 5 ப்ரோ (Realme GT 5 Pro) ஸ்மார்ட்போன் ஆனது 3எக்ஸ் ஆப்டிகல் ஜூம் (3x Optical Zoom) உடனான 50 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் கேமராவை (50-Megapixel Sony IMX890 Camera) பேக் செய்யும் என்று டீஸ் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல வரவிருக்கும் ரியல்மி 12 சீரீஸ் (Realme 12 Series) ஸ்மார்ட்போன்கள் ஆனது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் (Snapdragon 7 Gen 3 SoC) உடன் இயங்கும் என்றும், இந்த சீரீஸின் ப்ரோ பிளஸ் மாடலான ரியல்மி 12 ப்ரோ பிளஸ் (Realme 12 Pro Plus) ஆனது பெரிஸ்கோப் ஜூம் கேமராவை (Periscope Zoom Camera) பேக் செய்யலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications