iPhone 14 Pro போல ஒரு புது Realme போன் அறிமுகமா? விலை ரூ.13000 தானா? என்ன போன்ங்க இது?
ஐபோன் 14 ப்ரோ வாங்க ஆசைப்பட்டு, அதன் விலை 1 லட்சத்தை தாண்டுகிறது என்றதும், உங்கள் ஆசையை குழி தோண்டி புதைத்துவிட்டீர்களா? கவலைப்படாதீர்கள்.. உங்கள் ஆசைக்கு உயிர் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. iPhone 14 Pro போன்ற சாதனம் வந்துவிட்டது.
ஆச்சு அசல் ஆப்பிள் ஐபோன் 14 ப்ரோ போன்ற தோற்றத்தில் இருக்கும் புது போன் அறிமுகமாகிறது. இதை வேறெந்த நிறுவனமும் அறிமுகம் செய்யவில்லை.. அறிமுகம் செய்வது நம்முடைய ரியல்மி (Realme) நிறுவனம் தான். ரியல்மி இன் அடுத்த புது வரவு ஸ்மார்ட்போன் மாடலான ரியல்மி நர்ஸோ N53 அடுத்த வாரம் இந்தியாவில் அறிமுகமாகிறது. சரியாக, சொல்ல வேண்டுமென்றால், மே 18 ஆம் தேதி அறிமுகமாகிறது.

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான Realme, இன்னும் சில தினங்களில் Realme Narzo N53 என்ற புது மிரட்டலான ஸ்மார்ட்போன் சாதனத்தை மிகவும் மலிவான விலையில் அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. இது 7.49' மிமீ தடிமன் மட்டுமே கொண்ட ஸ்லிம்மஸ்ட் ரியல்மி ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படும் என்பதை நிறுவனம் டீஸ் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் மே 18, 2023 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று உறுதி செய்துள்ளது.
Realme Narzo N53 ஸ்மார்ட் போன் இரண்டு வண்ணங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஃபெத்தர் பிளாக் (Feather Black) மற்றும் ஃபெத்தர் கோல்டு (Feather Gold) என்று 2 சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்லிம் ஸ்மார்ட்போன் இரண்டு வெவ்வேறு ஸ்டோரேஜ் வேரியண்ட் விருப்பங்களுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான தகவலின் படி, இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் அடங்கிய ஒரு மாடலுடன் வரும். அதேபோல், இந்த ஸ்மார்ட்போனின் ஹை-வேரியண்ட் மாடல், 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மிகவும் மலிவான விலையாக ரூ.11,000 முதல் ரூ.13,000 விலை வரம்பில் வெளிவரும் என்பதையும் நிறுவனம் முன்பே டீஸ் செய்திருந்தது.

வரவிருக்கும் Realme Narzo N55 ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு புகைப்படங்கள் Realme ஆல் வெளியிடப்பட்டுள்ளது. இது iPhone 14 Pro உடன் குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், N தொடரின் முதல் Narzo ஸ்மார்ட்போனான Narzo N55 ஆனது, ஆப்பிள் உடைய டைனமிக் ஐலேண்ட் நோட்டிபிகேஷன் பப்பில் (Apple's Dynamic Island notification bubbles) போன்ற அம்சத்தைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி நார்சோ N53 இந்த அம்சத்தையும் கொண்டிருக்கிறதா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இது ஐபோன் 14 ப்ரோ குளோனைப் போலவே இருக்கும் என்று இப்போது கூறப்படுகிறது. ஐபோன் 14 ப்ரோ வாங்க ஆசைப்பட்டு முடியாமல் போனவர்கள், இந்த ஸ்மார்ட்போனை வெறும் ரூ.13,000 விலைக்குள் வாங்கி மகிழலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய உங்களுடைய கருத்து என்ன? எங்களுடன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் மக்களே.


Click it and Unblock the Notifications








