அடிச்சான் பாரு realme.. இவ்வளவு கம்மி விலையில Realme Narzo 70 Pro 5G போனா? கண்டிப்பா வாங்காம இருக்கமாட்டீங்க..
ரியல்மி (realme) நிறுவனம் இந்த ஆண்டின் முதல் நர்ஸோ (Narzo) ஸ்மார்ட்போன் மாடலை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ரியல்மி நர்ஸோ 70 5ஜி (Realme Narzo 70 5G) போனின் விலை மற்றும் விற்பனை விபரங்களை இப்போது பார்க்கலாம்.
Realme Narzo 70 Pro 5G: ரியல்மி நர்ஸோ 70 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தின் அறிமுகம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ரியல்மி பிராண்டிற்கு நர்ஸோ சீரிஸ் மிகவும் முக்கியமான மாடல் வரிசையாக பார்க்கப்படுகிறது. காரணம், நிறுவனம் இப்போது வரை இந்த சீரிஸ் வரிசையின் கீழ் சுமார் 16 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களை கொண்டுள்ளது என்று அறிமுக நிகழ்வில் உறுதிப்படுத்தியுள்ளது.

ரியல்மி நர்ஸோ 70 5ஜி: ஸ்மார்ட்போன் சாதனம் மிட் பட்ஜெட் செக்மென்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட் பிரிவில் மிகவும் சக்தி வாய்ந்த நர்ஸோ சீரிஸ் போனாக இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பயனர்களை வியப்பில் ஆழ்த்தும் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.
டிஸ்பிளே: இந்த புதிய ரியல்மி நர்ஸோ 70 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 6.67" இன்ச் அளவு கொண்ட FHD+ AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 120 Hz ரெஃப்ரஷ் ரேட் (Refresh Rate) அம்சத்தை 2000 nits பீக் பிரைட்னஸ் உடன் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 7050 5ஜி சிப்செட் (MediaTek Dimensity 7050 5G) உடன் வருகிறது.
ஸ்டோரேஜ்: இது 8GB + 8GB ரேம் அம்சத்துடன் 256GB வரை ஸ்டோரேஜ் கொண்ட மாடலுடன் வெளிவருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1TB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் வசதியும் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரியல்மி நர்ஸோ 70 5ஜி ஸ்மார்ட்போனின் மிக முக்கியமான அம்சமே இதன் கேமரா தான்.

கேமரா: இந்த பட்ஜெட் செக்மென்ட்டில் சோனி IMX890 சென்சாரை (Sony IMX890 sensor) முதல் ஸ்மார்ட்போன் சாதனம் இந்த புதிய ரியல்மி நர்ஸோ 70 ப்ரோ 5ஜி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இமேஜ் சென்சார் 50MP திறனுடன் வருகிறது. ரியல்மி நர்ஸோ 70 5ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 50 MP + 8 MP + 2 MP கொண்ட ட்ரிபிள் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது.
பேட்டரி: முன்பக்கத்தில் இந்த சாதனம் 16MP கேமராவை கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி UI (Android v14 Realme UI) அம்சத்தை பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் 67W Super VOOC பாஸ்ட் சார்ஜிங் உடன் 5000mAh பேட்டரியை பேக் செய்கிறது. இந்த பட்ஜெட் விலையில் 10+ ஏர் கெஷ்டர் கண்ட்ரோல் அம்சத்துடன் வெளிவரும் முதல் ஸ்மார்ட்போன் சாதனமாகவும் ரியல்மி நர்ஸோ 70 ப்ரோ 5ஜி திகழ்கிறது.
விலை: இந்த ரியல்மி நர்ஸோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விலை பற்றி பேசுகையில், இது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 8GB +128GB ஸ்டோரேஜ் உடன் ரூ.19,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சலுகைக்கு பிறகு இதை இப்போது ரூ.18,999 விலையில் வாங்கலாம். இந்த போனின் 8GB + 256GB மாடல் விலை ரூ.21,999 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. சலுகைக்கு பிறகு இதை ரூ.19,999 விலையில் வாங்கலாம்.
இதன் முன்கூட்டிய விற்பனை இன்று மாலை 6 மணி முதல் துவங்குகிறது. இதன் ஓபன் சேல்ஸ் விற்பனை வரும் மார்ச் 22, 2024 மதியம் 12 மணி முதல் துவங்கும் என்று realme அறிவித்துள்ளது. இது கிளாஸ் க்ரீன் மற்றும் கிளாஸ் கோல்டு நிறங்களில் வருகிறது.


Click it and Unblock the Notifications








