Home
News

1TB ஸ்டோரேஜ் 24GB ரேம்.! நெத்தி அடியாய் இன்று பட்ஜெட்டில் வெளிவரும் Realme Narzo 60 5G!

Realme Narzo 60 சீரிஸ் இந்தியாவில் ஜூலை 6 ஆம் தேதி (இன்று) அறிமுகமாகிறது. இந்த வரிசையில் வழக்கமான Realme Narzo 60 5G மாடல் மற்றும் Realme Narzo 60 Pro 5G ஆகிய மாடல் அறிமுகமாகும்.

சீன ஸ்மார்ட்போன் பிராண்ட் தற்போது வரவிருக்கும் மாடல்களுக்கான முன்பதிவு விவரங்களை வெளியிட்டுள்ளது. அமேசான் வலைத்தளம் வழியாக, இந்த புதிய Realme Narzo 60 5G சீரிஸ் மாடல்கள் வாங்க கிடைக்கும் என்பதை அமேசான் வலைப்பக்கம் தெளிவாக காண்பித்துள்ளது. Realme நிறுவனத்தின் இணையதளம் மற்றும் Amazon மூலம் மக்கள் இன்று முதல் முன்கூட்டிய ஆர்டர் செய்யும் முடியும்.

1TB ஸ்டோரேஜ் 24GB ரேம்.! பட்ஜெட்டில் வெளிவரும் Realme Narzo 60 5G!

அடுத்த வாரம் முதல் தள்ளுபடிகளையும் மக்கள் பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களும் 12 ஜிபி வரை ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் உடன் வெளிவரும் என்று டீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய தொடர் கடந்த ஆண்டு அறிமுகமான Realme Narzo 50 வரிசையின் வாரிசாக வெளி வருகிறது. Realme Narzo 60 ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு காஸ்மிக் பிளாக் மற்றும் மார்ஸ் ஆரஞ்சு ஷடோவ் நிறங்களுக்கு கிடைக்கிறது.

ஜூலை 6 ஆம் தேதி மதியம் 1:00 மணிக்கு இந்திய நேரப்படி முன்பதிவுக்கு இந்த சாதனம் அமேசான் (Amazon) வழியாக கிடைக்கும். Realme Narzo 60 Pro-ஐ முன்கூட்டிய ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,500 தள்ளுபடி கிடைக்கும். அதேவேளையில், Realme Narzo 60 5G-ஐ முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 1,000 தள்ளுபடி கிடைக்கும். இரண்டு மாடல்களும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்ட வாரண்டியையும் வழங்கும்.

Realme Narzo 60 5G மற்றும் Realme Narzo 60 Pro 5G ஆகியவை 12GB ரேம் மற்றும் 1TB உள் ஸ்டோரேஜ் உடன் கிடைக்கும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது. இன்பில்ட் ரேம் உடன் சேர்த்து 12ஜிபி வரை விரிவாக்கத்தை ஆதரிக்கும் அம்சத்தையும் இந்த சாதனம் கொண்டுள்ளது. இந்தியாவின் முதல் 24ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜ் ஸ்மார்ட்போன்களாக இந்த சாதனம் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் எல்லாமே அட்டகாசமாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் டிஸ்பிளே பற்றி பேசுகையில், இது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரஷ் ரேட் உடன் 2160 ஹெர்ட்ஸ் பல்ஸ் விட்த் மாடுலேஷன் (PWM) அதிர்வெண் கண் பாதுகாப்புடன், வளைந்த கர்வுடு டிஸ்பிளேகளுடன் வரும் என்று கூறப்படுகிறது.இதன் ஆரம்ப விலை ரூ.17,999 என்ற தொகையுடன் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

இன்று 12 மணி முதல் இந்த Realme Narzo 60 5G மாடல் மற்றும் Realme Narzo 60 Pro 5G ஆகிய 2 மாடல்களும் முழு சிறப்பம்ச விபரத்துடன் அமேசான் வழியாக வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. பட்ஜெட் விலையில் 1TB ஸ்டோரேஜ் மாடலை வாங்க விரும்புவோருக்கு இந்த ஸ்மார்ட்போன் சாதனம் ஒரு வரப்பிரசாதமாகும். ஸ்டோரேஜ் பற்றிய கவலையே வேண்டாம் என்பவர்களுக்கு இது பெஸ்ட் விருப்பமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme Narzo 60 5G Series Pre-Booking in India Starts Today Via Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X