எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா Realme Narzo 50i Prime: ரூ.7,800 க்கு உயர்தர அம்சங்களோடு அறிமுகம்!

|

ரியல்மி நிறுவனம் Realme Narzo 50i Prime ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ரியல்மி சி30 சாதனத்தின் மறுபெயரிடப்பட்ட பதிப்பு போல் தெரிகிறது. இந்த சாதனத்திலும் ஒற்றை பின்புற கேமரா அமைப்பு இருக்கிறது. பயனர்களின் எதிர்பார்ப்பை இந்த சாதனம் பூர்த்தி செய்ததா என்பது குறித்து பார்க்கலாம்.

விலைக்கேற்ற அம்சங்கள் இருக்கிறதா?

விலைக்கேற்ற அம்சங்கள் இருக்கிறதா?

ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போன் குறித்த தகவல் சமீப காலமாக தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தது. இதையடுத்து இந்த ஸ்மார்ட்போன் மீதான எதிர்பார்ப்பு வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த நிலையில் ரியல்மி நிறுவனம் ரியல்மி நார்சோ 50ஐ பிரைம் ஸ்மார்ட்போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்திருக்கிறது. பட்ஜெட் விலையில் மேம்பட்ட அம்சங்களோடு இந்த சாதனம் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவித்தன. அப்படிதான் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா?. வாருங்கல் விரிவாக பார்க்கலாம்.

புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம் உலகளவில் ஒரு புதிய பட்ஜெட் சாதனத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் Unisoc T612 மூலம் இயக்கப்படுகிறது. பட்ஜெட் குறைவாக இருப்பவர்களை இலக்காக வைத்து பெரிய பேட்டரி ஆதரவோடு இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4 ஜிபி ரேம் வரையிலான அம்சத்தோடு அறிமுகமான இந்த சாதனத்தின் விலை என்னவென்று பார்க்கலாம்.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதி

Realme Narzo 50i Prime ஸ்மார்ட்போனானது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு, 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு என்ற வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ஆனது $99.99 என அறிமுகமாகி இருக்கிறது. இதன் இந்தியா விலை மதிப்பு தோராயமாக ரூ.7,800 ஆகும். அதேபோல் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் $109.99 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த இந்திய விலை மதிப்பு தோராயமாக ரூ.8,600 ஆகும்.

Realme Narzo 50i பிரைம் கிடைக்கும் தன்மை

Realme Narzo 50i பிரைம் கிடைக்கும் தன்மை

Realme Narzo 50i Prime ஸ்மார்ட்போனானது டார்க் ப்ளூ மற்றும் மின்ட் க்ரீன் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. AliExpress இல் ஜூன் 27 முதல் இந்த சாதனம் உலகளாவிய விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் கிடைக்கும் தன்மை குறித்த தகவல் இதுவரை எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. விலைக்கு ஏற்ற அம்சங்கள் இந்த சாதனத்தில் உள்ளதா என்பது குறித்து பார்க்கலாம்.

Realme Narzo 50i Prime சிறப்பம்சங்கள்

Realme Narzo 50i Prime சிறப்பம்சங்கள்

Realme Narzo 50i Prime சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் HD+ LCD டிஸ்ப்ளே மற்றும் 88.7% ஸ்கிரீன் டு பாடி விகிதத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங் ஆதரவுடனான இந்த சாதனம் 182 கிராம் எடையைக் கொண்டிருக்கிறது.

ஆக்டோ கோர் Unisoc T612 சிப்செட் ஆதரவு

ஆக்டோ கோர் Unisoc T612 சிப்செட் ஆதரவு

Realme Narzo 50i Prime ஸ்மார்ட்போனானது ஹூட்டின் கீழ் ஆக்டோ கோர் Unisoc T612 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 8 எம்பி ஏஐ கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் இதன் முன்புறத்தில் 5 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது. மெமரி நீட்டுப்பு வசதிக்கு என மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இதில் இருக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 இயக்க ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 இயக்க ஆதரவு

ரியல்மி யூஐ 2.0 அடிப்படையிலான Android 11 (Go Edition) மூலம் Realme Narzo 50i Prime ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இதில் வைஃபை, ப்ளூடூத் 5.0, மைக்ரோ யூஎஸ்பி போர்ட் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Realme Narzo 50i Prime Launched Global Market with Unisoc Chip, 5000 mAh Battery: Budget Price Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X