கம்மி விலையில் புது போன் வாங்க ஐடியா இருக்கா? கொஞ்சம் பொறுங்க இந்த Realme மாடல் வரட்டும்

|

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலை சாதனங்களை வாங்க விரும்பும் பிரியர்களுக்கான எண்ணிக்கையே அதிகமாகவுள்ளது. குறைந்த விலையில் மிரட்டலான அம்சங்களுடன் கிடைக்கும் புதிய ஸ்மார்ட் போன் சாதனங்களுக்குத் தான் இங்கே அதிக மவுசு. பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் பிரியர்களும் கூட இருக்கிறார்கள் தான், ஆனாலும், கூட மலிவு விலை அடிப்படை சாதனங்கள் இங்கு தான் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது.

புதிய Realme Narzo 50i Prime

புதிய Realme Narzo 50i Prime

அப்படி நீங்களும், கம்மி விலையில் ஒரு அட்டகாசமான புது சாதனத்தை வாங்கத் திட்டமிடுகிறீர்கள் என்றால், கொஞ்சம் வெயிட் செய்யுங்கள். உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் வருகிறது புதிய Realme Narzo 50i Prime என்ற சாதனம். ரியல்மி நிறுவனம் அதன் போர்ட்ஃபோலியோவில் அறிமுகம் செய்யும் மலிவு விலை சாதனம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனத்தின் விலை தான் மலிவாக இருக்கிறது, ஆனால், இதில் உள்ள அம்சங்கள் எல்லாம் அட்டகாசமாக அமைந்துள்ளது.

ரியல்மி அறிமுகம் செய்த மற்ற 2 மாடல்கள்

ரியல்மி அறிமுகம் செய்த மற்ற 2 மாடல்கள்

Realme Narzo 50i Prime என்பது ரியல்மி நிறுவனத்தின் அடுத்த நுழைவு நிலை ஸ்மார்ட்போன் சாதனமாகும். Realme கடந்த மாதம் இந்தியாவில் ரியல்மி நர்ஸோ 50 ப்ரோ 5ஜி (Realme Narzo 50 Pro 5G) மற்றும் ரியல்மி நர்ஸோ 50 5ஜி (Realme Narzo 50 5G) ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களை வெளியிட்டது. இப்போது, ரியல்மி நிறுவனத்திற்குச் சொந்தமான Realme Narzo 50i Prime பற்றிய தகவல்களை இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த சாதனம் எதிர்பார்க்கப்படும் விலை தகவல் அனைவரையும் கவர்ந்துள்ளது.

Realme Narzo 50i Prime பற்றி வெளியான தகவல்

Realme Narzo 50i Prime பற்றி வெளியான தகவல்

டிப்ஸ்டர் ஸ்டீவ் ஹெம்மர்ஸ்டோஃபர் மூலம் Realme Narzo 50i Prime சாதனத்தின் விலை, வெளியீட்டுத் தேதி, முக்கிய பண்புகள் மற்றும் வண்ண விருப்பங்கள் போன்ற தகவல்கள் கசிந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை USD 100 என்ற விலைக்குள் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 7,800 என்ற விலை புள்ளியில் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது. இந்த ஆண்டின் மிகவும் மலிவான Realme ஸ்மார்ட்போன் சாதனமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு கம்மி விலையில் 5,000mAh பேட்டரியா?

இவ்வளவு கம்மி விலையில் 5,000mAh பேட்டரியா?

இந்த விலைப் புள்ளியுடன் நுழைவு-நிலை ஸ்மார்ட்போன் வகையை நிறுவனம் தீவிரமாகப் பின்தொடர்கிறது. Realme இலிருந்து வரவிருக்கும் புதிய Realme Narzo 50i Prime சாதனத்தில் என்னவெல்லாம் நாம் எதிர்பார்க்கலாம் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம். சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, ரியல்மி நிறுவனத்தின் இந்த புதிய Realme Narzo 50i Prime 5,000mAh பேட்டரி உடன் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.7,800 விலை பிரிவில் 5000mah பேட்டரி கிடைப்பது சிறப்பான விஷயம் தான்.

நல்ல ஆபர்ல வருதுன்னு அவசரப்பட்டு iPhone 13 வாங்கிடாதீங்க.. ஏனென்றால்?நல்ல ஆபர்ல வருதுன்னு அவசரப்பட்டு iPhone 13 வாங்கிடாதீங்க.. ஏனென்றால்?

கேமரா மற்றும் ஸ்டோரேஜ் விபரம்

கேமரா மற்றும் ஸ்டோரேஜ் விபரம்

அது மட்டுமல்லாமல், Realme Narzo 50i Prime ஆனது ஒற்றை பின்புற கேமரா மற்றும் முன்பக்கத்தில் ஒரு வாட்டர் டிராப் நாட்ச்சின் பின்னால் மறைக்கப்பட்ட செல்ஃபி கேமராவை உள்ளடக்கி வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சாதனம் இரண்டு 3ஜிபி + 32ஜிபி மற்றும் 4ஜிபி + 64ஜிபி ஆகிய இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களுடன் வெளி வரும். இதன் அடிப்படை வேரியண்ட் மாடலான 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை தான் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது என்பது கவனத்திற்கு.

Realme Narzo 50i Prime அம்சம்

Realme Narzo 50i Prime அம்சம்

Realme Narzo 50i Prime ஸ்மார்ட்போனில் வால்யூம் ராக்கர் பட்டன் மற்றும் பவர் பட்டன் வலதுபுறத்திலும், சிம் ஸ்லாட் இடதுபுறத்திலும் உள்ளது. மலிவு விலை சாதனமாக இருந்தாலும் கூட இதன் பின் பேனல் கடினமானதாக இருக்கிறது. செல்ஃபி கேமராவிற்கான வாட்டர் டிராப் நாட்ச் தவிர, சாதனம் மெல்லிய பெசல் கொண்ட டிஸ்பிளேவை கொண்டுள்ளது. Realme Narzo 50i Prime இன் பின்புறத்தில் வட்ட வடிவ ஒற்றை கேமரா, LED ஃபிளாஷ் மற்றும் Narzo பிராண்டிங் கொண்ட ஒரு சதுர கேமரா ஐலாந்து அமைப்பைக் கொண்டுள்ளது.

Realme Narzo 50i Prime விலை

Realme Narzo 50i Prime விலை

இந்த புதிய Realme Narzo 50i Prime ஸ்மார்ட்போன் ஜூன் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ரியல்மி நர்ஸோ 50i பிரைம், நுழைவு-நிலைத் துறையில் USD 100க்கும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. முன்பே சொன்னது போல் இது இந்திய மதிப்பின் படி சுமார் ரூ. 7,800 என்ற விலைக்கும் குறைவான விலையில் கிடைக்கும். இந்த ஆண்டின் மிகவும் மலிவான ஸ்மார்ட்போன் இதுவாகும். அது மட்டுமின்றி Realme Narzo 50i Prime பிளாக் மற்றும் க்ரீன் நிறங்கள் உட்பட இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Realme Narzo 50i Prime Expected to Launch on June 22 With 5000 mAh Battery : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X