Home
News

மே 18 வரை காத்திருங்கள்: ரியல்மி நார்சோ 50 5ஜி, நார்சோ 50 ப்ரோ 5ஜி- உயர்தர அம்சம், பட்ஜெட் விலை!

ரியல்மி இன்று மே 18 அன்று இந்தியாவில் ரியல்மி நார்சோ 50 5ஜி மற்றும் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி அறிமுகம் செய்யப்படும் என உறுதி செய்திருக்கிறது. ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனானது டைமன்சிட்டி 810 5ஜி எஸ்ஓசி வசதியோடும் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது டைமன்சிட்டி 920 சிப்செட் வசதியோடும் வருகிறது.

மே 18 ஆம் தேதி அறிமுகம்

மே 18 ஆம் தேதி அறிமுகம்

ரியல்மி இந்தியா மே 18 ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு டிஜிட்டல் நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வானது அதன் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனல் மற்றும் ஃபேஸ்புக் பக்கத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் ரியல்மி இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளம் மற்றும் அமேசான் இந்தியா மூலம் வாங்குவதற்கு கிடைக்கும். நிறுவனம் பகிர்ந்துள்ள டீசரின்படி, ரியல்மி நார்சோ 50 சீரிஸ் ஆனது மிகவும் சக்தி வாய்ந்த செயலியான மீடியாடெக் டைமன்சிட்டி 920 மூலம் இயக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் ரியல்மி நார்சோ 50 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது நீராவி அறை குளிரூட்டும் அமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெப்பச் சிதறலுக்கான 5 அடுக்கு குளிரூட்டிகளை கொண்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ரியல்மி நார்சோ 50 5ஜி சிறப்பம்சங்கள்

ரியல்மி நார்சோ 50 5ஜி சிறப்பம்சங்கள்

ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போன் குறித்து வெளியான தகவலின்படி, இந்த சாதனம் 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. ஹூட்டின் கீழ், இந்த சாதனமானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 810 செயலி ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது.

ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் இரட்டை பின்புற கேமரா அமைப்புடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 13 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் கேமராவுடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என இந்த ஸ்மார்ட்போனில் 8 எம்பி ஸ்னாப்பர் இருக்கும் என கூறப்படுகிறது. ரியல்மி நார்சோ 50 5ஜி ஸ்மார்ட்போனானது 4800 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு இருக்கும் எனவும் இது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சாதனமானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ரியல்மி யூஐ 3.0 மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல்மி ஜிடி 2 இந்தியாவில் விற்பனை

ரியல்மி ஜிடி 2 இந்தியாவில் விற்பனை

சமீபத்தில் ரியல்மி ஜிடி 2 இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. இந்த சாதனம் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,999-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வேரியண்டின் விலை ரூ.38,999-ஆக உள்ளது. ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போன் ஆனது 6.62-இன்ச் E4 AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1300 நிட்ஸ் ப்ரைட்னஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன்இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்

இந்த ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் அட்ரினோ 660ஜிபியு ஆதரவும் உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் ரியல்மி ஜிடி 2 சாதனம். பின்பு Realme UI 3.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி Sony IMX766 sensor சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். ரியல்மி ஜிடி 2 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு இதை சார்ஜ் செய்ய 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Realme Narzo 50 5G and Narzo 50 Pro 5G Smartphones Set to Launch on May 18: Expected Price, Specs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X