Home
News

ரூ.8,999 மட்டுமே: 4ஜி ரேம் அம்சத்தோடு இன்று விற்பனைக்கு வரும் ரியல்மி நார்சோ 30ஏ- தாராளமா வாங்கலாம்!

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி நார்சோ 30 ஏ மற்றும் ரியல்மி நார்சோ ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் அசத்தலான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரியல்மி நார்சோ 30ஏ

ரியல்மி நார்சோ 30ஏ

இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை தேதிக்கு அதன் வாடிக்கையாளர்கள் பெரிதளவு காத்திருந்தனர். இந்த நிலையில் இதில் ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன் விற்பனை இன்று நடைபெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் மூலமாக வாங்கலாம்.

3ஜிபி ரேம், 4ஜிபி ரேம்

3ஜிபி ரேம், 4ஜிபி ரேம்

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999-ஆக உள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை ரூ.9,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை பார்க்கலாம்.

ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட்

ரியல்மி நார்சோ 30ஏ அம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 6.5 இன்ச் எச்டி பிளஸ் மினி-டிராப் டிஸ்பிளே (720 x 1600 பிக்சல்) இருக்கிறது. அதேபோல் இதில் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம், 4ஜிபி ரேம் எனவும் 32ஜிபி, 64 ஜிபி என இரண்டு உள்சேமிப்பு வகைகளிலும் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம்

இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி B&W Portrait கேமரா பொருத்தப்பட்டுள்ளது. அதோடு இதில் 5 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் மூலம் இயக்கப்படுகிறது.

6000 எம்ஏஎச் பேட்டரி

ரியல்மி நார்சோ 30ஏ ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இது 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. மேலும் இதன் இணைப்பு ஆதரவுகள் என்று பார்க்கையில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி ஆகியவை இருக்கிறது. இது லேசர் பிளாக், லேசர் ப்ளூ என இரண்டு வேரியண்ட்களில் வருகிறது.

Best Mobiles in India

English summary
Realme Narzo 30A Smartphone First Sale Start in India Via Flipkart and Realme.com
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X