வெறும் ரூ.13,499 விலையில் புதிய Realme Narzo 30 வேரியண்ட் மாடல் அறிமுகம்.. எப்போ வாங்கலாம்?
Realme Narzo 30 விரைவில் 6GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்ட புதிய வேரியண்ட் மாடல் தற்பொழுது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Realme Narzo 30 5G உடன் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் 4GB + 64GB மாடலிலும், 6GB + 128GB மாடலிலும் வந்தது. ரியல்மி நர்சோ 30 ஆனது மூன்று பின்புற கேமரா அமைப்பு மற்றும் செல்ஃபி கேமராவுக்கான பஞ்ச் ஹோல் கட்அவுட்டோடு வருகிறது. இது ரேசிங் ப்ளூ மற்றும் ரேசிங் சில்வர் வண்ண விருப்பங்களில் வருகிறது.

ரியல்மி நர்சோ 30 சாதனம் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜுடன் வரும் மாடல் வெறும் விலை ரூ. 13,499 என்ற விலை புள்ளியில் அறிமுகமாகியுள்ளது. ரியல்மி நர்சோ 30 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடல் விலை ரூ. 12,499 மற்றும் 6GB + 128GB மாடல் விலை ரூ. 14,499 ஆகும். ரியல்மி நர்சோ 30 இன் இந்த புதிய மாடல் ஆகஸ்ட் 5 முதல் பிக் சேவிங்ஸ் டே விற்பனையில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இத்துடன் ரியல்மி இந்தியா வலைத்தளம் மற்றும் பிற சில்லறை கடைகள் வழியகவும் வாடிக்கையாளர்கள் இந்த சாதனத்தை வாங்கலாம்.
ரியல்மி நர்சோ 30 ஆனது ஆண்ட்ராய்டு 11 இல் ரியல்மி யுஐ 2.0 உடன் இயங்குகிறது. இது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் 1080 x2400 பிக்சல்கள் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 90.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், 405 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 580 நிட்ஸ் உச்ச பிரகாசம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ் இது ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி 95 சிப்செட் உடன் வருகிறது. அதனுடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வரை உள் சேமிப்பு உள்ளது, இது மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 256 ஜிபி வரை விரிவாக்கப்படுகிறது.
இது மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவை அடங்கும். Realme Narzo 30 ஸ்மார்ட்போன் 16 மெகாபிக்சல் சோனி IMX471 செல்பி கேமராவை கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5, GPS/ A-GPS மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். இது 5,000mAh பேட்டரியுடன் 30W டார்ட் சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த ரியல்மி நர்சோ 30 ஸ்மார்ட்போன் சாதனம் ரசிங் ப்ளூ மற்றும் ரசிங் சில்வர் வண்ணங்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications