நார்சோ 30 4ஜி மற்றும் 5ஜி உடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்டிவிகள்.. லிஸ்டில் லேப்டாப் கூட இருக்கு..

|

ரியல்மி நிறுவனம் நார்சோ 30 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அடுத்த வாரம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவிருப்பதாக நிறுவனம் தனது டிவிட்டர் பக்கம் வழியாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்த நிகழ்வில் புது ஸ்மார்ட் டிவி மாடல்களையும் நிறுவனம் அறிமுகம் செய்யத் தயாராக இருப்பதாக ரியல்மி இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் தெரிவித்து இருக்கிறார்.

நார்சோ 30 4ஜி மற்றும் 5ஜி உடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்டிவி

இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல் மற்றும் புதிய நார்சோ 30 4ஜி மற்றும் 5ஜி ஸ்மார்ட்போன் சாதனங்கள் அறிமுக நிகழ்வை ரியல்மி வரும் ஜூன் 24 ஆம் தேதி நிகழ்த்துகிறது. தற்பொழுது கிடைத்துள்ள தகவலின்படி புதிய ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவி சாதனத்துடன் பல்வேறு இதர சாதனங்களும் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக ரியல்மி தெரிவித்துள்ளது.

சஸ்பென்ஸ் தாங்க முடியாதவர்களுக்கு சிறிய துணுக்காக நிறுவனத்தின் ரியல்மி பட்ஸ் கியூ2 வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகமாகும் என்ற தகவல் கசிந்துள்ளது. இன்னும் கூடுதலாக சர்வதேச சந்தையில் ரியல்மி புதிதாக ரியல்மி புக் லேப்டாப் மற்றும் ரியல்மி பேட் டேப்லெட் போன்ற இதர சாதனங்களையும் அறிமுகம் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனங்களுக்கான டீசர் மட்டும் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

நார்சோ 30 4ஜி மற்றும் 5ஜி உடன் அறிமுகமாகும் புதிய ரியல்மி ஸ்மார்ட்டிவி

ரியல்மி புக் லேப்டாப் டீசர் உண்மையில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது என்று தான் கூறவேண்டும். காரணம், இந்த புதிய ரியல்மி புக் லேப்டாப் பார்ப்பதற்கு ஆப்பிள் மேக் புக் ப்ரோ போன்ற தோற்றத்தில் இருக்கிறது. நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட டீசர் புகைப்படங்களைப் பார்த்து அனைவரும் அது ஒரு மேக் புக் தான் என்று கூறும் வகையில் அதன் தோற்றம் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வாரத் தொடக்கத்தில்

ரியல்மி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத் ஒரு புகைப்படத்தின் மூலம் நிறுவனத்தின் முதல் லேப்டாப் அறிமுகம் செய்யப்படுவதை உறுதிப்படுத்தினார். ​​ரியல்மி லேப்டாப்பின் ஒரு சிறிய பகுதியை மட்டும் காண்பிக்கும் புகைப்பதை அவர் வெளியிட்டுள்ளார். ரியல்மி லேப்டாப்பின் தோற்றம் முழுமையாகப் புகைப்படத்தில் வெளிப்படுத்தவில்லை என்றாலும் கூட, இது பார்ப்பதற்கு ஆப்பிள் நிறுவனத்தின் மேக்புக் போல தோற்றமளிக்கிறது.

ரியல்மி லேப்டாப்பின் மேற்புற பாடியில் பிராண்டின் நுட்பமான வர்த்தகத்தைப் பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது மேக்புக் மாடல்களில் ஒளிரும் தன்மையோடு காணப்படும் ஆப்பிள் லோகோவைப் போல இல்லாமல், வெறும் சாதாரணமான எழுத்துக்களாக லேப்டாப்பின் மேற்பரப்பில் அச்சிடப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல், ரியல்மி நிறுவனம் இத்துடன் புதிய டேப் மாடலையும் அறிமுகம் செய்யுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தோற்றமும் ஆப்பிள் டேப்களுடன் ஒத்ததாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சாதனங்களும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Realme Narzo 30 5G, Realme Narzo 30 32-Inch Realme Smart TV India Launch Date : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X