எதிர்பார்த்திடாத மலிவு விலையில் புது Realme Narzo 30 5G மாடல்: ரியல்மி பேன்ஸ் பெஸ்டிவலில் இன்னும் ஏராள சலுகை

|

ரியல்மி நர்சோ 30 5 ஜி ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கூடிய புதிய வேரியண்ட் மாடலை இன்னும் மலிவான விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதுவரை, இந்த ஸ்மார்ட்போனின் மாடலில் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரியல்மி நர்சோ 30 5 ஜி மட்டுமே இருந்தது, இதன் விலை ரூ. 15,999 ஆக இருந்தது. இப்போது நிறுவனம் நடத்தவிருக்கும் ரியல்மி ஃபேன்ஸ் பெஸ்டிவல் சேல்ஸ் மூலமாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்களை முழுமையாக இந்த பதிவில் பார்க்கலாம்.

Realme Narzo 30 5G ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் மாடல்

Realme Narzo 30 5G ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் மாடல்

ரியல்மி ஃபேன்ஸ் பெஸ்டிவல் சேல்ஸ், வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி தொடங்கும் என்று நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதேபோல், நிறுவனத்தின் இந்த சிறப்பு விற்பனையானது ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீடிக்கும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவில் புதிய Realme Narzo 30 5G ஸ்மார்ட்போனின் 4GB + 64GB விலை என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கும் நிறுவனம் சில முக்கிய தகவல்களை தனது பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

புதிய வேரியண்ட் மாடலின் விலை என்ன?

புதிய வேரியண்ட் மாடலின் விலை என்ன?

Realme Narzo 30 5G இன் இந்த புதிய வேரியண்ட் மாடல் வெறும் ரூ. 13,999 என்ற விலையில் இந்தியாவில் வாங்குவதற்குக் கிடைக்கும். ஆகஸ்ட் 24 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு (மதியம்) ரியல்மி இந்தியா வலைத்தளம், பிளிப்கார்ட் மற்றும் மெயின்லைன் ஸ்டோர்களில் இருந்து இந்த புதிய சாதனம் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Narzo 30 5G இன் 6GB + 128GB மாடல் விலை ரூ. 15,999 ஆகும். இது ரேசிங் ப்ளூ மற்றும் ரேசிங் சில்வர் வண்ணங்களில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய சிக்கல்: இந்த 8 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்.. கூகிள் வெளியிட்ட அவசர அறிவிப்புஆண்ட்ராய்டு பயனர்களுக்கு புதிய சிக்கல்: இந்த 8 ஆப்ஸை உடனே டெலீட் செய்யுங்கள்.. கூகிள் வெளியிட்ட அவசர அறிவிப்பு

Realme Narzo 30 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

Realme Narzo 30 5G ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

ரியல்மி நர்சோ 30 5 ஜி ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் முழு எச்டி பிளஸ் கொண்ட 1,080 x 2,400 பிக்சல்கள் உடைய டிஸ்ப்ளேவுடன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 90.5 சதவீதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம் மற்றும் 600 நிட்ஸ் உச்ச பிரகாசம் உடன் வருகிறது. இந்த சாதனம் ஆக்டா-கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 4 ஜிபி அல்லது 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. சேமிப்பகத்தை மேலும் விரிவாக்க ஒரு பிரத்தியேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

கேமரா மற்றும் பேட்டரி அம்சம்

ரியல்மி நர்சோ 50 5 ஜி மூன்று பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 48 மெகாபிக்சல் கொண்ட பிரைமரி சென்சார், 2 மெகாபிக்சல் கொண்ட மோனோக்ரோம் சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றுடன் 16 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமராவையும் சாதனம் ஆதரிக்கிறது. இணைப்பு விருப்பங்களைப் பொறுத்தவரை இது 5G, 4G LTE, Wi-Fi 802.11 ac, ப்ளூடூத் v5.1, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பிடைப் சி போர்ட் போன்றவற்றுடன் வருகிறது. இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியால் ஆதரிக்கப்படுகிறது.

உலகை வியப்பில் ஆழ்த்திய அரிய வகை 'பிங்க் டால்பின்'.. வைரல் ஆகும் வீடியோ.. நிறத்திற்கான காரணம் இதுதானா?உலகை வியப்பில் ஆழ்த்திய அரிய வகை 'பிங்க் டால்பின்'.. வைரல் ஆகும் வீடியோ.. நிறத்திற்கான காரணம் இதுதானா?

ரியல்மி ஃபேன்ஸ் பெஸ்டிவல் சேல்ஸ் 2021விபரம்

ரியல்மி ஃபேன்ஸ் பெஸ்டிவல் சேல்ஸ் 2021விபரம்

இந்த சிறப்பு விற்பனை நாளை தொடங்கும், பிளிப்கார்டில் ஷாப்பிங் செய்யும் போது ரியல்மி போன்கள் மற்றும் AIoT தயாரிப்புகளுக்குத் தள்ளுபடியை இது கொண்டுவருகிறது. Realme எக்ஸ் 3 Superzoom, Realme x7 புரோ 5G, Realme x7 மேக்ஸ் 5G, Realme x7 5G, Realme 7 ப்ரோ, Realme 8 5G மற்றும் பிற ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதேபோல், ரியல்மி 7 ப்ரோ மீது ரூ. 4,000 தள்ளுபடி. Realme X7 Pro 5G மீது ரூ. 3,000 தள்ளுபடி, Realme X7 5G மீது ரூ. 1,000 தள்ளுபடி, மற்றும் Realme X7 Max 5G மீது ரூ. 2,000 தள்ளுபடியை வழங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Realme Narzo 30 5G 4GB With 64GB Storage Price In India And Realme Fan Festival 2021 Sales Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X