Home
News

பிப்.,28 வரை காத்திருங்கள்- உலகின் அதிவேக ஸ்மார்ட்போன் சார்ஜிங் தொழில்நுட்பம்: ரியல்மியின் மாஸ்டர் பிளான்!

Realme MWC 2022 நிகழ்வு பிப்ரவரி 28 ஆம் தேதி பார்சிலோனாவில் நடைபெற இருக்கிறது. இது உலகின் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை வெளியிட இருக்கிறது. உலகின் அதிவேக சார்ஜிங் தொழில்நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போனை பிப்ரவரி 28 அன்று நடக்கும் எம்டபிள்யூசி 2022 நிகழ்வில் ரியல்மி அறிவிக்க இருக்கிறது.

உலகின் அதிவேக ஸ்மார்ட்போன் சார்ஜிங் தொழில்நுட்பம்

உலகின் அதிவேக ஸ்மார்ட்போன் சார்ஜிங் தொழில்நுட்பம்

உலகின் அதிவேக ஸ்மார்ட்போன் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ரியல்மி வெளியிட இருக்கிறது. ரியல்மி-ன் தற்போதைய வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம் 125 வாட்ஸ் அல்ட்ராடார்ட் ஆகும். இந்த நிலையில் MWC 2022 நிகழ்வு பிப்ரவரி 28 அன்று நடக்கிறது, உலகின் அதிவேக ஸ்மார்ட்போன் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அதன் எம்டபிள்யூசி 2022 நிகழ்வில் அறிமுகப்படுத்த இருப்பதாக ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது. பிப்ரவரி 28 அன்று ரியல்மி ஜிடி 2 ப்ரோ சாதனத்தின் உலகளாவிய வெளியீட்டை நிறுவனம் முன்னதாகவே உறுதிப்படுத்தியுள்ளது.

வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம்

வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம்

ரியல்மி நிறுவனத்தின் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம், அதே பிரிவில் உள்ள ஒரே மாதிரியான சாதனங்களுடன் ஒப்பிடும் போது, இவை கோ ப்ரீமியம் என்ற குறியீட்டின் கீழ் வருகிறது. ரியல்மி நிறுவனம் ஆர்&டி ரிசோர்ஸ் கண்டுபிடிப்பில் 70 சதவீதம் முதலீடு செய்ய இருக்கிறது. இதில் முக்கிய அங்கம் வேகமான சார்ஜ் செய்யும் தொழில்நுட்பம் ஆகும். இந்த புதிய சார்ஜிங் தொழில்நுட்பம் பயனர்களை தங்கள் ஸ்மார்ட்போன்களை மிகக் குறுகிய காலத்தில் சார்ஜ் செய்ய அனுமதிக்கும் என ரியல்மி உறுதிப்படுத்தியுள்ளது. இதை ரியல்மி தனது அறிவிப்பில் வெளியிட்டிருக்கிறது.

ரியல்மி MWC 2022 நிகழ்வு

ரியல்மி MWC 2022 நிகழ்வு

ரியல்மி MWC 2022 நிகழ்வு பிப்ரவரி 28 ஆம் தேதி பார்சிலோனாவில் பிற்பகல் 2:30 மணிக்கு நடக்கிறது. கடந்த 2021-ல் நிறுவனம் 125 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் தொழில்நுட்பத்தோடு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போதைய வதந்திகளின் படி, நிறுவனம் 150 வாட்ஸ் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும். இது எம்டபிள்யூசி-ல் ஒப்போவின் 160 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டது.

200 வாட்ஸ் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம்

200 வாட்ஸ் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம்

மறுபுறம் சியோமி தனது 200 வாட்ஸ் வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இது 8 நிமிடங்களில் 0-100% சார்ஜிங்கை பூர்த்தி செய்யும், இது உலகின் அதிவேகமானவை ஆகும் என ரியல்மி குறிப்பிடுகிறது. சியோமி வழங்கும் 8 நிமிட சார்ஜிங் வேகத்தை விட தற்போதைய ரியல்மி நிறுவனத்தின் சார்ஜ் வேகம் மிகக் குறைவாக இருக்கும் என கூறப்படுகிறது. சியோமி, ஐக்யூ ஆகிய சாதனங்கள் 120 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றன. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மேஜிக் 7 ப்ரோ சாதனம் 165 வாட்ஸ் சார்ஜரை பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரியல்மி நார்சோ 50 சாதனம்

ரியல்மி நார்சோ 50 சாதனம்

இதற்கிடையில், ரியல்மி அதன் நார்சோ தொடரின் கீழ் ரியல்மி நார்சோ 50 சாதனத்தை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிப்.,24 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மாடல் ரூ.15,999 ஆகவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.17,999 ஆகவும் இருக்கிறது. ஸ்மார்ட்போன் ஸ்பீட் பிளாக் மற்றும் ஸ்பீட் ப்ளூ வண்ண விருப்பத்தில் வெளியிடப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் அமேசான் மூலம் வாங்குவதற்கு கிடைக்கும்.

விரைவில் புதிய ரியல்மி வி25 ஸ்மார்ட்போன்

விரைவில் புதிய ரியல்மி வி25 ஸ்மார்ட்போன்

ரியல்மி நிறுவனம் விரைவில் புதிய ரியல்மி வி25 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சாதனம் பட்ஜெட் விலையில் அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல்மி வி25 ஸ்மார்ட்போன் மாடல் 6.58-இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு 1,080 x 2,412 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட்உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

File Images

Best Mobiles in India

English summary
Realme MWC 2022 Event: Realme Might Unveil Worlds Fastest Smartphone Charging technology
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X