ஐபோன் பயன்படுத்தி மாட்டிக்கொண்ட பிரபல செல்போன் நிறுவனத்தின் சிஇஓ: யார் தெரியுமா?

|

உலகம் முழுவதும் ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டிப்போட்டு கொண்டு செல்போன் அறிமுகம் செய்து வருகின்றன. தொழில் போட்டி காரணமாக புதுமாடல் செல்போன்கள் அறிவிப்பது, ஆஃபர்கள் அறிவிப்பது என்று வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் பல்வேறு வகையான செயல்களில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் எத்தனை மாடல் ஸ்மார்ட் போன்கள் வந்தாலும், ஐபோன் என்றால் அதற்கு தனி மவுசு இருக்கத்தான் செய்கிறது.

அப்போ: ஆள் பாதி ஆடை பாதி., இப்போ: ஆள் பாதி மொபைல் பாதி

அப்போ: ஆள் பாதி ஆடை பாதி., இப்போ: ஆள் பாதி மொபைல் பாதி

ஆள் பாதி ஆடை பாதி என்ற காலம் சென்று தற்போது ஆள் பாதி மொபைல் பாதி என்ற காலக்கட்டத்தில் வந்து நிற்கிறோம். ஒரு முக்கிய பதிவிக்கோ ஒரு பெரிய இடத்துக்கோ சென்றவிட்டால் உபயோகிக்கும் பொருட்களில் முக்கியமான ஒன்று ஐபோன் என்றால் அது மிகையல்ல. அதற்கேற்ப ஒருமுறை ஐபோன் உபயோகித்து விட்டோம் என்றால் கண்டிப்பாக மற்ற போன் பயன்படுத்த எண்ணம் வராது என்கின்றனர் ஐபோன் பிரியர்கள்.

ஐபோன் பயன்பாடு...

ஐபோன் பயன்பாடு...

மற்ற செல்போன் நிறுவனங்களில் அதிகாரியாக இருக்கும் பலரும் தங்களது நிறுவனங்களின் போன்களை கையில் வைத்திருந்தாலும் கூடுதலாக ஐபோன் ஒன்று வைத்திருப்பது வழக்கம் என தெரிவிக்கப்படுகிறது. பல்வேறு செல்போன் நிறுவனங்களின் தூதராக நியமிக்கப்பட்ட நடிகர்கள், பிரபலங்கள் என பலரும் ஐபோன் பயன்படுத்தி மாட்டுக் கொண்டது உண்டு.

சிக்கிய பிரபலங்கள்:

சிக்கிய பிரபலங்கள்:

சாம்சங் நிறுவனத்தின் முன்னாள் தூதராக இருந்த ரஷ்யாவை சேர்ந்த க்சேனியா சோப்சாக் என்பவர் ஐபோன் பயன்படுத்தி சிக்கியுள்ளார். அதேபோல் அயர்ன் மேன் படத்தின் கதாநாயகனாக இருந்த ராபர்ட் டவ்னி, ஒன் பிளஸ்-இன் தூதராக நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் கையில் ஹூவாய் பி30 ப்ரோ இருந்தது கண்டறியப்பட்டது.

பிரபல நிறுவனத்தின் சிஇஓ:

பிரபல நிறுவனத்தின் சிஇஓ:

பிரபல செல்போன் நிறுவனங்களில் ஒன்றானது ரியல்மி நிறுவனம். இந்த நிறுவனத்தின் இந்தியா சிஇஓ-வாக இருப்பவர் மாதவ் சேத், இவர் ரியல்மி 3 மற்றும் ரியல் 3-ஐ ஆகிய போன் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் ஒன்று செய்திருந்தார். அந்த டுவிட்டின் கீழ் டுவிட் ஃபார் ஐபோன்(ஐபோனில் இருந்த பதிவிடப்பட்ட டுவிட்) என்று காண்பித்துள்ளது. புகைப்படத்துடன் கூடிய இந்த தகவல் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விளக்கமளிக்காத சிஇஓ:

விளக்கமளிக்காத சிஇஓ:

இதை பார்த்த நெட்டிசன்கள் கலாய்த்ததை அடுத்து, அந்த டுவிட்டை உடனடியாக ரியில்மி நிறுவனத்தின் சிஇஓ நீக்கியுள்ளார். மேலும் அந்த டுவிட் அவர்தான் பதிவிட்டாரா இல்லை தவறாக ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஐபோன் பயன்படுத்துவதும் குறித்தும் அவர் எந்த பதிலும் இப்போதுவரை அளிக்கவில்லை. இந்த தகவல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், ரியல்மி சிஇஓ-வும் வதந்தி குறித்து விளக்கமளிக்காமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Realme India CEO Uses An iPhone And Here's The Evidence

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X