என்ட்ரி வேற லெவல்.. உலகத்தின் முதல் Eco² Sky டிஸ்பிளே போன்.. எல்லாமே பெஸ்ட்டா இருக்கும் ஒரே போன்.. எந்த மாடல்?
உலகத்தில் உள்ள பெரும்பாலான புதிய அம்சங்களை ஒரே போனில் வழங்கி அசத்தியுள்ளது ரியல்மி (Realme) நிறுவனம். ரியல்மி நிறுவனம் புதிதாக ரியல்மி ஜிடி7 ப்ரோ (Realme GT7 Pro) என்ற ஸ்மார்ட்போன் சாதனத்தை வரும் நவம்பர் 4, 2024 உலகிற்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போனில் நிறுவனம் பல அட்டகாசமான அம்சங்களை வழங்கியுள்ளதாக லீக் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, உலகத்தின் முதல் எக்கோ 2 ஸ்கை ஸ்கிரீன் டிஸ்பிளே ஆகிவற்றை கொண்டிருக்கும் முதல் போனாக இந்த ரியல்மி ஜிடி7 ப்ரோ (Realme GT7 Pro) இருக்குமென்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்த புதிய ரியல்மி ஜிடி7 ப்ரோ (Realme GT7 Pro) ஸ்மார்ட்போன் சாதனத்தை நிறுவனம் வரும் நவம்பர் 04, 2024 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த போனில் ரியல்மி நிறுவனம் முதல் முறையாக 8T LTPO Eco² OLED பிளஸ் மைக்ரோ கர்வுடு டிஸ்பிளே ஸ்கிரீனை (Plus micro-curved screen) வழங்குமென்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவை நிறுவனம் சாம்சங் (Samsung) நிறுவனத்திடம் இருந்து வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

என்ட்ரி வேற லெவல்.. உலகத்தின் முதல் Eco² Sky டிஸ்பிளே போன்:
இந்த புதிய டிஸ்பிளே குறைந்தளவு சார்ஜ்ஜை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. இதனால், 52% வரையிலான சார்ஜ் மிச்சம் செய்யப்படுகிறது. கூடுதல் பிரைட்னஸில் இயக்கும் பொழுதும் கூட இது அதிக சார்ஜ்ஜை எடுத்துக்கொள்வதில்லை. இந்த புதிய ரியல்மி ஜிடி7 ப்ரோ (Realme GT7 Pro) ஸ்மார்ட்போனில் உலகத்தின் முதல் 120% DCI-P3 கலர் காமெட் அம்சம் வழங்கப்பட்டுள்ளது.
புதிய ரியல்மி ஜிடி7 ப்ரோ (Realme GT7 Pro) சாதனத்தில் குளோபல் மேக்சிமம் பிரைட்னஸ் ஆக 2000 - 6000 நீட்ஸ் பீக் பிரைட்னஸை ரியல்மி வழங்கியுள்ளது. இந்த போனின் டிஸ்பிளே HDR 10+ சப்போர்ட் மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) ஆதரவையும் வழங்குகிறது. இதுமட்டுமின்றி, இந்த புதிய போனில் உலகத்தின் சிறந்த மற்றொரு அம்சத்தையும் ரியல்மி நிறுவனம் வழங்கியுள்ளது.
அது என்னவென்றால், ரியல்மி GT7 ப்ரோ போனில் நிறுவனம் உலகத்தின் முதல் நான்-போலரைஸ்ட்டு நேச்சுரல் லைட் கண் பாதுகாப்பு தொழில்நுட்ப அம்சத்தை (world's first non-polarized natural light eye protection technology) நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் டிஸ்பிளே ஸ்கிரீன் லைட் 0 போலரைசேஷன் ஆதரவை பெரும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
ரியல்மி ஜிடி7 ப்ரோ (Realme GT7 Pro):
இது அப்படியே, இயற்கையாக கிடைக்கும் ஒளியுடன் ஒப்பிடும் வகையில் கிடைப்பதனால், மற்ற ஸ்மார்ட்போன்களில் உள்ள டிஸ்பிளேவை விட உங்கள் கண்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் நிறுவனம் இந்த புதிய ரியல்மி GT7 ப்ரோ ஸ்மார்ட்போனில் குவால்காம் அல்ட்ராசோனிக் பிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் (Qualcomm ultrasonic fingerprint scanner) அம்சத்தையும் வழங்குகிறது.
இந்த புதிய ரியல்மி ஜிடி7 ப்ரோ (Realme GT7 Pro) ஸ்மார்ட்போன் சாதனம் பல புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை ஒரே போனில் பேக் செய்து அசத்தியுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் தொடர்ப்பன கூடுதல் விபரங்கள் வரும் நவம்பர் 4 ஆம் தேதி தெரிய வரும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








