Realme GT Neo2 ஸ்மார்ட்போனில் இப்படி மாடலும் அறிமுகமா? எப்போ இந்த போனை வாங்கலாம்?
ரியல்மி ஜிடி நியோ 2 (Realme GT Neo2) ஸ்மார்ட்போன் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த மிரட்டலான புதிய ஸ்மார்ட்போன் சாதனம் அதன் தலைமையில் ஸ்னாப்ட்ராகன் 870 சிப்செட் உடன் வெளியாக வாய்ப்புள்ளது என்று சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் இ 4 பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவுடன் வெளிவரும். இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் சக்தி கொண்ட பெரிய அளவு பேட்டரியை பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் கொண்டுவரும் என்று கூறப்படுகிறது.

புதிய ரயில்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் அறிமுகமா?
புதிய ரயில்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் சாதனத்தின் சில முக்கிய சிறப்பம்சங்களைப் பற்றிப் பார்க்கையில், இந்த சாதனம் 64 எம்பி டிரிபிள் கேமரா அமைப்பை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. நாங்கள் முன்பே சொன்னது போல் இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65W சார்ஜிங் ஆகியவற்றுடன் வரும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்றொருபுறம், நம்பகமான டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷனில் இருந்து வரும் சமீபத்திய தகவல்கள் இந்த சாதனம் AI டைமென்சிட்டி 1200 ஏஐ சிப் மூலம் இயக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
டைமன்சிட்டி 1200 பதிப்பில் சிறிய சைஸ் பேட்டரியா?
இதன் மூலம் ரியல்மி நிறுவனம், ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் மாடலில் டைமன்சிட்டி 1200 சிப்செட் மூலம் இயங்கும் ரியல்மி ஜிடி நியோ 2 சாதனம் சிறிய 4,500 எம்ஏஎச் பேட்டரியை பேக் செய்யும் என்றும் டிப்ஸ்டர் தெரிவித்துள்ளார். ஆனால், இது ஸ்னாப்டிராகன் பதிப்பில் வழங்கப்பட்டுள்ளது 65W பாஸ்ட் சார்ஜ் கொண்ட அதே வேகத்தை இதிலும் வழங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிரட்டலான டிஸ்பிளே விபரம்
கூடுதலாக, டைமன்சிட்டி 1200 மாறுபாட்டு 16 எம்பி செல்பி கேமராவை ஸ்மார்ட்போனின் இடது மேல் மூலையில் உள்ள ஒரு பஞ்ச் ஹோல் கேமராவை கொண்டிருக்கும் என்று லீக் தகவல் கூறுகிறது. ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் சாதனம் 6.43' இன்ச் கொண்ட எச்டி பிளஸ் 120 Hz ஓல்இடி டிஸ்பிளேவை ஆதரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஸ்னாப்ட்ராகன் சிப்செட் உடன் இயங்கும் ரியல்மி ஜிடி ஜியோ 2 ஸ்மார்ட்போன் சாதனமும் ஒரு 16 எம்பி செல்பி கேமெராவை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்னாப் டிராகன் மாடலின் இன்னும் பெரிய டிஸ்பிளேவா?
ஆனால், TENAA தகவல் வேறு ஒரு தகவலைச் சேர்த்துள்ளது, இந்த பதிப்பின் டிஸ்பிளே ஒரு பெரிய 6.62' எ;அளவை கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மூலத்தால் வெளிப்படுத்தப்பட்ட ஜிடி நியோ 2 இன் டைமென்சிட்டி பதிப்பின் மீதமுள்ள விவரக்குறிப்புகளில் 64 எம்பி டிரிபிள் கேமரா மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் ஆகியவையும் அடங்கும். இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ 2 ஸ்மார்ட்போன் 8.4 மிமீ தடிமன் உடன், 186 கிராம் எடையுடன் வெளிவரக்கூடும்.
இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை என்னவாக இருக்கும்?
இந்த புதிய ரியல்மி ஜிடி நியோ சாதனத்தின் விலை பற்றி பார்க்கையில், இந்த சாதனம் சீனாவில் CNY2,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாலர் மதிப்பின் படி பார்க்கையில் இந்த சாதனம் $ 310 மதிப்பில் வெளிவரும். இந்திய மதிப்பின் படி பார்க்கையில் இந்த சாதனம் ரூ. 22845 என்ற விலையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரியல்மி ஜிடி நியோ 2 சாதனத்தின் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட்டில் இயங்கும் மாடல் அடுத்த புதன்கிழமை அறிவிக்கப்படுமா அல்லது பின்னர் அறிவிக்கப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications