Home
News

சும்மா தக தகனு மின்னுறீங்க பாஸ்.. வேற லெவலில் டிசைன்.. Realme GT Neo 6 போனின் அம்சங்கள் லீக்!

ரியல்மி (Realme) ஸ்மார்ட்போன் பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ரியல்மி ஜிடி நியோ 6 (Realme GT Neo 6) போனின் பட்டையை கிளப்பும் அம்சங்கள் ட்விட்டரில லீக்காகிவிட்டன. ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட், 100W ஃபாஸ்ட் சார்ஜிங் என அம்சங்களில் பின்னி எடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், டிசைனில் அடுத்த லெவலில் இருக்கிறது. இதுகுறித்த விவரங்கள் இதோ.

ரியல்மி ஜிடி நியோ 6 லீக்கான அம்சங்கள்: 6.74 இன்ச் பிளாட் ஓஎல்டி (OLED) டிஸ்பிளே வருகிறது. அதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்கப்பட்டுள்ளது. 1.5K+ ரெசொலூஷன் (Resolution) கொண்டுள்ளது. ஆண்டிராய்டு 13 (Android 13) உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8 Gen 2 Chipset) வருகிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கிறது.

மின்னுறீங்க பாஸ்.. Realme GT Neo 6 போனின் பட்டாசான அம்சங்கள் லீக்!

ஆனால், பேட்டரியின் அளவு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. 50 எம்பி மெயின் கேமரா உள்ளது. அதில் சோனி சென்சார் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல, கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilisation) அம்சம் கொண்டுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் (China) வெளியான ரியல்மி ஜிடி நியோ 5 (Realme GT Neo 5) போனில் கொடுக்கப்பட்ட சில அம்சங்கள் ரியல்மி ஜிடி நியோ 6 போனிலும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகவே, அந்த போனின் அம்சங்களை தெரிந்துகொள்வோம். இந்த போன் 6.74 இன்ச் (2772 x 1240 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) உடன் வருகிறது. அதில் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.5K+ ரெசொலூஷன் இருக்கிறது. 16 ஜிபி ரேம் உடன் 1 டிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 5,000mAh பேட்டரி உடன் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 240W ஃபாஸ்ட் சார்ஜிங் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு வருகிறது.

இந்த ரியல்மி ஜிடி நியோ 5 போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 2 சிப்செட் (Qualcomm Snapdragon 8+ Gen 1 Chipset) உடன் வருகிறது. இந்த போனின் மெயின் கேமராவை பொறுத்தவரையில் டிரிபிள் செட்டப் உடன் வருகிறது. அதாவது, சோனி ஐஎம்எக்ஸ்890 (Sony IMX890) சென்சாருடன் கூடிய 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்சு (ultra-wide angle lens) + 2 எம்பி மேக்ரோ சென்சார் (macro sensor) உடன் வருகிறது. 16 எம்பி செல்பீ கேமரா சாம்சங் எஸ்5கே3பி9 (Samsung S5K3P9 sensor) சென்சாருடன் வருகிறது.

பிளாக் (Black), வொயிட் (White), பர்பிள் (Purple) ஆகிய மூன்று கலர்களில் கிடைக்கிறது. இந்த போனின் விலையை பொறுத்தவரையில், 240W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் கூடிய 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட வேரியண்ட் ரூ. 38,750-க்கு விற்பனையாகிறது. அதேபோல 150W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உடன் கூடிய 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட வேரியண்ட் ரூ. 31,500-க்கு விற்பனையாகிறது.

இந்த போனின் பெரும்பாலான அம்சங்கள் ரியல்மி ஜிடி நியோ 6 போனிலும் இருக்க வாய்ப்புள்ளது. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT Neo 6 specifications and photos leaked its reveals 144Hz display, Snapdragon 8 Gen 2 SoC here is full details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X