எதிர்பார்ப்பில் கல்லை தூக்கி போட்ட Realme.. பிளாக்ஷிப் போன் பேரையே மாத்திட்டாங்களா? என்னப்பா இதுலாம்?
ரியல்மி (Realme) நிறுவனம், அதன் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. ஆனால், இதில் சில குளறுபடியும், குழப்பமும் இப்போது எழுந்துள்ளது. இதனால், ரசிகர்களுக்கு சில குழப்பங்கள் உருவாகியுள்ளது.
ரியல்மி நிறுவனம், அதன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சாதனத்தை ரியல்மி ஜிடி நியோ 6 (Realme GT Neo) மற்றும் ரியல்மி ஜிடி நியோ 6 ப்ரோ (Realme GT Neo 6 Pro) என்ற பெயர்களில் அறிமுகம் செய்யுமென்று இதுவரை கூறப்பட்டு வந்தது. ஆனால், சமீபத்திய லீக் தகவல் வேறு மாதிரியாக சில தகவலை வெளியிட்டுள்ளது.

சமீப காலம் வரை, ரியல்மி பிராண்ட் சீனாவில் Realme GT Neo 6 மற்றும் Realme Neo 6 Pro போன்களை வெளியிடும் என்று நம்பப்பட்டது. இவற்றில் ஒன்று Snapdragon 8 Gen 2 சிப்செட் உடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. இருப்பினும், சமீபத்திய லீக் தகவல் நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் Realme GT 5 ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆன்லீக்ஸ் (OnLeaks) தகவலின் படி, ரியல்மி ஜிடி நியோ 6 சாதனத்தை நிறுவனம் 'ரியல்மி ஜிடி 5 (Realme GT 5)' ஆக உலகளவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்குப் பின்னால் உள்ள காரணம் தெளிவாக இல்லை என்றாலும். மற்றொரு டிப்ஸ்டர் ஆனா டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (DigitalChatStation), Realme இன் அடுத்த ஃபிளாக்ஷிப் Realme GT 5 என்று அழைக்கப்படும் என்று கூறியுள்ளது.
இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Snapdragon 8 Gen 2) சிப்செட் உடன் வரும் என்று கூறியுள்ளது. மறுபுறம், Realme GT 5 Pro செயல்பாட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 (Snapdragon 8 Gen 3) சிப்செட்டைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது இந்த ஆண்டின் பிற்பகுதியில் அறிமுகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Realme GT 5 ஆகஸ்ட் மாதம் சீனாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் சிறப்பம்சம் பற்றி பேசுகையில், இது 6.74' இன்ச் 1.5K OLED டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இது 144Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் செல்ஃபி ஸ்னாப்பருக்கான பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது அட்ரினோ ஜிபியு (Adreno GPU) உடன் இணைக்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 (Qualcomm Snapdragon 8 Gen 2) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16 ஜிபி LPDDR5x ரேம் மற்றும் 1TB UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வரும். இது ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI ஸ்கின் உடன் வெளிவரும்.
Realme GT 5 ஆனது OIS உடன் 50MP சோனி IMX890 பிரைமரி கேமரா சென்சார், 8MP செகண்டரி லென்ஸ் மற்றும் 2MP மூன்றாவது கேமரா யூனிட் ஆகியவற்றைப் பெறும். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு முன்புறத்தில் இது 16MP ஷூட்டரை கொண்டிருக்கும். இது 240W சார்ஜிங் கொண்ட 4,600mAh பேட்டரியை பேக் செய்யும்.
அதேபோல், இந்த சாதனம் 5,200mAh பேட்டரி மற்றும் 150W சார்ஜிங் கொண்ட மற்றொரு வேரியண்ட் மாடலுடனும் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை பற்றி பேசுகையில், இந்த சாதனத்தின் நார்மல் வேரியன்ட் மாடல் ரூ.35,000 விலை முதல் ரூ.39,999 என்ற விலை புள்ளிக்குள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








