Home
News

நச்சுனு அம்சத்துடன் Realme GT Neo 5 SE ஸ்மார்ட்போன் ரெடி! விலை என்ன தெரியுமா?

Realme GT Neo 5 SE வெளியீடு அருகில் நெருங்கி வந்துகொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் சில முக்கியமான விவரக்குறிப்புகள் இணையத்தில் லீக் ஆகிய பிறகு, இப்போது இந்த சாதனம் கீக்பெஞ்சில் காணப்பட்டுள்ளது.

Gizmochina அறிக்கையின் படி, Realme GT Neo 5 SE ஸ்மார்ட்போன் சாதனம் RMX3700 மாடல் எண்ணைக் கொண்ட ஒரு அறிவிக்கப்படாத Realme ஸ்மார்ட்போனாக கீக்பெஞ்சில் காணப்பட்டுள்ளது. இந்த சாதனமானது Realme GT Neo 5 SE அல்லது Realme Neo 5 Lite என நம்பப்படுகிறது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme GT Neo 5 இன் மலிவு பதிப்பாகும்.

நச்சுனு அம்சத்துடன் Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் ரெடி! விலை என்ன?

Realme GT Neo 5 SE ஸ்மார்ட்போன் விபரம் லீக்.!

இந்த ஸ்மார்ட் போனின் சில முக்கிய விவரக்குறிப்புகளை பaட்டியல் உறுதிப்படுத்துகிறது. அதைப் பற்றி இப்போது பார்க்கலாம் வாங்க. Geekbench பட்டியலின் படி, Realme GT Neo 5 SE ஆனது சமீபத்திய ஆண்ட்ராய்டு 13 அவுட் ஆஃப் தி பாக்ஸில் இயங்கும் என்பதை குறிப்பிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் சிப்செட்டைக் கொண்டுள்ளது.

இது 2.92 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்திலும், மூன்று இரண்டாம் நிலை கோர்கள் 2.50 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்திலும் இயங்குகிறது. இது நான்கு பவர்-சேமிங் கோர்கள் 1.80 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்திலும் உள்ளன. இது 8GB RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இது TensorFlow Lite NNAPI இன்டர்ஃபேஸ் சோதனையில் சாதனம் 390 மதிப்பெண் பெற உதவுகிறது.

பட்டியல் சிப்செட் பெயரை வெளிப்படுத்தவில்லை என்றாலும், இது Snapdragon 7+ Gen 1 SoC உடன் வருமென்று அறிக்கை கூறுகிறது. அப்படியானால், Snapdragon 7+ Gen 1 SoC உடன் புதிய Realme GT Neo 5 SE போன் வெளிவருவது இப்போது கணிக்கப்பட்டுள்ளது. முந்தைய அறிக்கை Realme GT Neo 5 SE சாதனம் 2772 x 1240p தீர்மானம் கொண்ட 6.74' இன்ச் கொண்ட பிளாட் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது144Hz இன் ரெஃப்ரஷ் ரேட் உடன் 2160Hz PWM உடன் வருகிறது.

Realme GT Neo 5 SE டிஸ்பிளே மற்றும் பேட்டரி விபரம்

இந்த Realme GT Neo 5 SE ஸ்மார்ட் போனின் டிஸ்பிளே 1,100 nits பீக் பிரைட்னஸ் ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும் என்று அந்த அறிக்கை தகவல் வெளிப்படுத்தியது. Realme GT Neo 5 SE ஸ்மார்ட்போனின் கேமரா அம்சம் பற்றி பேசுகையில், இதன் முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்பிற்கான 16 MP சென்சார் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

இந்த Realme GT Neo 5 SE போனின் பின்புறம், 64 எம்பி ஓம்னிவிஷன் பிரைமரி சென்சார், 8 எம்பி சோனி IMX355 அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2 எம்பி சென்சார் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா யூனிட்டை பேக் செய்கிறது. இந்த போன் 100W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரியை பேக் செய்ய வாய்ப்புள்ளது என்று கீக்பெஞ்ச் தகவல் குறிப்பிடுகிறது.

Realme GT Neo 5 SE விலை என்ன?

Realme GT Neo 5 SE ஸ்மார்ட் போனின் விலை பற்றி பேசுகையில், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் இந்த சாதனம் ரூ. 26,990 விலையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT Neo 5 smartphone ready with best feature spotted in Geekbench
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X