தம்பி ரேஸ் விடலாமா? Samsung, OnePlus, Oppo-வை சீண்டி பார்க்கும் Realme.! காரணம் இது தான்.!
ஸ்மார்ட்போன் சந்தையில் முக்கியமான தலைசிறந்த பிராண்ட்கள் போட்டியிட்டுக் கொண்டிருந்த வேளையில், கத்துக் குட்டியாகக் களமிறங்கிய நிறுவனம் தான் Realme. பெரிய முன்னணி நிறுவனங்கள் மிரட்டலான சாதனங்களை அறிமுகம் செய்த போது, ரியல்மி நிறுவனமும் குறைந்த விலையில் பல போன்களை அறிமுகம் செய்தது.
மற்ற நிறுவனங்களின் பார்வையில், ரியல்மி ஒரு கோமாளி போலத் தெரிந்தது. 'தம்பி யாருப்பா நீ ஓரம்போ' என்று பல நிறுவனங்கள் இந்த Realme பிராண்டை பின்னுக்குத் தள்ளின என்பதே உண்மை. யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வந்தே ஆகணும் தானே.! அப்படியான காலம் தான் இப்போது ரியல்மி-க்கு வந்துவிட்டது. தம்பி ஓரம்போ என்று கூறிய நிறுவனங்களை எல்லாம், ஒரே ஓரு போன் மூலம் ரியல்மி இப்போது ஓவர் டேக் செய்துவிட்டது.

Samsung, OnePlus, Oppo-வை பேக்கில் ஓடாவிட்ட சின்ன தம்பி Realme.!
சியோமி ரெட்மி டிஸ்கவரி எடிஷன் (Xiaomi Redmi Note 12 Discovery Edition) சாதனம் 210W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வந்தது. அதே நேரத்தில் OnePlus மற்றும் Oppo ஆகிய 2 பிராண்ட்களும் தங்களின் 150W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தைக் காட்சிப்படுத்தின. இப்போது, Realme நிறுவனம் இவர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி, அதன் வரவிருக்கும் Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் மூலம் மற்ற பிராண்ட்களை வாயில் விறல் வைக்கச் செய்துவிட்டது.
காரணம் என்னவென்றால், ரியல்மி நிறுவனம் அதன் வரவிருக்கும் புதிய Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் சாதனத்தில் '240W ஃபாஸ்ட் சார்ஜிங்' ஆதரவைக் கொண்டுவருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. முதலில் இந்த சாதனம், பிப்ரவரி 27 அல்லது மார்ச் 2 ஆம் தேதிக்கு இடையில் பார்சிலோனாவில் திட்டமிடப்பட்ட MWC 2023 இல் வெளியிடப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், நிறுவனம் உண்மையில் வேறு ஒரு பிளானை வைத்துள்ளது போலத் தெரிகிறது.

சும்மா ஒன்னும் இல்லை.. 240W ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது Realme GT Neo 5.!
சமீபத்தில், வெளியான அதிகாரப்பூர்வ தகவலின் படி, வரவிருக்கும் புதிய Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் பிப்ரவரி 9ம் தேதி 2 மணி அளவில் சீனாவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் டீஸ் செய்துள்ளது. இந்த டீசரில் நிறுவனம் அதன் Realme GT Neo 5 ஸ்மார்ட்போனில் 240W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை அறிமுகம் செய்வதும் உறுதியாகியுள்ளது. இதைத் தவிர வேறெந்த தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை.
ஆனால், டெக் வட்டார தகவலின் படி, Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் 240W மற்றும் 150W என்று இரண்டு வேரியண்ட் மாடல்களில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது என்று சில தகவல்கள் வெளியாகி வருகிறது. இதைத் தவிர, இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 8+ Gen1 சிப்செட் உடன் 16GB ரேம் கொண்ட மாடலாக வெளிவரும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்த டிவைஸ் Android 13-அடிப்படையிலான Realme UI 4.0 ஸ்கின் மூலம் இயங்குவதாக TEENA தகவல் குறிப்பிடுகிறது.
Realme GT Neo 5 ஸ்மார்ட்போன் ஆனது சிங்கிள்-கோர் சோதனையில் 1279 புள்ளிகளையும், மல்டி-கோர் சுற்றில் 3902 புள்ளிகளையும் பெற முடிந்தது என்று சமீபத்திய ரேட்டிங் தகவல்கள் குறிப்பிடுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இனி ரியல்மி போன் பயனர்கள் உங்களிடம் ரேஸ் விடலாமா? வரியா? என்று கேட்டால் நாசுக்காக பேக் அடித்துவிடுங்கள். இன்றைய தேதியில் இந்த போனிற்கு நிகரான பாஸ்ட் சார்ஜிங் எந்த போனிலும் இல்லையே என்பதே இதற்குக் காரணம்.


Click it and Unblock the Notifications








