Just In
- 8 hrs ago
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- 12 hrs ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 1 day ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- 1 day ago
சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!
Don't Miss
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Finance
ரூ50 கோடி வீடு,ஆடி கார் என பல..கே.எல்.ராகுல் அதியா ஷெட்டிக்கு குவிந்த பரிசுகளுக்கு வரி செலுத்தணுமா?
- News
"அது வேற வாய்!" ஷாருக்கின் பதான் படத்திற்கு தடை கேட்டு கொந்தளித்த பாஜக அமைச்சர்! இப்போ என்ன சொன்னார்
- Movies
சர்வானந்த் நிச்சயதார்த்தத்தில் ஜோடியாக பங்கேற்ற சித்தார்த் - அதிதி ராவ்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
Realme யூஸர்களுக்கு குட் நியூஸ்: இந்த ஸ்மார்ட்போன் கையில் இருந்தா உடனே இதை பண்ணுங்க!
Realme GT Neo 3T மற்றும் Realme Narzo 50 Pro ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4.0 அப்டேட்டை பெறுகிறது. இரண்டு போன்களிலும் சமீபத்திய அப்டேட் மூலம் புதிய வடிவமைப்பு தீம்கள், தனிப்பயனாக்குதல் அம்சங்கள் மற்றும் மேம்பட்ட செயல்திறன், பாதுகாப்பு இணைப்புகள், ஃபார்ம்வேர் பதிப்பு என பல ஆதரவுகளை பெறுகிறது.
Realme GT Neo 3T மற்றும் Realme Narzo 50 Pro ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, Realme UI 4.0 அப்டேட் ஆனது முறையே RMX3371_11.A.09 மற்றும் RMX3395_11.C.04 ஆகிய ஃபார்ம்வேர் பதிப்பைக் கொண்டிருக்கிறது. இரண்டு ஸ்மார்ட்போன்களுக்கும் நிறுவனம் அப்டேட்டை வழங்கத் தொடங்கிவிட்டது. இந்த அப்டேட் அனைத்து பயனர்களுக்கும் படிப்படியாக கிடைக்கும்.

இதுகுறித்த தகவல் ரியல்மி இன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. Realme UI 4.0 அப்டேட் ஆனது தற்போது Realme GT Neo 3T மற்றும் Realme Narzo 50 Pro ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் 15 சதவீத பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. அனைவருக்கும் விரைவில் கிடைக்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Realme UI 4.0 அப்டேட்
ஆண்ட்ராய்டு 13-அடிப்படையிலான Realme UI 4.0 அப்டேட்டில் பல மேம்பாடுகள் கிடைக்கிறது. இதில் அக்வாமார்பிக் டிசைன் தீம், ஹோம் ஸ்க்ரீனில் கடிகார விட்ஜெட், மீடியா ப்ளேபேக் கட்டுப்பாடு உள்ளிட்ட பல ஆதரவுகள் வழங்கப்படுகிறது. அதேபோல் இந்த அப்டேட் ஆனது செயல்திறன், UI அனிமேஷன்கள், சிஸ்டம் வேகம், நிலைப்புத்தன்மை மற்றும் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் உள்ளிட்டவைகளின் நிலைகளை மேம்படுத்தி வழங்குகிறது.
ஆண்ட்ராய்டு 13 அப்டேட்
உங்கள் மொபைல் செட்டிங்க்ஸ் பயன்பாட்டுக்குள் சென்று ஆண்ட்ராய்டு 13 அப்டேட் இருக்கிறதா இல்லையா என்பதை சரி பார்த்துக் கொள்ளலாம். செட்டிங்ஸ் பயன்பாட்டுக்குள் சென்று, மென்பொருள் அப்டேட் தேர்வுக்குள் சென்றால் அப்டேட் இருக்கிறதா இல்லையா என்பது காட்டப்படும். அப்டேட் இருக்கும் பட்சத்தில் அதை உடனே செய்து கொள்ளலாம். ஆண்ட்ராய்டு 13 அப்டேட் இன்ஸ்டால் செய்த உடன் முதன்முறையாக மொபைல் ஆன் செய்யும் போது பூட் ஆக அதிக நேரம் எடுக்கும் என ரியல்மி குறிப்பிட்டிருக்கிறது.
ரியல்மி ஜிடி நியோ 3டி அம்சங்கள்
ரியல்மி ஜிடி நியோ 3டி, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.62-இன்ச் அளவிலான Full-HD+ (1,080x2,400 பிக்சல்ஸ்) E4 AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்ப்ளே 1,300 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸை வழங்குகிறது மற்றும் HDR10+ ஆதரவை கொண்டிருக்கிறது.

ஸ்னாப்டிராகன் 870 SoC
Realme நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 SoC உடன் 8GB வரையிலான LPDDR4x RAM உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டைனமிக் ரேம் எக்ஸ்பான்ஷன் டெக்னாலஜி (Dynamic RAM Expansion Technology) ஆதரவைக் கொண்டிருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3டி ஸ்மார்ட்போனில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் வேப்பர் கூலிங் சிஸ்டம் பிளஸ் (Stainless Steel Vapor Cooling System Plus) உள்ளது. இது வெப்பத்தை திறம்படச் சிதறடிக்க, டயமண்ட் தெர்மல் ஜெல்லுடன் (Diamond thermal gel) கூடிய எட்டு குளிரூட்டும் அடுக்குகளை (Cooling layers) கொண்டுள்ளது.
ட்ரிபிள் ரியர் கேமரா
ரியல்மி GT நியோ 3T ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போனில் 64எம்பி மெயின் கேமரா + 119 டிகிரி ஃபீல்ட் ஆஃப் வியூ உடனான 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா உள்ளது. முன்பக்கத்தில், 16-மெகாபிக்சல் செல்பி கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 80W SuperDart சார்ஜிங் ஆதரவுடனான 5,000mAh பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470