அதுக்குள்ள அட்டகாச தள்ளுபடி: சமீபத்திய ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனுக்கு ரூ.7000 வரை தள்ளுபடி!
ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது இந்தியாவில் சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் ரியல்மி ஜிடி நியோ 3 இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு மாறுபாடானது 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 150 வாட்ஸ் அல்ட்ரா டார் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. அதேபோல் இரண்டாவது வேரியண்டான ரியல்மி ஜிடி நியோ 3 ஆனது 80 வாட்ஸ் சூப்பர்டார்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த மாறுபாடுகளை ரூ.7000 என்ற தள்ளுபடி விலையில் வாங்கலாம். அதற்கான வழிமுறைகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் விலை மற்றும் சலுகைகள்
ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனின் பிளிப்கார்ட் விலை பிரதிபலிப்பு குறித்து பார்க்கையில், ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனின் 80 வாட்ஸ் அம்சம் கொண்ட 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.36999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.38999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் 150 வாட்ஸ் மாறுபாடு கொண்ட 12 ஜிபி ரேம் மற்றும் 256 உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.42,999 என நிர்ணயிக்கப்பட்டிருகக்கிறது.

ரூ.7000 வரை தள்ளுபடி விலை
ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனை ரியல்மியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ரூ.7000 என்ற தள்ளுபடி விலையில் வாங்கலாம். ஐசிஐசிஐ வங்கி கார்டுகள் பயன்படுத்தி இந்த சாதனம் வாங்கும் போது இந்த தள்ளுபடி கிடைக்கும். ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடல் ரூ.29,999 என வாங்கலாம், அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மாடலை ரூ.31,999 என வாங்கலாம். 150 வாட்ஸ் வேரியண்ட் மாடலானது ரூ.35,999 என்ற விலையில் கிடைக்கிறது.

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனுக்கு குறிப்பிட்ட சலுகை
பிளிப்கார்ட் மூலம் ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு என குறிப்பிட்ட சலுகைகளும் கிடைக்கின்றன. பிளிப்கார்ட் தளத்தின் மூலம் ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனை எஸ்பிஐ கார்டு மூலம் வாங்கும் போது உடனடி தள்ளுபடியாக ரூ.7000 கிடைக்கிறது. பிளிப்கார்ட் ஆக்சிஸ் பேண்ட் கார்ட் பயனர்களுக்கு 5% கேஷ்பேக் சலுகையும் வழங்கப்படுகிறது. ரியல்மி ஜிடி நியோ3 ஸ்மார்ட்போனானது மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அது நைட்ரோ ப்ளூ, அஸ்பால்ட் ப்ளாக் மற்றும் ஸ்பிரிண்ட் ஒயிட் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ரியல்மி ஜிடி நியோ 3 சிறப்பம்சங்கள்
ரியல்மி ஜிடி நியோ 3 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது டூயல் நானோ சிம், ஆண்ட்ராய்டு 12 இல் ரியல்மி யூஐ 3.0 உடன் இயங்குகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,412 பிக்சல்கள்) தீர்மானத்தை இந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. மேலும் இந்த சாதனத்தில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் 1000 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது எச்டிஆர் 10+ மற்றும் டிசி டிம்மிங் ஆதரவைக் கொண்டுள்ளது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 5ஜி எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் 12 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனில் படம் மென்மையை மேம்படுத்த பிரத்யேக டிஸ்ப்ளே செயலி இருக்கிறது, இது குறைந்த மின் நுகர்வு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வெப்பச் சிதறலைக் கட்டுப்படுத்த இதில் துருப்பிடிக்காத ஸ்டீல் நீராவி குளிரூட்டும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்
ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனில் கேமரா அம்சங்களை மேம்படுத்த இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (ஓஐஎஸ்) மர்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவோடு வருகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 முதன்மை கேமரா உள்ளிட்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. பிற இரண்டு கேமரா ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இது 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என இந்த சாதனத்தில் 16 எம்பி சாம்சங் எஸ்5கே3பி9 கேமரா முன்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications