150 வாட்ஸ் மின்னல் வேக சார்ஜிங், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே: வந்தது ரியல்மி ஜிடி நியோ 3- விலை என்ன தெரியுமா?
ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் 12 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, தொழில்துறையின் முதல் 150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன்
ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, தொழில்துறையின் முதல் 150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி ஜிடி நியோ 3 சாதனமானது சீனாவில் இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.24,000 என்ற விலை மதிப்பில் தொடங்கப்பட்டிருக்கிறது.

150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
ரியல்மி ஜிடி நியோ 3 சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரியல்மி நிறுவனம் சமீபத்தில் கேமிங் ஃபோகஸ் செய்யப்பட்ட ஸ்மார்ட்போனை 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் அறிவித்தது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 8100 5ஜி எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது இரண்டு வெவ்வேறு பேட்டரி திறன்களுடன் இரண்டு வேரியண்ட்களில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு 150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு 80 ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12 ஜிபி ரேம் மற்றும் அதிகப்பட்ச 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பிசோனி ஐஎம்எக்ஸ் 766 முதன்மை சென்சார் உள்ளிட்ட மூன்று பின்புற கேமரா ஆதரவோடு வருகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 சாதனத்தின் பிற முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது டால்பி அட்மாஸ் உடன் ஸ்பீக்கர்கள் மற்றும் 150 வாட்ஸ் அல்ட்ரா டார்ட் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது டைமண்ட் ஐஸ் கோர் கூலிங் ப்ளஸ் அம்சத்தோடு வருகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போனானது 39,606 மிமீ சதுரத்தின் மொத்த வெப்பச் சிதறல் பகுதியையும், வெப்ப மேலாண்மைக்காக 4,129 மிமீ சதுர 3D டெம்பர்டு வேப்பர் சேம்பர் குளிரூட்டும் பகுதியையும் கொண்டிருக்கிறது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்
ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாடல் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு தோராயமாக ரூ.24000 ஆக இருக்கிறது. இந்த சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.27,500 ஆக இருக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய விலை மதிப்புப்படி தோராயமாக ரூ.31,200 ஆக இருக்கிறது.

மார்ச் 30 முதல் விற்பனை
ரியல்மி ஜிடி நியோ 3 சாதனத்தின் 150 வாட்ஸ் மாறுபாட்டின் விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மற்றும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. இதன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.33,600 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது சைக்ளோனஸ் பிளாக், சில்வர் ஸ்டோன் மற்றும் லீ மான்ஸ் வண்ண விருப்பங்களில் வருகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 சாதனத்தின் அனைத்து வேரியண்ட்களும் மார்ச் 30 முதல் அதன் சொந்த நாட்டில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. சீனாவை தவிர பிற சந்தைகளில் ரியல்மி ஜிடி நியோ 3 சாதனம் கிடைக்கும் தன்மை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

ரியல்மி ஜிடி நியோ 3 சிறப்பம்சங்கள்
ரியல்மி ஜிடி நியோ 3 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது இரட்டை சிம் (நானோ) ஆதரவோடு வருகிறது. அதேபோல் ரியல்மி ஜிடி நியோ 3 சாதனமானது ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு ரியல்மி யூஐ 3.0 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதக் காட்சியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் 2கே டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே எச்டிஆர்10+ மற்றும் டிசி டிம்மிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 1000 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஹூட்டின் கீழ் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 5ஜி எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது.

கேமிங் ஆர்வலர்களுக்கு என பிரத்யேக அம்சம்
ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ வசதிகளுக்கு என எல்இடி ஃப்ளாஷ் உடனான மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. கேமரா அமைப்பு ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் (OIS) மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ்766 ஆதரவோடு வருகிறது. மேலும் இதில் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் மேக்ரோ ஷூட்டர் ஆதரவோடு வருகிறது. புதிய ஸ்மார்ட்போனானது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் மற்றும் யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆதரவோடு வருகிறது. ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 சாதனத்தில் 150 வாட்ஸ் அல்ட்ரா டார்ட் சார்ஜிங் ஆதரவோடு 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இந்த சாதனத்தில் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தைக் கொண்டிருக்கிறது. எம்டபிள்யூசி 2022 நிகழ்வில் ரியல்மி காட்சிப்படுத்திய 150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தோடு இந்த சாதனம் வந்திருக்கிறது. இந்த 150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தின் மூலம் வெறும் 5 நிமிடத்தில் 50 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும். 80 வாட்ஸ் வூக் சார்ஜிங் மூலம் 32 நிமிடத்தில் முழுமையாக சார்ஜ் செய்யலாம் என கூறப்படுகிறது. அதேபோல் ரியல்மி ஜிடி நியோ 3 சாதனத்தில் கேமிங் ஆர்வலர்களுக்கு என எக்ஸ் ஆக்சிஸ் லீனியர் மோட்டாரின் ஆதரவோடு 4டி கேம் அதிர்வு அம்சம் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications