Home
News

ஜோடி போடுவோமா ஜோடி., 150-க்கு 150: 150W அல்ட்ராடார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் ரியல்மி ஜிடி நியோ3- 12ஜிபி ரேம்!

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது டைமன்சிட்டி 8100 எஸ்ஓசி, 150 வாட்ஸ் அல்ட்ரா டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது இந்தியாவில் ஆரம்ப விலை ரூ.36,999 என விற்பனைக்கு கிடைக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது ஆஸ்பால்ட் பிளாக், நைட்ரோ ப்ளூ மற்றும் ஸ்பிரின்ட் வைட் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன்

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன்

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் இன்று (ஏப்ரல் 29) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கேமிங் ஃபோகஸ்ட் ஜிடி நியோ ஸ்மார்ட்போன் வரிசையில் தற்போது ரியல்மி ஜிடி நியோ 3 இணைக்கப்பட்டிருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 8100 5ஜி எஸ்ஓசி ஆதரவோடு இயக்கப்படுகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது 50 எம்பி டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் பொருத்தப்பட்டிருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் 6.7 இன்ச் 2கே டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் கடந்த மாதம் சீனாவில் அறிமுகமானது. இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது. அது 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 150வாட்ஸ் அல்ட்ராடார்ட் சார்ஜிங், 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் சூப்பர் டார்ட் சார்ஜிங் வசதியுடன் வருகிறது.

ரியல்மி ஜிடி நியோ 3 இந்தியா விலை மற்றும் கிடைக்கும் தன்மை

ரியல்மி ஜிடி நியோ 3 இந்தியா விலை மற்றும் கிடைக்கும் தன்மை

ரியல்மி ஜிடி நியோ 3 இந்தியாவில் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரிண்ட், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் என கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.36,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.38,999 எனவும் கிடைக்கிறது. அதேபோல் ரியல்மி ஜிடி நியோ 3 சாதனத்தின் 150 வாட்ஸ் மாடல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.42,999 என கிடைக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது அஸ்பால்ட் பிளாக், நைட்ரோ ப்ளூ மற்றும் ஸ்பிரின்ட் வைட் வண்ண விருப்பங்களில் கிடைக்கும். அதேபோல் ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது ரியல்மி.காம், பிளிப்கார்ட் மற்றும் ரீடெயில் ஸ்டோர்கள் வழியாக மே 4 ஆம் தேதி விற்பனைக்கு கிடைக்கும் என ரியல்மி குறிப்பிட்டிருக்கிறது.

ரியல்மி ஜிடி நியோ 3 சிறப்பம்சங்கள்

ரியல்மி ஜிடி நியோ 3 சிறப்பம்சங்கள்

ரியல்மி ஜிடி நியோ 3 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது டூயல் நானோ சிம், ஆண்ட்ராய்டு 12 இல் ரியல்மி யூஐ 3.0 உடன் இயங்குகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,412 பிக்சல்கள்) தீர்மானத்தை இந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. மேலும் இந்த சாதனத்தில் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் 1000 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது எச்டிஆர் 10+ மற்றும் டிசி டிம்மிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 5ஜி எஸ்ஓசி ஆதரவு

ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 5ஜி எஸ்ஓசி ஆதரவு

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8100 5ஜி எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் 12 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டிருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனில் படம் மென்மையை மேம்படுத்த பிரத்யேக டிஸ்ப்ளே செயலி இருக்கிறது, இது குறைந்த மின் நுகர்வு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வெப்பச் சிதறலைக் கட்டுப்படுத்த இதில் துருப்பிடிக்காத ஸ்டீல் நீராவி குளிரூட்டும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கிறது.

50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 முதன்மை கேமரா

50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 முதன்மை கேமரா

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனில் கேமரா அம்சங்களை மேம்படுத்த இது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (ஓஐஎஸ்) மர்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆதரவோடு வருகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனானது 50 எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 முதன்மை கேமரா உள்ளிட்ட டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. பிற இரண்டு கேமரா ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இது 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனில் செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என இந்த சாதனத்தில் 16 எம்பி சாம்சங் எஸ்5கே3பி9 கேமரா முன்புறத்தில் பொருத்தப்பட்டிருக்கிறது.

இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி

இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி

ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனில் 256 ஜிபி வரை உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவோடு வருகிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3 ஸ்மார்ட்போனில் டால்பி அட்மாஸ் ஆடியோ ஆதரவுடன் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கின்றன.

150 அல்ட்ராடார்ட் சார்ஜிங் ஆதரவு

150 அல்ட்ராடார்ட் சார்ஜிங் ஆதரவு

ரியல்மி ஜிடி நியோ 3 சாதனமானது இரண்டு பேட்டரி மற்றும் சார்ஜிங் அளவுகளுடன் கிடைக்கிறது. ரியல்மி ஜிடி நியோ 3 மாடலில் ஒன்று 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 150 அல்ட்ராடார்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. மற்றொரு மாடல் 80 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. 150 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் மூலம் 5 நிமிட சார்ஜிங்கில் பேட்டரியை 50 சதவீதம் வரை சார்ஜ் செய்யலாம் என கூறப்படுகிறது. அதேபோல் 80 வாட்ஸ் சூப்பர்டார்ட் சார்ஜிங் சாதனத்தை 32 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்யும் என ரியல்மி குறிப்பிட்டிருக்கிறது.

150 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

150 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் ஒன்பிளஸ் 10ஆர் 5ஜி ஸ்மார்ட்போனை 150 வாட்ஸ் எண்டூரன்ஸ் பதிப்பு, 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங், டைமன்சிட்டி 8100 மேக்ஸ் எஸ்ஓசி வசதியோடு இந்தியாவில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒன்பிளஸ் நிறுவனம் 150 வாட்ஸ் சார்ஜிங் வசதியோடு சாதனத்தை அறிமுகம் செய்திருக்கிறது. 150 வாட்ஸ் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய எண்டூரன்ஸ் பதிப்பு, மற்றொன்று 80 வாட்ஸ் சூப்பர்வூக் சார்ஜிங் ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Realme GT Neo 3 Launched in India With 150W Ultradart Fast Charging, 50MP Triple Camera: Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X